ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 128
மேகலா : மகாபாரதம் முழுவதுமாக வாசித்துக் கொண்டு வரும் பொழுது, ஸ்ரீ கிருஷ்ணரின் வாக்காக, ‘கீதை’ என்னும் வேத மொழியைப் படிக்கும் பொழுது, ‘முக்குணங்களினால் தான் செயல்கள் நடைபெறுகின்றன. இந்த செயல்களினால் தான் உலகம் இயங்குகிறது. இந்த முக்குணங்களும் என்னால் படைக்கப்பட்டனவையே என்றாலும், இந்த முக்குணங்களினால் ஏற்படும் செயல்களுக்கு நான் பொறுப்பாளி கிடையாது’ என்ற வாசகத்தை வாசிக்கும் போது புரிகிறது. கடவுளே எல்லாவற்றையும் கொடுத்து விட்டால், மனிதனின் பொறுமை, திறமை, முயற்சி, முன்னேறுதல், மேன்மையுறுதல் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்று உணர்ந்து கொண்டேன். கடவுள், நம்முள் ஆத்மாவாகக் குடியிருந்து நம்மை இயக்குகிறார் என்று உணருகிறேன் கிருஷ்ணா. இந்த உண்மை தெரிந்த பின், கிருஷ்ணரின், பாண்டவர்களுக்குச் செய்யும் உதவிகள் அனைத்திலும், பாண்டவர்களின் கிருஷ்ணர் மீது கொண்ட பக்தி தெரிகிறது. துன்பம் நேரும் போது, தெய்வத்தைச் சரணடையும் தன்மை தெரிகிறது. தர்மத்தின் பக்கமே தெய்வம் துணை நிற்கும் என்பது புரிகிறது. திரௌபதியை, சபா மண்டபத்திற்கு துச்சாசனன் இழுத்து வரும் போது, உறவினன் என்ற காரணம் சொல்ல