Posts

Showing posts from November, 2024

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 7

கிருஷ்ணர்   : அப்படீன்னு யார் சொன்னது….?   பாரதியார், ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தால், வரும் சந்ததியினரே பயன் பெறுவர் என்று, தொலைநோக்குப் பார்வையில் சொல்லுகிறார்…. அவரே, தன் வீட்டில் சமைப்பதற்காக வாங்கி வந்த அரிசியை, பசித்து வந்த குருவிகளுக்குப் படைக்கவில்லையா… ஒருவர் கீழே விழுந்தால், பதறிப் போய், கை கொடுத்து தூக்கி விடுவது, தாகமெடுத்தவனுக்கு தண்ணீர் கொடுப்பது, இரண்டு நாள் பட்டினியில் உருக்குலைந்தவனுக்கு பசியாற அமுது படைப்பது…, இவையெல்லாம் தாய்மை குணம்… இதை விட, பக்கத்து வீட்டு மாணவனுக்கு, பாடம் விளங்கவில்லையென்று, பாடத்தை தெளிவாக புரிய வைக்கும் போது…, அது மனித தர்மம் ஆகிறது. இவையெல்லாம் உயர்ந்த குணங்கள்.   இதில், இது சரி, அது இதை விட மேலானது என்பதெல்லாம் கிடையாது என்று கவனத்தில் கொள்… பிறர் துன்பம் பார்த்து சகிக்க முடியாதவர்கள், சோறும் போடுவார்கள்…, பாதிக்கப்பட்டவனை சிறப்புடன் வாழவும் வைப்பார்கள்…. இன்னும் ஒரு தர்மம் இருக்கிறது. ஒருவனுக்கு ஒரு வேலை தெரியவில்லை என்றால், அதை நாம் செய்து கொடுப்பது, மனிதாபிமானம் தான்…. ஆனால், அதை விட சிறந்த தர்மம் ஒன்று… மேகலா  : வேலையைச் செய்து கொடுப்பதை வி

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 6

கிருஷ்ணர்   : நீ, இப்போ அரசியலில் உள்ளவர்களைப் பற்றி பேசுகிறாய் என்று எடுத்துக் கொள்கிறேன்… நான் சொல்லுவதைக் கவனமாகக் கேள்…. இன்றைய அரசியல்வாதிகளை கொஞ்ச நேரம் ஒதுக்கி விட்டு, ராஜ ராஜ சோழனை…, அவனுடைய அரசியல் போராட்டங்களை நினைத்துப் பார். ‘சோழ வள நாடு சோறுடைத்து’ என்பது பொன்மொழி. சோழ நாடு, காவிரியால் வளம் பெற்றதால், பழமொழி ஏற்பட்டதா…, மன்னர்கள், ஒரு சதுர அடி நிலம் கூட, விவசாயம் பார்க்காமல், சும்மா இருந்து விடக் கூடாது என்று தீவிரமாய் கண்காணித்ததால் ஏற்பட்டதா…,   ‘தொன்னையால், நெய் ஒழுகாமல் இருந்ததா…, நெய் நிரம்பி வழிந்ததால், தொன்னைக்குப் பெருமையா’ என்று இரண்டும் பெருமை பெற்றது போல, சோழ நாடு மன்னர்களின் கண்காணிப்பாலும், காவிரியின் அரவணைப்பாலும், அன்னபூரணி, மனமகிழ்ச்சியாய் குடியிருக்கும் நாடானது….  குறிப்பாக, ராஜ ராஜ சோழனுடைய வரலாற்றுக் குறிப்பில், விவசாயப் பெருமக்கள், விவசாயம் பார்க்காமல், நிலத்தை தரிசாகப் போட்டு வைத்திருந்தால், நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் என்று கண்டிப்பான சட்டம் போடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது… இதனால் என்ன தெரிகிறது என்றால்…., ஒரு விவசாயி கூட, பண்ணையம் பார்க்க

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

கிருஷ்ணர்   : சரி! வேற ஏதாவது route இருக்கா…. மேகலா  : கிருஷ்ணா…, உயர்ந்த உள்ளம் கொண்டவர்களின் மனசைத்தான் கண்டுபிடிப்பதற்கு கொஞ்சம் மெனக்கெடணும் கிருஷ்ணா…. ஆனால், ’நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி போல, லொட லொடனு பேசுபவர்களின் மனசு எப்படிப்பட்டது… எல்லாம் தன்னால்தான் நடக்கிறது என்ற கர்வம் உள்ளவர்களின் மனசு எப்படிப்பட்டது என்பதை easy-யா தெரிஞ்சிக்கலாம் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : கர்வம் கொண்டவர்கள், உயர்ந்த மனம் கொண்டவர்களாக இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.  ’என்னைப் போல யாரும் அறிவுள்ளவன் கிடையாது…, எனக்கு நிகர் அழகு எவரும் கிடையாது…’ என்று சதா நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பிறரைப் பற்றி நினைக்க நேரம் எப்படி இருக்க முடியும்.  பிறர் நலன் மீது அக்கறையும், சமுதாய சிந்தனையும் உள்ளவர்களுடைய மனம் மட்டுமே, சமுதாய உயர்வைப் பற்றி சிந்திக்கும். சிந்திப்பவர்களின் மனம், யாரும் சொல்லாமலேயே உயர்ந்து நிற்கும்… சரி…, லொட லொடன்னு பேசுறவங்க எப்படி…, உயர்ந்த உள்ளம் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறாய்… மேகலா  : கிருஷ்ணா…., லொட லொடன்னு பேசுபவர்கள் இரண்டு வகை… ஒன்று…, தன்னைப் பற்றியே