Posts

Showing posts from August, 2024

வலிமை - பாகம் 4

மேகலா   : நீ சொன்னது ரொம்ப சரி கிருஷ்ணா…. Alert-ஆக இருப்பவர்கள், தங்கள் strength-ஐ விடவே மாட்டார்கள் கிருஷ்ணா…. இப்போ market-ல விற்கப்படுகிற பல பொருட்களும், மக்களிடம் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதே பொருளை இன்னொரு கம்பெனியும் தயாரிக்கப் போகிறது என்றால், அவன் மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் பொருளை விட வித்தியாசமாகக் காட்ட வேண்டும்…. அதற்காக, அவன் வாரக்கணக்கில்ல, மாசக்கணக்கில் யோசித்து, யோசித்து…, உணவுப் பொருள் என்றால், flavor-ஐ மாத்தி…, shape-ஐ மாத்தி…, விற்கும் திறனையும் மாத்தி யோசித்து, market-ல் விடுகிறான். மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தன் புத்தியைக் கூர் தீட்டி வேலை பார்க்கிறான். இங்கு, அவனுடைய மாத்தி யோசிக்கும் திறன், பொருளுக்குப் பலம் சேர்க்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : ஓ! Marketing என்பதே, trading-ல் மிக வலிமையான ஒரு அம்சம் தானே. அதற்கு alertness ரொம்ப முக்கியமானதுதான். இன்னொரு விஷயம்… ஒருவராகவோ, ஒரு team ஆகவோ, சேர்ந்து எடுக்கும் முடிவுகள், சில சமயங்களில், பல மடங்கு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு…. மேகலா  : என்ன சொல்ற கிருஷ்ண

வலிமை - பாகம் 3

மேகலா  : எத்தனையோ பேர் இருக்கிறார்கள் கிருஷ்ணா…. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லையே… மின்சார பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், சிறு வயது முதலே, விஞ்ஞான சாதனங்களுடனே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு…, ஒரு முயற்சி தோற்றதுமே, மறுபடியும் முயற்சி செய்து ஜெயித்தாரா இல்லையா…. ஒரு முறை தான் எரிய வைத்த மின்சார பல்பு பழுதடைந்தது. ஒரு பல்பு பழுதடைந்த நிலையில், அந்த இடத்தில் எரிந்த அத்தனை பல்பும் அணைந்து விட்டது. இப்படி இருக்கக் கூடாதே என்று யோசித்து யோசித்து, திருத்தியமைத்தார். அதன்படி, ஒரு பல்பு பழுதடைந்தால், அது மட்டுமே off ஆகும்படி செய்வதற்கு…, இன்றைய வடிவமைப்பைக் கொண்டு வர எத்தனை போராட்டம் நடந்திருக்கும்… இதற்கெல்லாம்.., எத்தனை மன வலிமை வேண்டும் கிருஷ்ணா….   உடல் வலிமை மட்டும்…, வலிமை கிடையாது கிருஷ்ணா…. என்றுமே தான் செய்யும் வேலையை, சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்…, இதற்காக, அதற்காக விட்டுக் கொடுப்போம் என்று எதற்காகவும் விட்டுக் கொடுக்காத மன வலிமையுடன் வேலை பார்ப்பவர்களால் மட்டுமே, சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும் என்று புரிகிறது கிர

வலிமை - பாகம் 2

கிருஷ்ணர்   : உனக்கு ஒண்ணு தெரியுமா…. அகம்பாவத்தோடு…, ‘நான் அதைச் செய்தேன்…, இதைச் செய்தேன்…, எனக்கு இந்திரன் பயப்படுவான்…, எமனே என் முன்னே கை கட்டி நிற்பான்…, என்னைக் கொல்ல, மூவுலகிலும் எவனும் கிடையாது’ என்று பேசிப் பேசியே, ராவணன் வலுவிழந்தான்… இப்படி எதுவும் பேசாமலேயே, ராவணனை, ராமர் வதம் செய்தார்….   ‘வலிமை’ எப்பவும் ரொம்பப் பேசாது. பேசுபவன், அடக்கமில்லாதவன்…  ‘ஒரு இல்…, ஒரு சொல்…, ஒரு வில்’ என்று பரிசுத்தமாய் வாழ்ந்த ராமர், நிச்சயமாக வலிமையானவர்தான் மேகலா…. மேகலா  : கிருஷ்ணா; நீ சொன்னாயே, வலிமையானவர்கள் ரொம்பப் பேச மாட்டங்க என்று; ஆனால், இங்கு ஒருவர், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ‘வலிமைதான், வலிமையை எதிர்கொள்ள முடியும்’ என்று சொல்லியிருக்கிறாரே…, அது அடக்கமின்மையா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Oh! நம்ம ‘பாரதரத்னா’ அப்துல் கலாம் ஐயாவை சொல்றியா… ‘வலிமைதான், வலிமையை எதிர்கொள்ள முடியும்’ என்ற இந்த வார்த்தையில், நீ என்ன குறை கண்டாய்… அவர் எந்த இடத்தில் நின்று பேசுகிறார்…. தீவிரவாதத்தால், இரு நாடுகளுக்கிடையில், பிரச்னை தலையெடுக்கும் போது, அதைத் தடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு வல்லவன்; ’

வலிமை - பாகம் 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா! கிருஷ்ணர்  : என்னம்மா உன்னை, கொஞ்ச நாளாக இந்தப் பக்கமே காணலியே… அரட்டை அடிப்பதையே நிறுத்தி விட்டாயோ என்று கூட யோசித்தேன். வாயத் திறந்தால், நிறுத்தாமல் பேசுவாயே…, எங்க ஆளையே காணோமே என்று கூட நினைக்க ஆரம்பிச்சுட்டேன்… மேகலா  : எப்படி கிருஷ்ணா…. நான் சும்மா அரட்டை அடிப்பதாகவெல்லாம் நினைக்கவில்லை…. என் ஆச்சாரியனும், குருவுமாகிய ஸ்ரீகிருஷ்ணர்…, பல தகவல்களை எனக்கு எடுத்துச் சொல்லி, அதன் விளக்கங்களைத் தருவதாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். நான் கொஞ்ச நாள் diary-யைத் தூக்காததற்குக் காரணம்…, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததும்…, அதனையொட்டிய செய்திகள், social media-க்களில் பரபரப்பாகப் பேசப்படுவதும் ஒரு காரணம் தான் கிருஷ்ணா…. ஜெய்…, ஸ்ரீராம்…. கிருஷ்ணர்  : ஓ! கும்பாபிஷேகத்தை live telecat-ல் பார்த்தாயா…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. சீக்கிரமே வேலையை முடித்து விட்டு, T. V. முன் அமர்ந்து…., full-ஆ பார்த்தேன் கிருஷ்ணா… ‘பாலக ராமன்’ நின்ற தோற்றத்தில், மிக அழகாக…, சர்வ அலங்காரத்துடன் இருக்க…, உணர்ச்சி வெள்ளத்தில்…, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற மக்களின் முழக்கத்தோடு, பாரதப் பிரதம