அழகு - பகுதி 5
மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா….! ஆனாலும், சில இடங்களில், சில தருணங்களில் அழகின் ஆக்ரமிப்பு நம்மை, மெய் சிலிர்க்கச் செய்து விடும். இருள் விலகாத வைகறைப் பொழுதில்…., பறவைகளின் ‘கிரீச், கிரீச்’ என்ற சப்தத்தின் பின்னணியில், சூரியன் மெதுவாய், மிக மெதுவாய் தன் கதிர்களால் நம்மை வருடிக் கொடுக்கும் தருணம்…. தோட்டத்தின் இலைகள் நீர் ஊற்றாமலேயே சில்லென்று இதமாய் வீசும் காற்றில் அசைந்து கொடுக்கும்… இந்த காலைப் பொழுதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூக்கும் சின்னப்பூ கூட, தோட்டத்தின் அழகை தூக்கிக் காட்டும். குளிர் காலத்துக்கென்றே ஊர்ந்து வரும் ‘ரயில் பூச்சி’ கூட, வீட்டின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்கும்…. செடிக்குச் செடி மகரந்தத்தைப் பரப்பும் பட்டாம்பூச்சி என் வீட்டையே வண்ணமயமாக்கும் அழகு…, காலையின் அழகு. தினந்தோறும் வேலையின் பரபரப்பில் கூட என்னை வருட வைக்கும் அழகு…. கிருஷ்ணர் : தினந்தோறும் நடக்கிற காலை நேரத்து நிகழ்ச்சி…. இதை நீ ரசிச்சி சொல்லும் போது, உன் வீடே அழகாய் இருக்கு மேகலா…. இதே போல, வெகு சாதாரணமான நிகழ்வினை அழகாய்ச் சொல்லு மேகலா…, கேட்கிறேன்…. மேகலா : நான் எங்க கிருஷ்ணா…, அழகாய்ச் சொல்லுகிறே