ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 63
மேகலா : யுத்த களத்தில், துரோணர், பாண்டவ சேனையைப் பொசுக்கித் தள்ளியதைப் பார்த்து, துரியோதனன் வெற்றிக் களிப்பில் மூழ்கினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். பின்னர், துரியோதனனுக்கும், பீமனுக்குமிடையே பெரும் யுத்தம் நடந்தது. துரியோதனன் படை ஒரு நிலையில் சிதறவே, துரியோதனனுக்கு உதவியாக, பகதத்தனும் வந்து சேர்ந்தான்; அவன் பெரும் போர் செய்தான். பகதத்தனின் யானை மிகவும் விசேஷமானது. இந்திரனுடைய ஐராவதத்திற்கு நிகரான அந்த யானையை போர்க்களத்தில் பகதத்தன் அற்புதமாகச் செலுத்தத் தெரிந்தவன். அவன் பாண்டவ சேனையை மீண்டும் மீண்டும் விரட்டிக் கொண்டிருந்தான். அர்ஜுனன், ஸம்சப்தர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்த வேளையில், பகதத்தனின் யானை பிளிறும் சப்தத்தை அர்ஜுனன் கேட்டான். பயங்கரமான அந்த ஒலியைக் கேட்ட அர்ஜுனன், கிருஷ்ணரிடம், ‘கிருஷ்ணா, இந்த ஒலி பகதத்தனின் யானை எழுப்பும் ஒலிதான். அவனுடைய யானைக்குச் சமமான யானையை நான் எந்த யுத்தத்திலும் பார்த்தது கிடையாது. அந்த யானை, ஆயுதங்களின் கூர்மையையும், நெருப்பின் உஷ்ணத்தையும், சர்வ சாதாரணமாகத் தாங்கிக் கொண்டு, சண்டையிடக் கூடியது'. இவர்களால் பாண்டவ சேனைய