Posts

Showing posts from June, 2024

பெண்களால் முடியும் - பாகம் 10

மேகலா   : சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது என்பது, பொறுப்பு வாய்ந்த ஒரு வேலை. அதுவும் எந்த நேரத்திலும், குற்றம் செய்தவர்களைக் கையாளும் திறமையும், பலமும் கொண்டவர்கள் பணி புரியும் வேலையல்லவா… அதான் கொஞ்சம் அதிசயமாகப் பேசி விட்டேன். நீ சொன்ன பிறகுதான்…, போர்ப்பயிற்சி எடுக்கும் வீர பெண்மணிகள், திருவிளையாடல் புராண காலத்திலிருந்தே, நம்ம நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது…. கிருஷ்ணர்  : நம்ம நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே, தன் நாட்டைக் காக்க போராடும் பெண்கள் இருப்பாங்கல்ல…. மேகலா  : கட்டாயம் இருப்பாங்க கிருஷ்ணா…. இப்படிப்பட்ட வீரம் நிறைந்த பெண்கள்…, தங்களின் வீரத்தை, நேர்மையை காட்டும் துறை ஒன்று பாரத நாட்டில் இருக்கிறது கிருஷ்ணா…. அதுதான் காவல் துறை.  இந்த காவல் துறையில், நேர்மையான பெண் போலீஸ் அதிகாரிகள் நிறைய பேர் இருந்தாலும், அரசாங்கத்தாலும், மக்களாலும் பெருமையுடன் பார்க்கப்பட்டவர் தான் கிரண் பேடி I. P. S. அவர்கள்.  அவர் வேலை செய்யும் இடங்களில், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்பவர் யாராக இருந்தாலும்…, அது அரசியல்வாதியாக இருந்தாலும் கூட, துணிந்து action எடுப்பார்… அதனால், பலருடைய விமர

பெண்களால் முடியும் - பாகம் 9

கிருஷ்ணர்   : வேற சாதனைப் பெண்கள் யார் யாரென்று சொல்லப் போகிறாய்… மேகலா  : கிருஷ்ணா…, சமுதாயத்தில், மனிதர்களுக்கு, உழைப்பு, சம்பாத்தியம், பக்தி, நிம்மதி, திருப்தி, தோல்வி, இயலாமை, போராட்டம், என்பது எவ்வளவு நிதர்சனமோ…, அந்த அளவுக்கு, விளையாட்டு, வீரம் என்பதும் நிதர்சனமானது கிருஷ்ணா…. உழைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ…, அதே அளவு முக்கியத்துவத்தை, விளையாட்டுக்கும் கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… சின்ன வயதில் குழந்தைகளாக இருக்கும் பொழுது, ஆம்பிளைப் பிள்ளைகள், அந்தக் காலங்களில், கோலி, பம்பரம், கிட்டிப்புள்ளு, கபடி என்று விளையாடுவார்கள்… பொம்பளப் புள்ளைங்க, பாண்டி, பல்லாங்குழி, என்றும்…, இந்தக் காலங்களில், ஆண்பிள்ளைகள், கிரிக்கெட், பந்து விளையாட்டு என்று விளையாட…, பெண் பிள்ளைகள், ஒளிந்து விளையாட்டு, ஓடிப்பிடித்து விளையாடுதல் என்று விளையாடுவதை, அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே வைத்துக் கொள்கிறார்கள்… வளர்ந்த பிள்ளைகள், நீச்சல், இளவட்டக்கல் தூக்குவது, சைக்கிள் ரேஸ்…., பொங்கல் திருவிழா என்றால், காளையை அடக்குதல், மஞ்சு விரட்டு என்று வீரமும், விளையாட்டும், மக்களோட வாழ்க்கையின் அம்சமாக

பெண்களால் முடியும் - பாகம் 8

மேகலா   : கிருஷ்ணா…, அன்றாட வாழ்க்கையில், வாழ்வதே பெரும் சாதனையாகிப் போன பெண்களைத்தானே பார்த்திருக்கிறோம்…. சாதனை படைப்பதற்கே பிறந்த பெண்களைத் தெரியுமா… எத்தனையோ பெண்கள்…, தன் கைப்பக்குவத்தால், பலருடைய வயிறையும், மனசையும் குளிரச் செய்திருக்கிறார்கள். அன்னபூரணியாக அமுது படைத்து, பலருடைய பசியை ஆற்றியிருக்கிறார்கள். சொல்லப் போனால்…, சோறு படைப்பது என்பது பெண்களின் கடமையும்கூட… இப்படிப்பட்ட அன்னபூரணிகள் மத்தியில், ஒரு அன்னையின் கைப்பக்குவத்தில் மனம் மகிழ்ந்து இறையனாரே இறங்கி வந்த கதை தெரியுமா கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : நீ யாரைச் சொல்லுகிறாய்…, சபரியா…, என் அன்னை யசோதையா… இறையனார் இறங்கி வந்த கதை என்றால்…, ஓ…, வந்திக்கிழவியைச் சொல்லுகிறாயா….. ஸ்.., ஸ்…, ஆமாம்…, ஆமாம்…. நைவேத்யமாக…, உதிர்ந்த பிட்டுக்களை படைத்ததினால், இறையனாருக்கு பிட்டின் சுவை பிடித்து விட்டது போலும். அன்னையின் கைமணம் என்றால் சும்மாவா…. வந்தியைத் தேடி இறையனார் ஏன் வந்தார்…, எப்படி வந்தார் என்ற கதையைச் சொல்லேன்…. மேகலா  : கிருஷ்ணா…, மாணிக்கவாசகருக்காக இறையனார் செய்த லீலைகள் ஒண்ணா, ரெண்டா… நரியை பரியாக்கினார்…, மீண்டும் பரியை நரிய

பெண்களால் முடியும் - பாகம் 7

மேகலா  : எந்த வேலையில் பங்கெடுக்கவில்லை கிருஷ்ணா… கணவன் ஏதோ வியாபாரம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நான் சொல்வதெல்லாம், நடுத்தரமாக உள்ளவர்கள் வாழ்க்கையில் நடப்பது… கணவருக்கு அவசரமாக வெளியூரூக்கு purchase பண்ண செல்ல வேண்டியிருந்தால்…, அன்று bank-ல் cheque-ஐ, collection-க்கு போடப் போக வேண்டுமென்றால், அதை உடனே மனைவியிடம் தான் செய்யச் சொல்லுவான் கிருஷ்ணா… எத்தனை ஆடிட்டர்கள், ஆபீசர்கள், வியாபாரிகள், தங்கள் clerical work-களை, தன் மனைவியைச் செய்யச் சொல்லுகிறார்கள்…. Rotation-க்கு பணம் பத்தவில்லை என்றால்…, வீட்டுக்காரம்மாவிடம் தான் கேட்பார்கள். இன்னும் ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…. பழைய சிவகாசியின் மையப்பகுதிதான்…, அந்தக் காலத்தில் மக்கள் சேர்ந்து வாழ்ந்த பகுதி… இன்று remote area-விலெல்லாம், மக்கள் வீடு கட்டி வாழச் சென்றிருந்தாலும்…, அந்தக் காலத்து சிவகாசி மக்கள், உறவினர்களோடு, ஒரே compound-ல், பக்கத்துப் பக்கத்தில் வீடு கட்டி, ‘row house’ மாதிரி வாழ்ந்து வந்திருக்கின்றனர். அண்ணாச்சிமார்கள்…, மொத்தக்கடை வியாபாரம் பார்த்தால், வீட்டில் பெண்கள், சிறு சிறு பெட்டிக்கடை வைத்