ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 1
கிருஷ்ணர் : என்னம்மா….. இந்தப் பக்கம் உன்னைக் காணவேயில்லையே…. எங்க போன….. நவராத்திரி கொலு முடிஞ்சி கூட, 2 நாள் ஆகி விட்டது. நீ ‘கொலு’ வச்சயா….. ரொம்ப tired-ஓ….?! மேகலா : கிண்டல் பண்றயா கிருஷ்ணா…. நவராத்திரி கொலு என்று வைக்காவிட்டாலும், எங்க வீட்டில் இருக்கும் அம்மன்…. கிருஷ்ணர் : ’கோலாகலமாய்’ கொலு இருந்தார்கள் என்று தானே சொல்லப் போகிறாய். அதைத்தான் நானும் பார்த்தேனே…., அதற்காக அரட்டையைக் கூட மறந்துட்டயா….? மேகலா : கிருஷ்ணா! கொஞ்சம் tired-ஆகத்தான் இருந்தது கிருஷ்ணா….. என்னால, புதுசா ஒரு subject-அ கூட யோசிக்க முடியல கிருஷ்ணா…! கிருஷ்ணர் : புது….சா…வா….! நாம தான் நல்லவங்கள எப்படி அடையாளம் பார்ப்பது என்று பார்த்துக் கொண்டிருந்தோமே…. மேகலா : ஆமாம் கிருஷ்ணா! ‘நல்லவங்க’ subject-அ மட்டும் யோசிக்கும் போது, நம்மைக் கடந்து செல்லும் நிறைய சம்பவங்களை விட்டு விடுகிறோமோ என்று தோணுது கிருஷ்ணா… மேற்படி சமாச்சாரத்தை ஆராயும் போது, நம்மருகில் இருக்கும் நல்லவங்களைக் காட்டிலும், தேசத்திற்காகப் பாடுபடும் நல்லவங்களைப் பற்றியே யோசிக்கத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால், ‘கெட்டவர்கள்’ என்ற தலைப்பில