ராமரின் வில்லும், கிருஷ்ணரின் ஸ்ரீ சக்கரமும் - பகுதி 2
மேகலா : இந்த இலச்சினை (ராமர் விட்ட அம்பு, ‘டிராகனை’ குத்தி நின்றது) trending ஆகிக் கொண்டிருந்த வேளையில், பிரதமர், சீனாவின் 59 app-களை செயலிழக்கச் செய்த செயல், அமெரிக்காவை ரொம்பவே குஷிப்படுத்தியது. 'ஓஹ்ஹோ... சீனாவை வீழ்த்த இப்படி ஒரு route இருக்கோ' என்று துள்ளிக் குதிக்க.... நம் நாட்டில், ஒரு heart-warming நிகழ்ச்சி ஒன்று நடந்தது. கிருஷ்ணர் : ஹ்.... ஹேங்.... என்ன அது, எனக்குத் தெரியாமல்.... மேகலா : எல்லாம் நீ நடத்தியதுதானே கிருஷ்ணா; உனக்குத் தெரியாமலா.... ஜூன் 3-ம் தேதி, நாங்களெல்லாம் news பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம். எந்த அறிவிப்பும் இல்லாமல், தனி ஹெலிகாப்டரில், ராணுவ உடை அணிந்த நமது பாரதப் பிரதமர், முப்படைத் தளபதி, ‘பிபின் ராவத்’ மற்றும், Army Chief, General Naravane ஆகியோருடன், லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், நமது ராணுவம் முகாமிட்டிருக்கும் பகுதிக்குச் சென்று, அவர்களிடையே உணர்ச்சி மிகுந்த உரையாற்றினார். கிருஷ்ணர் : பள்ளத்தாக்கின் அந்தப் புறம், இன்னும் சீனப்படை, பீரங்கியோடு முகாமிட்டிருந்த வேளையிலேயே....., என்ன துணிச்சல்...! மேகலா : ஆம்மாம்....