Maturity - பாகம் 11 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : அனுபவங்களைக் கடப்பது, மனிதனுக்கு அன்றாட நிகழ்ச்சிதானே… ஆனால், ஒவ்வொரு நாளும், தான் கடந்த அனுபவத்தை recall பண்ணி, எது நல்லது…, எது கெட்டது…, எதைச் செய்யலாம்…, எதைச் செய்யக் கூடாது…, எதனால் இது நடந்தது…, இது பாவமா…, புண்ணியமா…, என்று ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்க வேண்டும்… இன்று நடந்த விஷயத்தில், எத்தனை பேர் பயனடைந்தார்கள்…, எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்…, என்று ஒளிவு மறைவு இல்லாமல் யோசிக்க வேண்டும்…. உன் மனசாட்சி வலியுறுத்துவதை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்…. திறமையாளர்கள், அவமானத்தைத் தடுக்க…, கர்வப் பட்டுக் கொண்டு, தன்னைத் தானே உற்சாகப் படுத்துவதெல்லாம் சரி…. ஆனால், அந்தக் கர்வம் அவனுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் வரைக்கும் தான்… அதையே தன் அடையாளமாக மனுஷன் பின்பற்றினால்.., அந்தக் கர்வமே, அவனை அழித்து விடும்… கர்வம், maturity-யை promote பண்ணணுமே தவிர, மனுஷனை அழிச்சிடக் கூடாது… அதற்காகத்தான் சொல்லுகிறேன்… மனசாட்சி எச்சரிப்பதை, காது கொடுத்துக் கேட்கணும்… அதே மாதிரி, ஒரு அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை மனிதன் நன்றாக மனதில் நிலை நிறுத்தணும். நல்ல செயல் என்றால