Posts

Showing posts from March, 2022

அழகு - பகுதி 14

மேகலா   : நீ, பால்காரர் பால் கறப்பதைப் பாத்திருக்கிறாயா கிருஷ்ணா….? கிருஷ்ணர்  :  யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டாய்…..? ‘மாடு மேய்க்கும் கண்ணே, நீ போக வேண்டாம் சொன்னேன்; காய்ச்சின பாலும் தாரேன் கற்கண்டு சீனி தாரேன் கை நிறைய வெண்ணெய் தாரேன் வெய்யிலிலே போக வேண்டாம்’ ‘காய்ச்சின பாலும் வேண்டாம் கற்கண்டு சீனி வேண்டாம் உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்’ – என்ற இந்தப் பாடலைக் கேட்டாயா…., நானும் என் அம்மாவும் பாடுவதாக எழுதிய பாடல்… நாங்கல்லாம் மாடுகளோடேயே இருந்தவங்க. மாடு மேய்ச்சிருக்கேன், மாட்டின் மடியிலிருந்து அப்படியே பாலைக் குடிச்சிருக்கேன்…. எங்கிட்டேவா….? மேகலா  : கிருஷ்ணா…., நான் எப்படி மறந்து போனேன்…. பால் கறப்பதை யோசிச்சிட்டே இருந்தேனா…., அந்தச் செயல் என்னைப் பரபரப்பாக்கிருச்சி கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அந்த பரபரப்பில், நானே மாட்டுக்காரன் தான் என்பதை மறந்தே போனாயாக்கும்…., சரி, நீ சொல்ல வந்ததைச் சொல்லு… மேகலா  : பால்காரர் பால் கறப்பதுதான் அழகு கிருஷ்ணா…. நாங்க சின்னப்புள்ளையா இருக்கும் போது, எங்க வீட்டுலதான் மாடு கட்டப்பட்டிருக்கும். மாலை நேரத்தில் பால் கறப்பதற்கு,

அழகு - பகுதி 13

மேகலா   : கிருஷ்ணா…. நான் சின்னப் புள்ளையா இருந்த போது, எங்க Cap factory-க்குப் போவோம்ல… அங்கு, cap factory building தனியா இருக்கும்…. அந்த இடத்துக்கு செல்வதற்கு முன்பே…, நமக்கு ‘டப்…குப்பு’னு வெடிக்கிற சப்தம் ‘ரிதமிக்கா’ கேட்கும்…. கிருஷ்ணர்  : ஏன் அப்படி…. மேகலா  : ‘பொட்டுக் கேப்’புன்னு சொல்லப்படுவது, ஒரு சின்ன பொட்டு size, paper-க்கு நடுவில் கொஞ்சமாக மருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அதை பொம்மை துப்பாக்கியில் வைத்து சுட வேண்டும். சுடும் போது, ‘படார்’ என வெடி சப்தம் கேட்கும்… இந்த பொட்டுக் கேப்பை எப்படி தயாரிப்பாங்கன்னா, ஒரு பெரிய சிவப்பு கலர் sheet-ல் மருந்து ‘dot’, ‘dot’ ஆக வைத்து, இன்னொரு sheet-ஐ ஒட்டி விடுவார்கள். இதற்கு அச்சு இயந்திரம் மாதிரி இருக்கும் அந்த இயந்திரத்தின் மேஜை மாதிரியான பகுதியில் பெரிய sheet-ஐ வைப்பார்கள். ‘Dot’ போடும் இன்னொரு பகுதி move ஆகி, மருந்தால் ‘dot’ வைக்கும். அதன் மீது இன்னொரு sheet-ஆல் ஒட்டுவார்கள். அப்பொழுது அந்த மருந்துக்கு cutting machine-ஆல் கொஞ்சம் அழுத்தம் கிடைக்கும். அத்தோடு பொட்டு மாதிரி paper-ல் இருந்து cut ஆகி விழும். அப்பட

அழகு - பகுதி 12

மேகலா   : யாரையெல்லாம் நாம் நினைக்கும் போதே மனசு சந்தோஷப்படுகிறதோ, அவர்கள் அழகானவர்கள் என்றுதானே பேசிக் கொண்டிருந்தோம்.   சில இடங்களில் வேலை நடக்கும் போது, அந்த வேலையை ரசிச்சுப் பார்ப்பதே ஒரு ‘தனி சுவை’, ‘தனி அழகு’ கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படியா…. அது, ‘உழைப்பின் மகிமை’ மேகலா….  ஒரு மனிதன், தன் கடமையாக வேலையைச் செய்யும் போது, அவன் நெற்றியிலிருந்து வழியும் வியர்வை கூட, அந்த மனிதனை கூடுதல் அழகாக்கிக் காட்டும்…  இருந்தாலும் நீ சொல், எந்த வேலை செய்பவர்களை இப்படி ரசிச்சு சொல்லுகிறாய்…? மேகலா  : கிருஷ்ணா, நீ சொன்னது மாதிரி, உழைக்கும் மக்களின் உழைப்பே அழகுதான். மண்பானை செய்யும் குயவர்கள், தங்கள் பகுதிகளில், மண்பானை செய்வதற்கான மண்ணை பரப்பி, அதில் நீரை ஊற்றி, தங்கள் கால்களால் ‘ரிதமாக’ மிதித்து, கலவையாக, சேறாக பானை செய்யுமளவுக்கு பதப்படுத்தி, வண்டிச் சக்கரத்தின் நடுவில், தேவையான அளவு மண்கலவையை வைக்கிறார்கள். அதன் பின்னே, வண்டிச் சக்கரத்தை உருட்டி விட்டு, தன் கைகளையே உளியாக மாற்றி, ஒரு குழி மாதிரி உருவாக்கி, சக்கரம் சுழலும் லாவகத்தில், அந்தக் குழியை, தன் விரல்களால் தடவித் தடவி, பானையாய் வடிவாக

அழகு - பகுதி 11

மேகலா   : ஏன் கிருஷ்ணா…. முருகன் அருள் புரிந்ததால் மட்டுமே, ஹரி கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ணர்  : ஆமாம்…, ஆமாம்…., வாஸ்தவம்தான்; மயில் நடந்து வருவதில் கிறங்கிப் போகிறாயே…. அது தோகை விரித்து ஆடுவதைப் பார்த்ததே கிடையாதா…. மேகலா  : பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா….. சிவகாசியில் ANJA College தாண்டி, railway station போகும் வரைக்கும் மயில்களின் நடமாட்டம் நிறையவே இருக்கும். எப்பவாவது மழைக்கு ‘கோப்பு’ இருக்கும் போது, ஒன்றிரண்டு முறை மயில் தோகை விரித்து ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். மற்றப்படி, zoo-ல தான் சில அபூர்வ பறவைகளைப் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா. அதிலும் மணிப்புறா – என்ற பறவை இருக்கும். அதன் குட்டி சிறகு தோகை மாதிரி இருக்கும். அந்த தோகை மாதிரியான சிறகை விரித்து அமர்ந்திருக்கும் அழகு, கொஞ்ச நேரம் அங்கேயே நின்று பார்க்கத் தோன்றும்.  நீ சொன்ன மாதிரி, பறவைகள் உலகமே அழகான ஆனந்தமான உலகம் தான் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஏன் மேகலா….,  ‘அழகு’…, ‘அழகானவர்கள்’ என்று எதை வைத்து நீ தீர்மானிக்கிறாய்? மேகலா  : ‘அழகானவர்கள்’ என்று யாரை நினைக்கிறேனா….,  அவர்கள் என் மனசுக்குப் பிடித்திருக்க வேண்டும்…. ‘ந

அழகு - பகுதி 10

மேகலா   : ஹரிக்கு கல்யாணம் பேசி, கல்யாணத்துக்கு பத்திரிகை வைப்பதற்காக, பூலாவூரணிக்கு, நானும் ராணிமாவும் scooter-ல் சென்று கொண்டிருந்தோம். அப்போ மழைக்காலம் முடிந்து, வானம் வெறித்திருந்த காலம். சின்னச் சின்ன கால்வாய்கள் கூட, ‘சல சல’வென நீரோடையை நிரப்பி சந்தோஷமாய் ஓடிக் கொண்டிருந்த நவம்பர் மாசம். போகும் வழியில் ஒரு குட்டி பாலம். அதனடியில் கால்வாய் நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பாலத்தையடுத்து ஒரு சிறு குட்டையும் தண்ணீரில் ததும்பிக் கொண்டிருந்தது. அப்போ, செல்லும் வழியில் எதிரே ஒரு யானை, பாகனுடன் வந்தது. நாங்களும், எதிரில் யானை வருகிறது, ‘நல்ல சகுனம்’ என்று நினைத்து, யானைக்கு வழி விட்டு, ஒதுங்கி நின்றோம். வந்த யானை, குட்டையில் நிரம்பிய தண்ணீரைப் பார்த்ததும், படக்கென்று தண்ணீருக்குள் சென்று, ஆழமில்லாத அந்தக் குட்டைக்குள் படுத்துக் கொண்டது. போவோர், வருவோரெல்லாம் யானை குளிப்பதை ஆனந்தமாய் ரசிக்க, நானும், ராணிமாவும், எங்கள் camera கண் கொண்டு, அதன் அழகை முழுவதுமாக எங்கள் கண்களில் படமெடுத்துக் கொண்டோம். பாகனை மீறி யானை குளிக்க வேண்டும் என்று தீர்மானித்தவுடன், பாகனும், அதன் முதுகைத் தடவி ஆனந்தக