கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 1
மேகலா : ஹாய் கிருஷ்ணா…., மார்கழி மாதம் பிறந்திருச்சி… மாதங்களில் நான் ‘மார்கழி’ என்று நீ சொன்னாயா… இந்த மார்கழிக் குளிர் என்னை இதமாக வருடும் போது, கிருஷ்ணா…., உன் புன்னகை என்னை இதமாக வருடுவதாக உணர்கிறேன். ஆண்டு முழுவதும் மார்கழி மாதமே தொடரக் கூடாதா என்று ஏக்கமாக இருக்கிறது. காரில் பயணம் செய்யும் பொழுது, சாலை இருமருங்கிலும், பச்சைப் பசேலென பயிர் பச்சைகள் செழித்திருப்பதைப் பார்க்கும் போது, உலகமெங்கும் கிருஷ்ணா, உன் அழகே படர்ந்திருப்பதாய் உணர்கிறேன். ஆங்காங்கே சின்னச் சின்ன குளங்களும், அதில் தெளிவாய்த் தேங்கி நிற்கும் நீர்த்தேக்கமும்…., குளங்களைத் தொடர்ந்து ஓடும் சின்னச் சின்ன ஓடைகளும், கார்த்திகை, மார்கழி மாதங்களுக்கென்றே பிரத்யேகமாக சிருஷ்டிக்கப்பட்டதோ என்று வியக்க வைக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர் : Good morning மேகலா…. என்ன வரும் போதே பீடிகை பலமாக இருக்கிறது… இன்று என்ன…., மார்கழி மாத திருப்பாவை பற்றி பேசப் போகிறாயா…. மேகலா : Oh! அது கூட பேசலாமோ…. இருந்தாலும், நான் பேச வந்தது…. “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ – என்ற தலைப்பில் தான்…. கிருஷ்ணர் : வாவ