வழிப்போக்கர்கள் - பகுதி 1
கிருஷ்ணர் : ”காட்டு வழி தனிலே - அண்ணே! கள்ளர் பயமிருந்தால் - எங்கள் வீட்டுக் குலதெய்வம் - தம்பி வீரம்மை காக்குமடா! “நிறுத்து வண்டியென்றே - கள்ளர் நெருங்கிக் கேட்கையிலே” - எங்கள் கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா!” மேகலா : என்ன கிருஷ்ணா.... பொடி நடையாய் நடந்து வந்தாயா.... என்ன பாட்டுப் பாடி வந்தாய்? கிருஷ்ணர் : உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சி; அதான் பொடி நடையாய் கிளம்பி வந்தேன். ‘கதிரவனில்’ சூடாய் ஒரு coffee சாப்பிடலாம் என்றால், ‘நான் மட்டும் தனியா எப்படி’ என்று யோசிச்சி, அப்படியே நடந்து வந்தேன். வழிப்போக்கிலே பாலத்தைக் கடக்கும் போது, வழித்துணைக்கு இருக்கட்டுமே என்று, பாரதியாரின் வண்டிக்காரன் பாட்டைப் பாடி வந்தேன். நீ கேட்டுட்டயா.... மேகலா : வழிப்போக்கர்கள் தான், இரவு நேரத்தில், தனியாகப் பயணம் செய்யும் போது, தன் பயத்தை மறைக்க பாட்டுப் பாடிக் கொண்டே செல்வார்கள். நீ பயப்படுறியா என்ன? கிருஷ்ணர் : ’பயம்மா’.... நானா.... சேச்சே..... ச்சும்மா, வீரம்மையையும், மாரியம்மனையும் கூப்பிட்டேன்.... சரி..., அது கிடக்கட்டும்..., பாட்டு எப