எளிமையான கிராமீய வாழ்க்கை - பகுதி 7
மேகலா : கிருஷ்ணா…. நம்ம நாட்டில், இராமாயணமும், மகாபாரதமும் இன்றுவரை மக்களால் மிகவும் மதிக்கப்படும் புராணங்கள். வேதங்களும், புராணங்களும், புலவர்களால் ஓலைச்சுவடியில்தானே எழுதி வைக்கப்பட்டிருந்தது. அச்சு இயந்திரம் இல்லாத காலத்தில், ஓலைச்சுவடிகளை பிரதி எடுக்க முடியாதல்லவா…. மகாபாரதத்தை, வைசம்பாயனார் எடுத்துரைத்தார். ‘சுகர்’ அதைக் கேட்டு வந்து, மற்றுள்ளோருக்கு மகாபாரதத்தைச் சொன்னார் என்று படித்தோமல்லவா… இது மாதிரி, கதை சொல்வதில் விருப்பமுள்ளவர்கள், மகாபாரதம், இராமாயணம், பாகவதம் என்று கதையை பிறருக்குச் சொல்லிச் சொல்லியே, நாடு முழுவதும் பரவியது. இப்படிக் கதை சொல்வதிலேயே விருப்பமுள்ளவர்களும் உருவாகி, புராணங்களின் தன்மை மாறாமல் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் இல்லையா…. கிருஷ்ணர் : ஆமாம்…., கதை சொல்வதில் விருப்பமுள்ளவர்களால் தான், நம்முடைய புராணம் நிலைத்து இருக்கிறது என்பது உண்மைதான். இதெல்லாம், இந்தப் புராணத்தைக் கேட்கப் பிரியப்படுபவர்களுக்கு மட்டும் தானே சொல்ல முடியும்…. மேகலா : இல்ல கிருஷ்ணா…. ‘சுகர்’ சொல்வது மாதிரியோ….. லவனும், குசனும் பாடியது மாதிரியோ இலக்கியமாகப் பேசினால் தானே மக்கள்