Posts

Showing posts from March, 2020

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 76

மேகலா : ‘நாராயணாஸ்திரம்’ ஏவப்படப் போகிற நிலையில் சென்ற பகுதியை நிறைவு செய்திருந்தோம்..... தொடர்வோம்... நாராயணாஸ்திரம் ஏவப்பட்டது மேகலா : துரோணர் கொல்லப்பட்டவுடன், பயந்து யுத்த களத்தை விட்டு ஓடத் தொடங்கிய கௌரவப்படை வீரர்கள், திடீரென்று உற்சாகத்துடன் யுத்த களத்திற்குத் திரும்பிய காட்சியைப் பார்த்த தருமபுத்திரன், திகைத்தான். இந்த வீரர்களுக்கு மறுபடியும் உற்சாகத்தைக் கொடுத்த வீரன் யார் என்று புரியாமல் தவித்தான். ஒரு வேளை, இந்திரனே கோபம் கொண்டு, துரியோதனனுக்கு உதவி செய்ய வந்து விட்டானோ என்ற அச்சத்தில் தவித்தான். அவன் தவிப்பைப் பார்த்து அர்ஜுனன் சொன்னான், 'கௌரவர் தரப்பிற்கு மீண்டும் நம்பிக்கையை உண்டாக்கி இருப்பவர் யார் என்று எனக்குப் புரிகிறது. அந்த மனிதர் மிகப் பெரிய வீரர். தவறு செய்வதில் வெட்கம் கொள்பவர். வீரத்தில் இந்திரனுக்கும், கோபத்தில் எமனுக்கும், அறிவில் பிரஹஸ்பதிக்கும் நிகரானவர். அவர்தான் துரோணரின் மகன் அஸ்வத்தாமா’. இவ்வாறு கூறி, தருமபுத்திரரின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான், அர்ஜுனன். மேலும் தொடர்ந்த அர்ஜுனன், ‘நிஷ்டையில் அமர்ந்திருந்த துரோணரின் சிகையைப் பிடித்து

வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 5

மேகலா : நான் பார்த்த ஊர்களிலேயே, நினைத்த மாத்திரத்தில் எனக்கு ரொம்பப் பிடித்த ஊர் எது என்று நீ கேட்ட போது, நான் ‘குற்றாலம்’ என்று சொன்னேன். நீ அதற்கான special காரணத்தைக் கேட்டிருந்தாயல்லவா...? சிறு வயது முதலே என்னை ஆட்கொண்ட கொள்ளையழகு, குற்றாலம் தான், கிருஷ்ணா! குற்றாலத்தை நெருங்கும் முன்னேயே.... நம்மை மோதித் தழுவி வரவேற்கும் மூலிகைக் காற்று, வேதத்தின் குரல் போல ஒலிக்கும் சாரல் சப்தம், அருவியின் அருகில் செல்லச் செல்ல, நம் முகத்தில் தெறிக்கும் அருவியின் சாரல்; இதையெல்லாவற்றையும் வருஷம் முழுக்க அனுபவித்துக் கொண்டிருக்கும் குளிர்ச்சியான ‘குற்றாலநாதர்’. அவர் அருகினில் ஆனந்தமாய்க் குடியிருக்கும் ’குழல்வாய்மொழி அம்மையார்’; அவர்களைச் சுற்றியிருக்கும் கடைவீதிகள். இவையெல்லாம் என்னோட குழந்தைப் பருவம் தொட்டே என் மனதைக் கொள்ளையடித்த இயற்கைச் செல்வங்கள். இன்னும் எத்தனை இடங்களைப் பார்த்தாலும், ‘நயாகராவாக’ இருந்தால் கூட, என் மனதுக்குள் குற்றாலத்தோடு compare பண்ணி, ‘நம்ம ஊரு மாதிரி வருமா’ என்று தான் நினைக்கத் தோன்றும், கிருஷ்ணா! கிருஷ்ணர் : சரி.... எனக்கும் குற்றாலம் தான் பிடிக்கும்.... ம

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 75

மேகலா : வெறும் உடலாக இருந்த துரோணரை, திருஷ்டத்யும்னன், கத்தியை வீசி தலையை அறுத்தான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். திருஷ்டத்யும்னனின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய போது, பீமன் மட்டும், உற்சாகத்தில் மூழ்கினான். கௌரவர் தரப்போ நிலைகுலைந்தது. துரியோதனன் யுத்த களத்தை விட்டு விலகினான். சகுனி அந்த இடத்தை விட்டே ஓடினான். கர்ணனும், அதிர்ச்சி அடைந்து, செயலற்றுப் போய், போர்க்களத்தை விட்டு விலகினான். சல்யனும் அவனைப் பின் தொடர்ந்து வெளியேறினான். மற்றொரு புறத்தில், அஸ்வத்தாமா, கௌரவர் படை நான்கு பக்கங்களிலும் சிதறி ஓடுவதைக் கண்டான். துரியோதனனிடம் சென்று, அதன் காரணத்தைக் கேட்க, துரியோதனனும் பதில் சொல்லத் தெரியாமல், வேதனையை வெளிப்படுத்தினான். அஸ்வத்தாமாவின் தந்தை துரோணர் கொல்லப்பட்டார் என்ற விஷயத்தை, அஸ்வத்தாமாவிடம் எப்படிச் சொல்வது என்பது துரியோதனனுக்கு விளங்கவில்லை. சோகம் தாங்காமல், கிருபாச்சாரியாரைக் கூறுமாறு கேட்க, கிருபரும், ‘அஸ்வத்தாமா என்ற யானை இறந்ததாக, தருமன் சொன்னதைக் கேட்ட துரோணர், அஸ்வத்தாமா தான் இறந்தான் என நினைத்து, ஆயுதங்களைத் துறந்து, நிஷ்டையில் ஆழ்ந்த நேரத

வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 4

மேகலா : ‘வடபத்ர சயனப் பெருமாளைத் தரிசிக்கக் கோயிலுக்குள் நுழைந்தேன்’ என்று சென்ற பகுதியில் முடித்திருந்தேனா.... மாலை நேரம் ஐந்து மணியளவில், கோயிலுக்குள் ஏன் இத்தனை கூட்டம் என்று யோசித்துக் கொண்டே, கூட்டம் குறைவாய் இருந்த ‘லக்ஷ்மிநரசிம்மர்’ சன்னிதானத்துக்குள் நுழைந்தேன். விழி மலர்ந்த பார்வையும், கம்பீரமான தோற்றமும், அழகு மகள் லக்ஷ்மித்தாயின் பெருமிதமும், நரசிம்மரின் அழகினைப் பல மடங்காகக் காட்டியது. ‘அகலமான என் கைகளைப் பார். உலகமே, இந்த உள்ளங்கையில் விசாலமாய்க் குடியிருக்கும் போது, உனக்கு மட்டும் இடமில்லாமலா போய் விடும்’. இப்படித்தான் நரசிம்மரின் பார்வை என்னைக் கேட்டது, கிருஷ்ணா! கிருஷ்ணர் : நீயும், உனக்கு ஒரு இடம் book பண்ணிட்டயாக்கும்....? மேகலா : Booking-லாம் இங்கு கிடையாது, கிருஷ்ணா! நம்முடைய அன்பு மட்டும் தான் ’குடியுரிமை’ பெற முடியும். C.A.A, N.R.C இந்தச் சட்டமெல்லாம், நரசிம்மர் உலகத்தில் strict-ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது, கிருஷ்ணா! பக்தியில்லாதவர்கள் எல்லோரும் கையில் passport இல்லாமல் குடியுரிமை மறுக்கப்படும் அகதிகள்தான். யாரும் போராட்டமெல்லாம் கிளப்ப முடியாது. சந்தோஷ

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 74

மேகலா : இரவு நேரத்திலும் யுத்தம் தொடர்ந்தது என்று சென்ற பகுதியின் கடைசியில் பார்த்தோம். துரோணர், துருபதன், விராடன் இருவரையும் கொன்று குவித்தார். அதைக் கண்ட பீமனுக்கு பெரும் கோபம் உண்டாயிற்று. திருஷ்டத்யும்னனைத் தூண்டினான். பீமனால் தூண்டப்பட்ட திருஷ்டத்யும்னன் துரோணரை எதிர்த்தான். இருவருக்குமிடையே கடுமையான யுத்தம் நடந்தது. அந்த நிலையில், பதினான்காவது நாள் யுத்தம் முடிவடைந்தது. பதினைந்தாம் நாள் யுத்தத்தில், துரோணரும், அர்ஜுனனும் போரிட்டார்கள். குருவும், சிஷ்யனும் போரிட்ட போது, இருவரில் யார் உயர்ந்தவர் என்று ஒருவராலும் கூற முடியவில்லை. பிரளய காலத்தில் உலகை அழிக்கும் ஈஸ்வரன், இருகூறாகத் தன்னைப் பிளந்து கொண்டு போர் செய்த மாதிரி இருந்தது. துரோணரிடத்தில் அஸ்திர அறிவு இருந்தது. அர்ஜுனனிடம் அஸ்திர அறிவும், உடல் பலமும் சேர்ந்து இருந்தது. ஒரு நிலையில், துரோணர், பிரம்மாஸ்திரத்தை ஏவினார். பூமியே நடுங்கியது.... கண் மூடிக் கண் திறக்கும் நேரத்திற்குள், எல்லா நதிகளும் எதிர்நோக்கிப் பாய்ந்தன. பேய்க்காற்று வீசியது.... கடல் கொந்தளித்தது.... துரோணரின் பிரம்மாஸ்திரத்தை முறியடிக்க, அர்ஜுனனும்

வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 3

மேகலா : இப்படியே ‘வெட்டி அரட்டையா’ பேசிக்கிட்டிருக்கோமே, வேறு ‘topic' ஒன்றும் கிடையாதா என்று கேட்டியே கிருஷ்ணா; புதுசா ஏதாவது ஒரு title நீதான் சொல்லேன், கிருஷ்ணா! கிருஷ்ணர் : நீதான் ஏதாவது ‘துண்டு’, ‘பாலம்’ அப்படீன்னு தலைப்புச் சொல்லுவாய்.... எனக்கு இப்படீலாம் தலைப்பு கிடைக்க மாட்டேங்குதே... மேகலா : ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி நடிக்காத, கிருஷ்ணா.... எனக்குள்ள இருந்துக்கிட்டு, என்னயவே எழுத வைக்கிறவன், நீ.... உனக்கு ‘தலைப்பு’ கிடைக்க மாட்டேங்குதா.... please...... கிருஷ்ணா...... ஒரு நல்ல தலைப்பு குடு, கிருஷ்ணா..... கிருஷ்ணர் : நீதான் பெரீய்ய.... கவிஞராச்சே...... ரசனையான உன் சின்னச் சின்ன ஆசைகள் என்னென்ன என்று சொல்லேன், கேட்கிறேன்....., ரசனையாகச் சொல்லணும்மா..... மேகலா : என்னைக் கிண்டல் பண்றியா, கிருஷ்ணா. நான் ஒண்ணும் பெரிய கவிஞரெல்லாம் கிடையாது; ஏதோ, எனக்குப் பிடித்ததை ரசிப்பேன். நான் ரசிப்பதை, என் நெஞ்சு முழுக்க நிறைத்து, அதை அப்படியே, என் எழுத்துக்களில் கொண்டு வருவேன். கிருஷ்ணர் : அதான்.... அதான்.... அதைத்தான் சொல்லச் சொல்கிறேன்.... மேகலா : கிருஷ்ணா! சின்னச்

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 73

மேகலா : யுத்த களத்தில், கடோத்கஜன் இறந்ததைப் பார்த்து கிருஷ்ணர் சந்தோஷப்பட்டார் என்று சென்ற பகுதியின் முடிவில் பார்த்தோம். மலை போல் விழுந்து கிடந்த கடோத்கஜனைப் பார்த்து, பாண்டவர் தரப்பில் எல்லோரும் கதறினார்கள். ஆனால், கிருஷ்ணரோ, மிகவும் மகிழ்ச்சி கொண்டவராக, அர்ஜுனனைக் கட்டிக் கொண்டார். அவர் ஏன் கடோத்கஜனின் மறைவுக்கு அப்படிச் செய்தார் என்று எல்லோரும் வியந்தனர். அர்ஜுனன், கிருஷ்ணரின் செயலால் மனம் குழம்பினான். அவருடைய செய்கைக்கு அர்த்தம் கேட்டான். அதற்கு, கிருஷ்ணர் விளக்கம் சொன்னார். ’கடோத்கஜன் மீது கர்ணன் சக்தி ஆயுதத்தை ஏவியதால், இனி உன்னிடம் கர்ணன் வீழப் போகிறான். இந்திரன், சக்தி ஆயுதத்தைக் கர்ணனிடம் தரும் போது, ‘ஒரு முறை மட்டும் தான் சக்தி ஆயுதத்தை நீ ஏவ முடியும்; அதன் பிறகு அது என்னிடமே திரும்பி விடும்’ என்ற நிபந்தனையை விதித்தான். இனி இந்த சக்தி ஆயுதம் கர்ணனுக்குப் பயன்படாது. சக்தி ஆயுதத்தைக் கையில் வைத்திருக்கும் கர்ணனை எமனே வந்தாலும் கூட, எதிர்ப்பது என்பது நடக்காத காரியம். இனி அவனை வீழ்த்துவது நடக்கக்கூடிய காரியமே. ஆனாலும், உண்மையையே பேசுகிறவன்; பெரும் தவம் செய்தவன்; விரதங்க

வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 2

மேகலா : கிருஷ்ணா! பிள்ளையார்பட்டி தரிசனம் பற்றிய விவரத்தோடு இந்தப் பகுதியை ஆரம்பிக்கிறேன், சரியா.... பிள்ளையார்பட்டி தரிசனத்தை வார்த்தைகளால் சொல்லணுமா கிருஷ்ணா...? பிள்ளையாரின் அழகைச் சொல்வதற்கு வார்த்தைகள் தான் இருக்கிறதா...., எனக்குத் தெரியவில்லை! கிருஷ்ணா! என்னைப் பொறுத்த வரையில்..., பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயில்..... எந்நாளும், எந்த நேரமும், சதுர்த்தி தினக் கொண்டாட்டம் தான்! எப்பொழுது சென்றாலும், கருவறை சமீபத்தில் நின்று தரிசனம் பெற முடிகின்ற ஒரே கோயில். விளக்குகளின் ஒளி கூட, கம்பீரமாய் ஜொலிக்கும் அழகு. பிள்ளையாருக்கு தீபாராதனை காட்டப்படும் போது, பிள்ளையாரின் மெருகேறிய தரிசனம், நம்மை புல்லரிக்க வைத்து விடும். நெருக்கமில்லாத கூட்டம்; விரட்டாத பூசாரிகள்; உபசரிக்கும் அமைதி..... எத்தனை நேரமானாலும் உற்று உற்றுப் பார்த்து, தீபத் தட்டை கண்ணில் ஒற்றிக் கொள் என்று சொல்லும் பிள்ளையாரின் மௌன பாஷை.....; அடேயப்பா..... நின்றேன்; நிதானமாய்ப் பிள்ளையாரைப் பார்த்தேன். தீப விளக்குகள் அவரின் கருணையை எடுத்துக் காட்டிய விதத்தில், மெய் மறந்தேன். சற்றே நடந்து வந்தேன். கையை நீட்டி விபூதி பிரசாதத

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - பகுதி 72

மேகலா : குருக்ஷேத்திரத்தில் யுத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர் தரப்பில் பெரும் அழிவை உண்டாக்கிய துரோணரை, பீமனும், அர்ஜுனனும் எதிர்த்தார்கள். சாத்யகி, சோமதத்தனை எதிர்த்து கொன்றான். துரோணர், தருமனை யுத்த களத்தை விட்டுத் துரத்தி அடித்தார். அப்போது, மாலை நேரம் மங்கி, யுத்த பூமியை இருள் கவ்வியது. அந்த இருளில் வீரர்களால் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூட முடியவில்லை. அப்போது, பாண்டவர்களும், கௌரவர்களும் விளக்குகளை எரிய வைத்தார்கள். யானைகள், குதிரைகள், தேர்கள் ஆகியவற்றின் மீதெல்லாம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. அந்த விளக்குகளின் வெளிச்சத்தில் இரண்டு படைகளின் ஆயுதங்கள் மின்னல் போல பளிச்சிட்டன. அந்த மாதிரி இருளில், அது வரை யுத்தம் நடந்ததேயில்லை. அந்த இருளில் தொடர்ந்த யுத்தத்தில், அஸ்வத்தாமாவினால் வீழ்த்தப்பட்ட கடோத்கஜன் தெளிவடைந்து, மீண்டும் அஸ்வத்தாமாவை எதிர்த்தான். அஸ்வத்தாமா, கடோத்கஜனால் அடிக்கப்பட்டு வீழ்ந்து மூர்ச்சையானான். அதன் பிறகு, தெளிவடைந்த அஸ்வத்தாமா, கடோத்கஜனை மயக்கமுறச் செய்தான். துரியோதனனுக்கும், பீமனுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடந்தது. பீமன் எறிந்த கதையினால்