Posts

Showing posts from July, 2021

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 3

மேகலா   : ‘வண்டு கட்டுறது” – அப்படீன்னா, குழம்புச் சட்டியை வெறுமனே மூடி போட்டு மூடி வைத்தால், மூடியிலிருந்து வேர்த்து தண்ணீர் ஒழுகி, குழம்பு கெட்டு விடலாம். அதனால், பாத்திரத்தை துணியால் கட்டி, அதன் மீது மூடி போடுவார்கள். கிருஷ்ணர்  : Oh! அப்படியா…. ஆமாம், அந்தச் சட்டியில் என்ன இருக்கும்? மேகலா  :  ச்சுக்கா…. கமகம சுக்கா கிருஷ்ணா….  அந்த குழம்புச் சட்டியை அடுப்பில் ஏற்றி சுட வைத்தால், உறைந்து கிடக்கும் கொழுப்பு உருகி, சுக்கா வாசனையில் ஊரே மணமணக்கும்.  அந்தச் சுவைக்கு இந்த உலகம் ஈடாகுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இதுக்கு மேலே இந்தக் கதை எனக்கு நல்லா தெரியும்…. உங்க ‘ஐயாமா’ வீடு, கிராமத்து வீடு போல, ஓடு பதித்ததாக…, மாடு கட்டப்பட்டதாக இல்லையோ மேகலா… மேகலா  : கிருஷ்ணா…. எங்க அப்பா சின்னப்புள்ளையாக இருந்த போது…, இந்தப் பெரிய வீடு கிடையாது கிருஷ்ணா… அது வெட்ட வெளியாகத்தான இருந்திருக்கும். அங்குதான் மாடு கட்டப்பட்டிருக்கும். எங்க ஐயாமா, ஆடு, மாடு வளர்த்துதான், தன் ‘சிறுவாடு’ பணத்தை சம்பாதித்திருக்கிறார். வீட்டின் பின்புறம், எங்க ஐயாப்பாவோட நிலம் இருக்கும். அதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப்

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 2

கிருஷ்ணர்   : நெசம்மாவா மேகலா…. நீ பூலாவூரணிக்காரியா…. எனக்குத் தெரியாமப் போச்சே…. உங்க ஊரின் பெயரிலேயே ஊரணி இருக்கே…. அப்போ, வாய்க்கா வரப்பு…. வயல்வெளி இதெல்லாம் கிடையாதா….? மேகலா  : கிருஷ்ணா! எங்க ஊரு வானம் பார்த்த பூமி…. நான் சின்னப்புள்ளையா இருக்கும் போது, காளியம்மன் கோயிலுக்கு வலப்புறம் ஒரு கிணறு உண்டு…. அந்தக் கிணற்றில், தண்ணி ‘கெத்து கெத்துணு’ இருக்கிறத பார்த்திருக்கிறேன். ஊர் மக்கள் அதில் ‘டைவ்’ அடித்து குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், வயல்வெளி எல்லாம் கிடையாது என்பதால், வயல் வரப்பும் எங்க ஊரில் பார்த்ததில்லை. நாங்கள் school-ல் படிக்கும் போது, குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிடப் போவோம். நள்ளிரவு நேரம் வரைக்கும் பூஜை நடக்கும் கிருஷ்ணா….  உருமி மேளத்தின் வேகமும், ‘அரோகரா’ என்று மக்கள் எழுப்பும் சப்தமும்…, சாமி ஆடுபவரை உசுப்பி விடும்…  ‘ஜிங்கு ஜிங்கு’ என்று சாமி வரும்; அருள்வாக்கு சொல்லுவார். விபூதி பிரசாதம் வாங்க எல்லோரும் முண்டியடிச்சி வருவார்கள். ‘சாமியாடி’, ‘உஸ்…உஸ்’ என்று குரல் கொடுத்து விபூதி பூசி விட்டு அருள்வாக்கு சொல்லுவார். கிருஷ்ணர்  : ஆஹா…. இதத்தான் நான் எதிர்பார்

எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 1

கி ருஷ்ணர்   : மேகலா! என்ன topic-ல பேசலாம். நீ தான் topic சொல்லணும். சரி…. நீ ’கிராமீயம்’ என்று எதை நினைக்கிறாய்…. பாமரத்தனத்தையா…., வெள்ளந்தித் தனத்தையா….? மேகலா  : கிருஷ்ணா…, கிராமீயம் என்று மக்களுடைய தன்மையைக் குறித்துக் கேட்கிறாயா… இல்லை கிராமீய வாழ்க்கை முறையைக் கேட்கிறாயா….? எனக்குக் கொஞ்சம் புரியலயே கிருஷ்ணா…? கிருஷ்ணர்  : பேசணும்ணு ஆரம்பிச்சாச்சு…. ‘கிராமீயம்’…., ‘மண்வாசனை’…. வாழ்க்கை முறை எல்லாம் தான் பேசலாமே….  தலைப்பு, ‘கிராமீயம்’. நீ எதையெல்லாம் கிராமீயத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாயோ, எல்லாவற்றையும் பேசலாம். மேகலா  : Oh! எனக்குப் பிடிச்ச title கிருஷ்ணா… கிருஷ்ணர்  : நீ இப்போ சமீபத்துல, ‘களத்துமேடு’ என்ற தலைப்புல ஒரு சின்ன script’ எழுதியிருந்தாய் அல்லவா….. அந்த ‘களத்துமேடு’ என்ற சொல், எனக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சி மேகலா…. அந்த நினைவாகவே இருந்தேனா, உன்னைப் பார்த்ததும், ‘களத்துமேடு’, ‘கிராமீயம்’, ‘வயக்காடு’, ’வயல் வரப்பு’ என்றெல்லாம் பேசணும்னு தோணுச்சி… மேகலா  : ‘களத்துமேடு’ உனக்குப் பிடிக்குமா கிருஷ்ணா….. அழகான தெள்ளுதமிழ் வார்த்தை…. கிருஷ்ணர்  : இங்க பாரும்மா…. ந

விருதினைத் திருப்பித் தருகிறேன் - பகுதி 2 (நிறைவுப் பகுதி)

மேகலா   : பாலியல் பலாத்கார உண்மையை…. உண்மை, உரச, உரச தீப்பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டி விடும் என்று பயப்படுகிறாரோ என்னவோ…. விருது வழங்கப்படும் என்ற அறிவிப்புதான் வந்திருக்கு…. அதற்குள் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்து விட்டது. ‘மறுபரிசீலனை’ செய்யப்படும் என்றும் சொல்லி, விருதைத் தூக்கி உள்ளே வைத்து விட்டார்கள்.   இருட்டுக்குள் மட்டுமே புலி மாதிரி தெரியும் இந்தப் பூனை சொல்லுது, ‘இந்த விருதினை நான், அகாடமிக்கே திருப்பித் தருகிறேன்.  O.N.V. Kurup வழங்கும் மூன்று லட்ச ரூபாயுடன் என்னுடைய இரண்டு லட்சம் சேர்த்து கேரள அரசிற்கு நிவாரண நிதியாகத் தருகிறேன்’ – என்று speech கொடுக்கிறார் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : என்ன…. என்ன சொல்றாரு…. இன்னும் வழங்காத விருதினைத் திருப்பித் தருகிறாரா…. என்ன மேகலா… Social media பார்த்துக்கிட்டா இருந்தது…. மேகலா  : கிருஷ்ணா…. தொவைச்சி தொங்க விட்டுட்டாங்கல்ல…. அதுவும் விருதைத் திருப்பித் தரேன்னு சொன்னதை திருப்பித் திருப்பி, சொல்லிச் சொல்லி, ‘ஏண்டாப்பா, ONV Kurup இந்த விருதை நமக்குக் கொடுப்பதாக announce பண்ணியது என்று சம்பந்தப்பட்டவரை நினைக்க வைத்திருக்கும்… ‘Me too’ விவகாரத்தி

விருதினைத் திருப்பித் தருகிறேன் - பகுதி 1

மேகலா   : கிருஷ்ணா! நான் உங்கிட்ட ஒண்ணு பேசணும்…. கிருஷ்ணர்  : என்னமோ இத்தனை நாள் பேசாம இருந்துட்டு, இன்னைக்கு permission கேட்டு பேசுவது போல பம்முற…. என்ன பேசணும்…. உன் முகத்தையெல்லாம் பார்த்தா, அவ்வளவு நல்லாத் தெரியலியே…  என்ன, ‘கேரள விருது’ சமாச்சாரமா…. மே கலா  : எப்படி…. எப்படி கிருஷ்ணா… முகம் காட்டும் கண்ணாடி மாதிரி, என் முகத்தைப் பார்த்தவுடன் அப்படியே என் உணர்வுகளை கண்டு விட்டாய்….? கிருஷ்ணர்  : உன்னைத் தெரியாதா மேகலா, எனக்கு….? In fact, இன்னும் இந்த விருது சமாச்சாரத்தை நீ என்னிடம் share பண்ணலியே என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். இன்று நீ வரும் போதே உன் முகத்தைப் பார்த்து விட்டேன்.  உன் முகத்தில் வெளிப்படையாகக் கொப்பளித்தது கேலியும் கிண்டலும்.  அதற்குப் பின்னால், அக்னியின் ஜ்வாலை கூட தெரிந்தது….. போதாதா…. நீ என்ன பேசப் போகிறாய் என்று தெரியாதா…. சொல்லு… நீ என்ன பேசப் போகிறாய்….? மேகலா  : என் முகத்தில், அக்னியின் ஜ்வாலை தெரிந்தது என்று நீ சொன்னது, என் மனதில் எத்தனை கோபம் இருக்கும் என்று நீயும் தெரிந்து கொண்டாயல்லவா…. கிருஷ்ணர்  : சரி…. கேரள விருது என்கிறார்களே…, அது என்ன விருது…..