Posts

Showing posts from August, 2020

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 98

துரியோதனன், பீமனின் ‘கதை’யால் தொடையில் தாக்கப்பட்டு, பூமியிலிருந்து சிரமப்பட்டு எழுந்து கிருஷ்ணரைப் பார்த்துக் கடுமையாக பேசத் தொடங்கினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். மேகலா : என்ன பேசப் போகிறானாம் கிருஷ்ணா? இவர்கள் தர்மம் மீறி சண்டை போடும் போது, யாரும் வசனம் பேசவில்லை. இன்று கொல்லப்பட வேண்டிய துரியோதனனைக் கொல்லும் போது மட்டும், பலராமர் சொல்லுவாராம், ‘துரியோதனன் ரொம்ப...... நல்லவனென்று’. துரியோதனனும், முக்கி..... முணங்கி, எந்திரிச்சி, கிருஷ்ணரைப் பார்த்து, கடுமை.......யான வார்த்தைகளால் பேசப் போகிறானாம். என்ன.... நடக்குது.... கிருஷ்ணா, இங்க. பீமனைக் கொல்லுவதற்கு துரியோதனனுக்கு இப்ப வேணா motive இருக்கலாம். சிறு பிராயத்திலிருந்தே, அவனைக் கொல்வதற்காகவே மாமன் சகுனியைக் கூடவே வைத்து, ப்ளா....ன் பண்ணி, சதி பண்ணினானே.... அவன் தர்மம் தெரிந்தவனா.....? தர்மாத்மா என்று பலராமர் கூறுகிறாரே....., என்னால் சகிக்கவே முடியவில்லை. மேலே எழுந்து, ’கதை’யால் தாக்க வந்தவனிடம் அடி வாங்கி, கீழே விழ வேண்டுமா....? தப்பாக அடித்தாலும் தான் என்ன? துரியோதனனைக் கொல்ல வேண்டும். அதுதான் தர்மம். இந்த

வாகனங்கள் பலவிதம் - பகுதி 3

மேகலா : நான் குதிரை வண்டியில் போயிருக்கிறேனா என்று கேட்டாயல்லவா.....? குதிரை வண்டியில் போன மாதிரியும் இருக்கு....; போகாத மாதிரியும் இருக்கு.... சரியா நினைவில்லை கிருஷ்ணா.... ஆனா, மாட்டு வண்டியில் போயிருக்கிறேன், கிருஷ்ணா..... எங்க அப்பா, எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்திலிருந்தே, ‘car' வாங்கி விட்டார் என்பதால், மாட்டு வண்டியிலும் போக வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது. ஆனாலும் மாட்டு வண்டியில் சென்றிருக்கிறேன். குலதெய்வம் கோயிலுக்கு வழிபடச் செல்பவர்கள், குடும்பம் குடும்பமாக மாட்டு வண்டியில் செல்வதைப் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா..... பொங்கல் வைப்பதற்கு உண்டான சாமான்கள் இத்யாதி, இத்யாதி எல்லாம் வண்டியின் அடியில், ‘தூளி’ மாதிரி சாக்கால் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அதற்குள் தான் போட்டுக் கொண்டு செல்வார்கள். கிருஷ்ணர் : Car 'டிக்கி’ மாதிரி.... மேகலா : அப்படியேதான் கிருஷ்ணா.... இதெல்லாம் குடும்பமாக செல்லும் போது உபயோகிப்பது. அந்தக் காலங்களில், தனிப்பட்ட முறையில், car, two-wheeler எல்லாம் புழக்கத்திற்கு வந்திருந்தாலும், அது ரொம்ப luxurious, costly என்றுதான் மக்களால் பார்க்கப்பட்ட

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 97

மேகலா : துரியோதனனின் இரு தொடைகளும் முறிந்து, அவன் பூமியில் சாய்ந்தான். அப்போது பீமன், கீழே விழுந்து கிடந்த துரியோதனனை அணுகினான். ‘மதி கெட்டவனே! சபையில் திரௌபதியை அவமானப்படுத்தியதன் பலனை இப்போது அனுபவிப்பாயாக!’ என்று சொல்லி விட்டு, துரியோதனனின் தலையை, தனது காலால் உதைத்தான். அதிலும் திருப்தியுறாமல், மீண்டும் மீண்டும் துரியோதனன் தலையைத் தனது காலால் புரட்டிப் புரட்டித் தள்ளினான். வெற்றிக் களிப்பில் கூத்தாடினான். பீமனின் கோரதாண்டவத்தைக் கண்ட யுதிஷ்டிரர், அவனைப் பார்த்து, ‘பீமா, உன் சபதம் நிறைவேறி விட்டது. இப்போது அவன் தலையை உன் காலால் உதைப்பது தர்மம் அல்ல. துரியோதனன் அரசன். நமக்கு உறவினன். அடிபட்டு வீழ்ந்திருக்கிறான். நீ அவனைக் காலால் உதைப்பது, தகாத செயல். அதைச் செய்யாதே!’ என்று கூறினான். இப்படி பீமனுக்கு அறிவுரை சொல்லி விட்டு, துரியோதனனைப் பார்த்து சொன்னார், ‘துரியோதனா! பீமனின் செயலைக் கண்டு கோபமடையாதே. எங்களைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் உனக்கு வந்தது. உன்னைக் கொன்று விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. இது தெய்வம் நமக்கு விதித்து விட்ட நிலை. உன் பேராசையினால் இந்த நிலையை நீ அட

வாகனங்கள் பலவிதம் - பகுதி 2

மேகலா : மாட்டு வண்டி, வில்வண்டியிலிருந்து, மனிதன் உருவாக்கிய வாகனங்களைப் பற்றிப் பேசுவோம் என்று சென்ற பகுதியை முடித்திருந்தோம், அல்லவா....? வாகனம் உருவான கதையே எவ்வளவு இருக்கு கிருஷ்ணா! மனிதன் எப்பவுமே, மனதுக்குள், ‘ஏன், எதற்கு, எப்படி’ என்று கேட்டுக் கொண்டே இருப்பது தான் மனிதனின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். நம்முடைய புராணங்களிலிருந்தும் நமக்கு நிறைய தகவல் கிடைத்திருப்பது interesting ஆன விஷயம் தான். இப்ப, நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் வாகனங்களைப் பற்றி வரிசையாகப் பார்ப்போம் கிருஷ்ணா...! கிருஷ்ணர் : இப்போ இருக்கும் வாகனம் என்றால், cycle, scooter என்றுதானே ஆரம்பிக்கணும். அந்தக் காலத்து மனிதன் உருவாக்கிய மாட்டு வண்டி இப்பவும் இருக்கா.... ஏனென்றால், மாட்டு வண்டியிலிருந்து தானே, அடுத்தடுத்த வாகனங்கள் உருமாறி வளர்ச்சி அடைந்திருக்கும். மேகலா : கிருஷ்ணா..... நம்ம நாடு விவசாய நாடு தானே...., விவசாயிகள், தன்னோடு வளர்ந்த மாடுகளைத்தான் உழுவதற்கு, tractor ஆகப் பயன்படுத்தினார்கள்; விளைபயிர்களை, market-ல் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு, மாடுகள் பூட்டிய வண்டிகள், அதாவது, goods vehicle ஆக பயன்

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 96

துரியோதனன் வீழ்ந்தான் மேகலா : பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே, ‘கதை’ யுத்தம் நடக்க இருக்கிறது என்று அறிந்து, அங்கு வந்த பலராமரைப் பாண்டவர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். ‘பலராமரே, உங்களுடைய இரு சிறப்பான சிஷ்யர்களின் போர்த்திறமையை இப்போது பாருங்கள்’ என்று கூறினார்கள். பலராமர், கிருஷ்ணரைப் பார்த்து, ‘மாதவா! என் சிஷ்யர்களுக்கிடையே நடக்க இருக்கும் இந்த ‘கதை’ யுத்தத்தைப் பார்க்க, நானும் மிக ஆவலாகத்தான் இருக்கிறேன்’ என்று சொன்னார். அதன் பின்னர், பாண்டவர் தரப்பிலிருந்த பல மன்னர்களும் வீரர்களும் பலராமருக்கு வணக்கம் செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து துரியோதனனும் ஆசி பெற்றான். ‘கதை’ யுத்தத்தைப் பார்ப்பதற்காக, பலராமர் அங்கே அம்ர்ந்திருந்த மன்னர்களிடையில் தானும் அமர்ந்து கொண்டார். ‘கதை’ யுத்தம் தொடங்கியது. பீமனும், துரியோதனனும் மிகவும் கோபம் கொண்ட இரண்டு மத யானைகள் போல் யுத்தத்தைத் தொடங்கத் தயாரானார்கள். இருவருமே மிகவும் பயங்கரமான திறமை கொண்டவர்கள். இருவருமே பலராமரின் சிஷ்யர்கள். இருவரையுமே எமனுக்குக் கூட உதாரணமாகக் கூறி விடலாம் என்கிற அளவுக்கு யுத்தத்தில் முனைப்பு உடையவர்கள்.

வாகனங்கள் பலவிதம் - பகுதி 1

மேகலா : ஹாய் கிருஷ்ணா! ஒரு அற்புதமான தலைப்புடன் என்னை வந்து பார் என்று சொல்லிட்டு, வேக வேகமாகப் போனியே..... உன்னைத் தேடி இதோ வந்து விட்டேன். கிருஷ்ணர் : என்ன தலைப்புடன் வந்திருக்கிறாய்? அதச் சொல்லு முதலில். மேகலா : கிருஷ்ணா! அதத்தான் உங்கிட்ட கேட்கலாம் என்று நெனச்சேன்... கிருஷ்ணர் : நான் உன்னத்தான யோசிக்கச் சொன்னேன்..... சரி, போகட்டும். நீ என்ன car வைத்திருக்கிறாய்....? மேகலா : ஏன் கிருஷ்ணா..... மறந்துட்டயா..... 'Dezire' car வைத்திருக்கிறேன். கிருஷ்ணர் : காசிக்கு எப்படி போனாய்....? மேகலா : ஏன் இதையெல்லாம் கேட்கிறாய்....? கிருஷ்ணர் : விஷயமிருக்கு.... சொல்லு.... எப்படிப் போனாய்..... மேகலா : ரொம்ப தூரம் போகணுமில்ல கிருஷ்ணா.... அதனால் flight-ல் போனேன்... கிருஷ்ணர் : முன்னல்லாம் Bangalore-க்கு எதில் போவாய்...? மேகலா : Bus-ல போவேன். Train கூட இருக்கு.... ஆனா, அது விருதுநகர் போய் ஏறணும்... அதனால் நான் ‘பஸ்’சுல போறதத்தான் விரும்புவேன். அது Srivi-யிலிருந்து கிளம்பும் என்பதால், ‘எனக்கு’ அதுதான் சௌகரியம்.... கிருஷ்ணர் : எந்த ஊருக்காவது, கப்பலில் சென்றிரு

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 95

மேகலா : துரியோதனன், ‘கதா’ யுத்தத்துக்குத் தான் தயாரென்றும், பாண்டவர்களில் யார் வேண்டுமானாலும் தன்னுடன் போர் புரியலாம் என்றும் வீர முழக்கமிட்டான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். இப்படி யுதிஷ்டிரரும், துரியோதனனும் பேசியதைக் கேட்ட கிருஷ்ணர், யுதிஷ்டிரர் மீது பெரும் கோபம் கொண்டார். ‘யுதிஷ்டிரரே! உங்களில் ஒருவனை எதிர்க்கும்படி துரியோதனனுக்கு அனுமதி அளித்து விட்டீர். அவன் பீமனைத் தவிர்த்து விட்டு, உங்கள் நால்வரில் ஒருவரைக் குறிப்பிட்டு விட்டால் என்ன செய்வது? ஒருவனை வென்று ராஜ்ஜியத்தையே பெறலாம் என்றும் இப்போது நீர் சொல்லி விட்டீர். இவன் ‘கதை’ யுத்தத்தில் பெற்றிருக்கும் பயிற்சி பற்றி உமக்குத் தெரியுமா? பீமனைக் கொல்ல வேண்டும் என்பதற்காகவே, இரும்பினாலேயே ஒரு மனித உருவத்தைச் செய்து, அதனுடன் பதின்மூன்று வருட காலம் அவன் ‘கதை’ யுத்தப் பயிற்சி செய்திருக்கிறான். யோசிக்காமல் வார்த்தையை விட்டு விட்டீர்! ‘கதை’ யுத்தத்தில்துரியோதனனை எதிர்ப்பதற்கு, பீமனைத் தவிர்த்து வேறு யாரையும் நான் பார்க்கவில்லை. ஆனால், பீமன் கூட துரியோதனன் அளவுக்குப் பயிற்சி இல்லாதவனே. பலவானுக்கும் பயிற்சி உள்ளவனுக்கு

ராமரின் வில்லும், கிருஷ்ணரின் ஸ்ரீ சக்கரமும் - பகுதி 3 (நிறைவு)

மேகலா : சீனா நாட்டில் என்ன ‘கசமுசா’வானது என்று கேட்டிருந்தாயல்லவா...? கிட்டத்தட்ட இந்தியா பொருளாதாரத் தடையை சீனா மீது விதித்தது மாதிரிதானே.... ‘59 செயலிகளை’ நிறுத்தியது. இந்திய நாட்டுக்குள் அந்நிய நிறுவனம் காலூன்ற நினைத்தால், இந்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தது. இதுவும் சீனாவை நினைத்தே கொண்டு வரப்பட்ட சட்டம். அமெரிக்காவும், சீனாவுடன் வர்த்தகத் தடையைக் கொண்டு வந்தது. சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், தானாக முன்வந்து வேளியேறத் துவங்கியது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சீனாவின் ராணுவ வீரர்கள், இந்தியாவில் ராணுவ வீரர்களுக்குத் தரப்படும் மரியாதை, சலுகைகளைப் பார்த்து, தனது அரசாங்கம், அதே போல ராணுவ வீரர்களை நடத்தவில்லை என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. - இது எல்லாமாகச் சேர்ந்து, அங்கிருக்கும் அதிகாரிகளிடையே ஒரு அதிருப்தி நிலவுவதாகக் காத்து வாக்கில் செய்தி வந்தது. பிரதமர் மோடி அவர்களுடைய ‘லடாக்’ பேச்சு, சீனாவின் இந்தியாவைப் பற்றிய கணிப்பில் மண்ணள்ளிப் போட, இங்குதான் குழலூதும் கண்ணன் தன் ஆட்டத்தை ஆரம்பித்தார் என்று நான் திடமாக நம்புகிறேன். கிர

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 94

மேகலா : மடுவில் ஒளிந்து கொண்டிருந்த துரியோதனனை அழைத்து, தருமர், அவனை வெளியே வந்து போரிடுமாறு கூறினார் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். அதற்கு துரியோதனன், தண்ணீரில் இருந்து கொண்டே பதில் சொல்லத் தொடங்கினான். ‘யுதிஷ்டிரனே! நான் பயத்தினால் இங்கு வந்து ஒளிந்து கொள்ளவில்லை. யுத்தத்தை விட்டு ஓடி வந்து விட்டேன் என்று நினைக்காதே. என் ரதத்தை இழந்தேன். என் தேரோட்டியும் கொல்லப்பட்டான். நான், தனி ஒருவனாக, யுத்தத்தில் காயம் பட்டு இளைப்பாற விரும்பினேன். களைப்பைத் தீர்ப்பதற்காகவே இங்கே வந்து அமர்ந்திருக்கிறேன். யுதிஷ்டிரா, நீயும், உன்னைச் சேர்ந்தவர்களும் இன்று இரவு இளைப்பாறுங்கள். அதன் பிறகு உங்கள் அனைவரையும் யுத்த களத்தில் நான் மீண்டும் சந்திக்கிறேன்’. இதற்கு யுதிஷ்டிரர், ‘துரியோதனா! நாங்கள் எல்லோரும் களைப்பு தீர்ந்தவர்களாகவே இருக்கிறோம். ஆகையால், இப்பொழுதே யுத்தம் நடக்கட்டும்’ என்று பதிலுரைத்தார். துரியோதனன் சொன்னான், ‘யுதிஷ்டிரா, எனது ஆதரவாளர்கள் அனைவரும் இறந்து போன பிறகு, இந்த பூமியை ஆள நான் விரும்பவில்லை. அதை நீயே அனுபவிப்பாயாக. இந்த சூன்யப் பிரதேசம் உனக்கு உரியதாக ஆகட்டும். உங்