Posts

Showing posts from January, 2023

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 3

மேகலா  : உறவுகளின் அருமையே தெரியாதவர்கள்…. உலக மக்களோடு தொடர்பு கொள்கிறார்கள்…..!   ‘Phone-ஏ உலகம்’ என்று மணிக்கணக்கில் அதனோடேயே மல்லுக்கட்டுவது மட்டும் சரி என்கிறாயா….  அது மட்டுமல்ல கிருஷ்ணா…, பிள்ளைகள் வெளியில் சென்று விளையாடுவது என்பதே கிடையாது. அந்தக் காலங்களில், சின்னப் பிள்ளைங்க ஓடிப் பிடித்து விளையாடுதல், ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு என்று வீட்டிற்கு வெளியே விளையாடச் செல்வதும், விளையாடும் போது, முகமெல்லாம் வியர்த்தும், உடம்பெல்லாம் அழுக்கேறிப் போவதும், சகஜமான ஒன்று… இன்று சின்னப்புள்ளைகளுக்கு வியர்ப்பது என்பதே கிடையாது…..   கல்லிலும், மண்ணிலும் புரண்டு விளையாடுவதை, ‘சின்னப் பிள்ளைகளே வேண்டாம்’, அம்மாமர்களே அனுமதிப்பது கிடையாது.   எப்பவும், video games விளையாடணும்…. இல்லையா…., cartoon படம் பார்க்கணும்…., அப்பத்தான் சாப்பாடே சாப்பிடுவார்கள்…. நீ என்னதான் சொல்லு கிருஷ்ணா…   சின்னப் பிள்ளைகள் உலகம் கூட, அந்தக் காலம் தான் பொற்காலம்…. கிருஷ்ணர்  : ஏன் இப்பவும், பிள்ளைகள் ground-க்குப் போய் கிரிக்கெட் விளையாடுவதில்லையா… அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களே…., மால

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 2

மேகலா   : ஒரு வகையில் அது உண்மைதானே கிருஷ்ணா…. கூப்பிடு தூர இடத்திற்கு நடந்து செல்வது எப்படி….? வாகனத்தில் செல்வது எப்படி….? Doctors மெனக்கெட்டு, தினமும் 1/2 மணி நேரம் walking போங்க… என்று இன்றைக்கு சொல்லப்படாத மனுஷங்களே கிடையாது.   நாம் நடப்பதற்கு doctors advice பண்ண வேண்டியிருக்கு…. கிருஷ்ணர்  : அன்றைக்கு, தூரம் காரணமாக 1 வாரம் இழுத்தடிக்கும் வேலையை இன்றைக்கு ரெண்டே நாளில் முடிச்சிருவாங்கல்ல. மனுஷங்களுக்கு time consume ஆகுதுல…  பணப் புழக்கம் அதிகரிக்கும் வித்தையைத் தெரிந்து கொண்டானல்லவா… அப்போ…., வேகமாகச் செல்லுதல் என்பது முக்கியம் அல்லவா…. மேகலா  : வேகம்…, வேகம்…, என்று பேசுபவர்கள், ஆரோக்கியத்தைப் பற்றியே யோசிப்பதேயில்லையே கிருஷ்ணா…. Walking மட்டுமல்ல கிருஷ்ணா… அந்தக் காலத்துல தானியத்தை powder பண்ணுவதற்கு உரலில் இடிப்பாங்க… அதனால், தோள்பட்டை, கைகள் இவைகளுக்கு exercise இருந்தது…, உண்ட சோறும் செரித்தது. இன்று உடனே mixie-யில் போட்டு powder பண்ணி, பலகாரம் செய்து சாப்பிடுவதால், உடம்பின் பாகங்களுக்கு exercise-ம் இல்லை…, extra சாப்பிடுவதால்…, fat-ம் சேர்கிறது.  இது மாதிரி kitchen உபகரணங்கள

அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 1

கிருஷ்ணர்   : என்ன மேகலா…. உன் சத்தத்தையே கேட்க முடியவில்லையே…. நிறுத்தாமல் பேசுவியே… என்ன, தீபாவளி busy-யா…. தீபாவளி முடிஞ்சும் 1 வாரம் ஆயிருச்சே…. முருகனின் சூரசம்ஹாரம் கூட முடிந்து…., இன்று முருகனுக்கு திருக்கல்யாணம் கூட கோயிலில் முடிந்திருக்கும்… உன்னை ஆளையே காணோமே….. ஊர் நிலவரம் எதுவும் தெரியவில்லை…. என்ன…., ஒரு மாதிரி tired ஆகத் தெரிகிறாய்…. மேகலா  : கிருஷ்ணா… என் மீது உனக்கு எவ்வளவு அக்கறை கிருஷ்ணா… தீபாவளி முடிந்து கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போனது கிருஷ்ணா…. வெள்ளிகிழமை, குலதெய்வம் கோயிலுக்குப் போகணுமின்னு ஹரி சொன்னதால்…. டாக்டரிடம் சென்று, treatment எடுத்து சரியாகி விட்டேன். வெள்ளிகிழமை, கருக்குவேல் அய்யனார் கோயிலுக்குச் சென்றிருந்தேன். நேற்று, சூரங்குத்து பார்க்க, மடவார்வளாகம் கோயிலுக்குச் சென்றிருந்தேன் கிருஷ்ணா…. இதோ, இன்று பழையபடி உடம்பு சீராகி விட்டது…. எனக்கும், உன்னுடன் பேசி ரொம்ப நாள் ஆனது போல் இருந்ததால், diary-யைத் தூக்கி விட்டேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : எல்லாம் சரியாகி விடும் மேகலா….. இதோ, நீ பேசப் பேச, உன் குரலில் உற்சாகம் தெறிக்க ஆரம்பிக்கிறது… மனசுக்கும் நிம்மதி

வழிப்போக்கர்கள் - பகுதி 11 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : என்ன மேகலா…, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடினாயோ…. பூஜையில் வைத்த புத்தகத்தை (diary) எடுக்கவேயில்லையா….. மேகலா  : ஏன் கிருஷ்ணா…., மறுநாள் எடுத்து விட்டேனே…. கிருஷ்ணர்  : நம்முடைய திண்ணைப் பேச்சுக்கு நீ வரவேயில்லையே…, அதான் கேட்டேன்… மேகலா  :  ஒரு ரெண்டு நாள் அலுப்பினால் diary-யைத் தூக்கவில்லை. அடுத்த இரண்டு நாள், சோம்பலில் தூக்கவில்லை….  இப்படியே போயிருச்சி கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஓ! நான் ஒருவன், நீ வம்பளக்க வருவாய் என்றிருக்கிறேன். நீயானால், சோம்பலாய் இருந்தது, அதனால் dairy-யைத் தூக்கவில்லை என்கிறாயே… வழிப்போக்கர்களைப் பற்றிப் பேசுகிறோம். அதாவது ஞாபகம் இருக்கிறதா…. உன் ஒருவளுக்கே, இத்தனை அனுபவங்களைச் சொல்லுகிறாயே….  இன்னும், உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டான அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தால்….,  இந்த diary பத்தாது மேகலா…. மேகலா  : கிருஷ்ணா…., இப்போ, நிறையப் பேர் குழுவாக சேர்ந்து, தைப்பூசத்திற்கு திருச்செந்தூர் அல்லது பழனிக்கு பாதயாத்திரை செல்கிறார்கள் கிருஷ்ணா…. அது மாதிரி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், வழிவிடு முருகன் கோவில் என்றும் செல்கிறார்கள் கிருஷ்ணா…. க