கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 5
மேகலா : நிறைய கல்யாணங்களில், சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லாமல், சும்மா relaxed ஆக இருக்கும் போது,…. அதாவது, கல்யாணம் முடிந்த பிறகோ, அல்லது கல்யாணத்திற்கு மறுநாளோ…., fun games நடத்துவார்கள். இதுவும், ஏகதேசம், பாரதம் முழுக்க எல்லா States-லயும், விதவிதமாக நடத்துகிறார்கள் கிருஷ்ணா…. அதில், ஒரு கலாட்டா என்னவென்றால், North India கல்யாணங்களில், பெண் வீட்டுக்காரர்கள், மாப்பிள்ளையின் செருப்பை ஒளித்து வைத்து விடுவார்களாம். அங்கே இங்கே என்று தேடி, பல கலாட்டாக்களைக் கடந்து செருப்பு கிடைக்கும் போல…. அதிலும், ‘உங்க செருப்பைக் கொடுத்தா என்ன தருவீங்க’ என்று இடைத்தரகர் மாதிரி பேரம் பேசுவாங்க போல….. கிருஷ்ணர் : வாரே…., வா…., அப்போ…. ‘கல்யாண வீடு என்றால், பொண்ணு மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல…, சுற்றத்தாருக்கும் கொண்டாட்டம் தான்….. மேகலா : பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் thrilling….. பொண்ணைப் பெத்தவங்களுக்கும், பையனைப் பெத்தவங்களுக்கும், கல்யாணம் நல்லபடியா முடியணுமே என்ற பரபரப்பு….. கொண்டாட்டமெல்லாம் friends-க்கும், உறவினர்களுக்கும் தான்…. கிருஷ்ணர் : சரி…, உங்க பக்கத்துல, ‘நலங்கு’ என்ற கலாட்டாலாம் கிட