Posts

Showing posts from December, 2021

அழகு - பகுதி 1

கிருஷ்ணர்   : என்ன மேகலா…. உன்ன ஆளையே காணோம்…. கிராம வாழ்க்கையைப் பற்றிப் பேசும் போது, நேரம் போவது தெரியாம பேசினோமே…. இன்னும் உனக்கு சரியான தலைப்பு கிடைக்கவில்லையா…. மேகலா  : அது ஒரு காரணம் தான் கிருஷ்ணா. இருந்தாலும், பூஜா விடுமுறைக்குப் பிறகே, ஹரி வந்ததும்…, அடுத்து தீபாவளி வந்தது…. மறுபடியும் ஹரி வந்தான்…. சஷ்டி விரதம் இருக்கக் கூட முடியவில்லை… அடுத்து இதோ, மகாதீபம் கூட முடிவடைந்து விட்டது. ரொம்ப…. நாள் gap விட்டதால், என்ன தலைப்பில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : உனக்கு ரொம்ப நல்லா எழுதக் கூடியதான தலைப்பாகச் சொல்லு…. பேசலாம்…. சரி…. இப்பவும் கேட்கிறேன், உனக்கு ரொம்பப் பிடித்தது என்று எதை நீ நினைக்கிறாய்…? மேகலா  : ‘ அழகு’ – அது எங்கெல்லாம் இருக்குதோ, அதை ரசிக்கப் பிடிக்கும்….. ரசிப்பதை எழுதுவது பிடிக்கும்…  இப்படி…. நமக்குப் பிடித்தவர்களோடு அரட்டை அடிப்பது ரொம்பப் பிடிக்கும்… கிருஷ்ணர்  : Oh! அப்படியா….. உனக்குப் பிடித்தது என்று பட்டியல் போட வேண்டாம்… ‘ அழகு’ என்ற தலைப்பில், உன் பார்வையின் அழகைப் பேசுவோம்… மேகலா  : பேசலாம் கிருஷ்ணா… கிருஷ்ணர்  :

'வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 6 (நிறைவுப் பகுதி)

மேகலா   : ஆனாலும், அஹிம்சையின் value இப்ப செல்லுபடியாகாது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : தனி மனித வாழ்க்கையிலும் கூடவா…. மேகலா  : நிச்சயமாக கிருஷ்ணா…. இன்றைய காலகட்டத்தில், மக்களுடைய எண்ணப் போக்கு, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு’ என்பதில் கிடையாது கிருஷ்ணா…  ‘வலிமை தான் வலிமையை எதிர்கொள்ள முடியும்…..’  ’நட்பு நாடி வந்தால், குழலூதி இன்னிசை விருந்து கொடுப்போம். அதைத் தாண்டி எங்களை அசைத்துப் பார்த்தால், ’சக்ராயுதம்’ தாங்கும் கடவுளை வணங்குகிறோம்…., அந்தச் சக்ராயுதத்தை ஏவவும் செய்வோம்.  எங்களுக்கு குழலும் ஊதத் தெரியும்…., சக்ராயுதத்தையும் ஏவத் தெரியும்’.  இந்த பஞ்ச் டயலாக்கை பேசியது யார் தெரியுமா கிருஷ்ணா….  ‘வலிமையை வலிமை கொண்டு முறியடிப்போம்’ என்று சொன்னது ஏவுகணைகளின் தந்தை, நம்முடைய பெருமை மிகு டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்.  கிருஷ்ணரை, பாரதத்தின் signature symbol ஆகச் சொன்னது வேறு யாருமில்லை கிருஷ்ணா…. ‘கலியுகக் கிருஷ்ணர்’…. நம்முடைய பாரதத்தின் பிரதமர் Honorable நரேந்திர மோடி அவர்கள் தான்…. கிருஷ்ணர்  : ஓஹ்ஹோ…. பெரிய பெரிய ஆட்களெல்லாம்…., வலிமையை வலிமையா

'வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 5

மேகலா   : கிருஷ்ணா…. இன்னும் ஒரு வலிமை இருக்கிறது… மீசையை முறுக்கிக் காட்டினால் தோளைத் தட்டிக் காட்டும் வலிமை…. ஒரு கன்னத்தில் அறைந்தால், அறைந்த கையை முறுக்கி மடக்கி, அறைந்தவனையே திமிரை அடக்கச் செய்யும் வலிமை….   தீவிரவாதத்தை ஏவி விட்டு வெறியாட்டம் போட்டால்…., தீவிரவாதக் கூடாரத்தையே காலி செய்யும் ‘ஏவுகணை வலிமை’….   அஹிம்சை வலிமையை விட, இது ’பவர்ஃபுல்’ வலிமை கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : நீ சொல்லுவது நிஜம் தான் மேகலா… இதுதான் இன்றைக்குத் தேவையும் கூட… மேகலா  : இருந்தாலும், அந்நியர்களின் பிடியில் இருந்து, இந்தியாவை மீட்டெடுத்த வலிமையான ஆயுதத்தை, தன்னுடைய புன்னகையில் தாங்கி நின்றாரே…. அந்த வலிமையை நினைவு கொள்வோம் கிருஷ்ணா…..  காந்திஜியின் எளிமையைப் பார்த்து, ‘பரதேசி’ என்றவர்கள் உண்டு. அவருடைய costume-ஐப் பார்த்து, இந்தியாவே ஆண்டி மடம் தானே என்று ஏளனம் செய்தவர்களும் உண்டு…  முப்பது கோடி மக்களையும் தன் பின்னால் ஒருங்கிணைத்த மந்திரம்…. வல்லரசு நாடுகளை ஆளும் வலிமையானவர்களையும் தலை வணங்கச் செய்த மந்திரம்…. நீதிமன்றத் தீர்ப்பினால் தர்மத்தையே துலாக்கோலாகக் கையில் பிடித்திருக்கும் நீதிபதிகளைக் கூட எழுந

’வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 4

மேகலா   : ஒரு முறை, அவ்வையார், அதியமானின் அரசவைக்கு வந்திருந்தார்.   நம்ம வீட்டுக்கு, டாக்டர் கலாம் வந்தால், நாம எப்படி சந்தோஷப்படுவோமோ,  அது மாதிரி, தன் அரசவைக்கு வந்த அவ்வையாரை, அதியமான், கல்வி தேவதை சரஸ்வதியே வந்த மாதிரி, தன் அரசவைக்கு வந்த அவ்வையாரை கொண்டாடினான். தனக்கு அபூர்வமாகக் கிடைத்த, நீண்ட ஆயுளைக் கொடுக்கக் கூடிய நெல்லிக்கனியை, தான் உண்ணாது, அவ்வையாருக்கே கொடுத்து மகிழ்ந்தான். தமிழ்ப் புலமையும், கூர்த்த ஞானமும் கொண்ட அவ்வையோ, மன்னன் மனதில் ஓடும் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, மன்னனின் சிந்தனைக்குக் காரணம் கேட்டார். வளம் பொருந்திய தகடூர், எப்பவுமே பக்கத்து நாட்டு அரசர்களின் கண்களை உறுத்துவதாகவே இருந்தன. எப்பவும், பகைவர்களால் முற்றுகையிடப்பட்டு, போர்க்களமாகவே இருப்பதால், நாட்டு மக்களின் வளத்தையும், முன்னேற்றத்தையும் கவனிக்க முடியாமல் இருப்பதாக மனம் திறந்து பேசினான். அவ்வையின் மனம் நெகிழ்ந்தது. அதியமானிடம் விடை பெற்று பக்கத்து நாட்டிற்குச் சென்றார். பக்கத்து நாட்டு மன்னனாகிய தொண்டைமானுக்கு, தமிழ் மூதாட்டியான அவ்வையாரின் வருகை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக நினைத்து, அவ்வையார

’வலிமை’ என்பதா...? ‘Strong personality' என்பதா...? - பகுதி 3

மேகலா   : கிருஷ்ணா! 12-ம் நூற்றாண்டுகளில், பல வருடங்களாக சோழப் பேரரசு, மதுரையைத் தன் வசப்படுத்தி வைத்திருந்ததாம்…. அதன் பிறகு, சோழர் பரம்பரையில் வந்த சில மன்னர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அவர்களுக்கு கப்பம் செலுத்திய மன்னர்கள் சிலர், கப்பம் செலுத்தாமல், சுயாட்சி செய்யத் துவங்கினார்கள். அதன் பிறகு வந்த குலோத்துங்க சோழன் எல்லோரையும் அடக்கி மறுபடியும் சோழப் பேரரசைத் திறமையாக நடத்தினார். அப்பொழுது, மதுரையை குலசேகர பாண்டியன் ஆண்டு வந்தார். அவர், இனி சோழப் பேரரசுக்கு கப்பம் கட்டப் போவதில்லை என்று அறிவித்தார். இதைக் கேட்ட குலோத்துங்க சோழன், மதுரைக்குப் படையெடுத்துச் சென்று, குலசேகரனை வென்று, அவருடைய தாயையும், குடும்பத்தாரையும் காட்டிற்குள் விரட்டினார். அந்த நிலையில், குலசேகரனின் தம்பியாகிய மாறவர்மன் என்னும் சுந்தரபாண்டியன், மன்னனாகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில், குலோத்துங்க சோழன், பாண்டியர்களின் பட்டாபிஷேக மண்டபத்தை இடித்துத் தரைமட்டமாக்கினான். அது மட்டுமல்லாமல், விளைநிலங்களில் கழுதைகளைப் பூட்டி, வரகை விதைத்து உழச் செய்து, நிலங்களை நாசமாக்கினான். இச்செயல்களால் பெரும் கோபமுற்ற மாறவர்