Motivation - பகுதி 8
கிருஷ்ணர் : …… சிவாஜி, அவருடைய தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவர் அம்மா, ’ஜிஜாபாய்’, சிவாஜிக்கு, சிறு வயதிலேயே ராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி, பாரத நாட்டின் பெருமைகளை, கலாச்சாரத்தை, வீரத்தை எடுத்துச் சொல்லி, சிறு வயது சிவாஜிக்கு தேசப் பற்றினைத் தூண்டி விட்டார். அது அவருடைய மனசுக்குள் ஆழமாகப் பதிந்தது. அவருடைய பயமறியாத் தன்மையை, வீரமாக மாற்றிய பெருமை, அவருடைய அம்மாவைச் சேரும். அதன் பிறகு, அவருடைய ஆசிரியரான தாதாபாய் கொண்டதேவ் அவர்களிடம், குதிரையேற்றம், போர்முறை, அரசு நிர்வாகம் முதலியவற்றில் பயிற்சி எடுத்தார். அம்மா வளர்த்த வளர்ப்பு, பயமறியாதது. ஆசிரியர் அளித்த பயிற்சி, பேரரசராக்கியது. இங்கு, ஒரு வீரன் உருவாவதற்கு, மனதில் ஆழமாகப் பதியும்படிக்கு, கதையைச் சொல்லும் அன்பும், அரவணைப்பும் மிக்க அம்மா இருந்திருக்காங்க பார்….. சொல்லப் போனால்…., கதை சொல்லத் தெரிந்த அம்மாக்கள்…., தான் அறியாமலேயே, ஒரு சத்ரபதி சிவாஜியையோ…, விண்வெளியில் சாகசம் புரியும் அப்துல் கலாமையோ உருவாக்கலாம் இல்லையா….. மேகலா : Yes…., boss…. கிருஷ்ணா, நான் கூட கதை சொல்லும் அம்மாவாக, ஆச்சியாக, ஐயாமாவாக இருந்தும்…, பிள