வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 16
கிருஷ்ணர் : நான், ‘இன்னும் ஒரு முறை நீ இமயமலையின் அடிவாரத்திற்கு சென்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் சொன்னேன். நீ, உன் மனதில் உள்ளதையும், அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதையும் சொல்லி, என்னையும் அங்கேயே அழைத்துச் சென்று விட்டாயே…. கொஞ்சம் இரு… இதோ, காற்றாக விரைந்து ‘ரிஷிகேஷ்’ சென்று, கங்கையைப் பார்த்து வருகிறேன்…. மேகலா : கிருஷ்ணா…, ராமர் கடந்து சென்ற கங்கையை நீயும் கடக்கப் போகிறாயா… நீ செல்லலாம்… காற்றிலே மிதந்து செல்லுவாய்…. flight ticket கிடையாது… நினைத்த மாத்திரத்தில், மலையின் வளைவுகளில் நடந்து கூடச் செல்லுவாய்…. கிருஷ்ணர் : நான் நடக்கிறேனோ…. மிதந்து செல்லுகிறேனோ… நீ உன் உணர்வுகளைக் கொட்டும் போது…, ’அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன்’ என்னும் போது…, நாமும், வெக்கையான இந்தப் பிரதேசத்தை விட்டு, கங்கையின் அருகில் சென்று விடலாமோ என்று தோன்றுகிறது…. மேகலா : தூணிலும், துரும்பிலும், உயிர்களின் ஒவ்வொரு அணுக்களிலும் குடியிருக்கும் பரம்பொருள் ஸ்ரீகிருஷ்ணரா…, இந்தப் பிரதேசத்தை விட்டு போகிறேன் என்று சொல்வது… முடியுமா…, சரி…, எங்களை விடு…. ஆண்டாளம்மாவை விட்டு சென்று விடுவாயா…. கிருஷ்ணர் : அடா…