தன்னம்பிக்கை - பாகம் 6 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : பாண்டவர்கள் கதை வேறு… எல்லோருக்கும் தெரிந்தே வனவாசம் சென்றார்கள்… பதின்மூன்று வருடங்களாக…, நாடும் நகரமும், நல்லவர்களும் அவர்களுக்காகக் காத்திருந்தனர். ஆனால், ஒரு சிற்றரசரோ…, பேரரசரோ, தன் ஆட்சியைப் பறி கொடுத்தால்…, தலைமறைவு வாழ்க்கையை…, தன் பகுதி மக்களுக்கே தெரியாமல் தான் வாழ முடியும்… உதாரணத்திற்கு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை உனக்குத் தெரியுமா… அவனுடைய இயற்பெயர், ‘மாறவர்மன்’. தன்னுடைய பெயரே, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று மாறுமளவுக்கு, சோழர்களிடமிருந்து தன்னுடைய நாட்டை மீட்பதற்கு, கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் பொறுமையாகப் போராடித்தான் அடைந்திருக்கிறான். தன்னுடைய நாடு, சோழர்களிடம் பறி போன பின், 23 ஆண்டு காலம் கழித்துப் போய், அவர்களிடம் பொறுமையாகவா கேட்டுப் பெற்றிருப்பார்… மேகலா : இல்லை…, ஆனால், எனக்கு, இது எப்படி சாத்தியமாயிற்று என்பதுதான் என் சந்தேகமே… கிருஷ்ணர் : சரி…, உனக்கு வேற மாதிரி கேள்வி கேட்கிறேன். உன்னுடைய ஒரு பொருளை நீ இழந்திருந்தால்…, அல்லது உன்னால் வாங்க முடியாத பொருளை வாங்க வேண்டும் என்றால், என்ன செய்வாய்…? மேகலா : கிருஷ்ணா…, என்னைப்...