கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 9
மேகலா : இன்னொரு கில்லாடிய இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல கிருஷ்ணா… அந்தக் கில்லாடிய நான், 20 வருடங்கள் வளர்த்து ஆளாக்கியிருக்கிறேன். அவளுக்குத் தையலில் ஆர்வம் உண்டு என்று எனக்குத் தெரியாது கிருஷ்ணா… School-ல் படிக்கும் போது, wire கூடை பின்னியிருக்கிறாள். எங்க அம்மாவுக்கு ஒரு ‘நெல்லிக்காய் knot கூடை’ பின்னி gift பண்ணியிருந்தாள். எங்க அம்மா, அவர்களுடைய பாட்டுப் புத்தகத்தை அதில் வைத்துத்தான் சங்கத்திற்கு எடுத்துச் செல்வார்கள். யாராவது அந்தக் கூடையை ஏறிட்டுப் பார்த்தால், ‘எங்க ஷீத்தல் பின்னியது’ என்று மகிழ்ந்து சொல்வார்கள்….. கூடை பின்னத் தெரிந்தவளுக்கு, தையல்கலையில் ஆர்வம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை கிருஷ்ணா… கிருஷ்ணர் : Oh! இத்தனை நேரமும் நீ ஷீத்தலைப் பற்றித்தான் கூறினாயா…. அவளுக்கு tailoring தெரியுமா…. மேகலா : கிருஷ்ணா…., அவள் tailoring வேலை பார்த்து சம்பாதிக்கவும் செய்கிறாள்…. கிருஷ்ணர் : Oh! boutique வைத்திருக்கிறாளா…. Designer blouse தைப்பாளா…. மேகலா : Stop…. stop…. blouse-லாம் இப்பத்தான் தைக்க ஆரம்பித்திருக்கிறாள் கிருஷ்ணா… ஆரம்பத்தில் அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒர