தன்னம்பிக்கை - பாகம் 5
மேகலா : கிருஷ்ணா…, எனக்கு ஒரு சந்தேகம் கிருஷ்ணா… கிருஷ்ணர் : இப்பவரைக்கும் நல்லாத்தான போய்க்கிட்டு இருக்கு… அதுல என்ன சந்தேகம் வந்தது…. மேகலா : ஐயோ கிருஷ்ணா… இதுவரைக்கும் பேசுனதுல எனக்கு ஒரு doubt-ம் கிடையாது… என்னோட சந்தேகம்…, ஒரு செயல்திறன் மிக்கவன், தன்னுடைய முயற்சியில் தோத்துப் போனாலோ…, தடைகளை சந்திக்கும் போதோ…, எல்லாவற்றையும் தாண்டி, எப்படி ஜெயிப்பான், அவன், தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வான்… அது கஷ்டமில்லையா… உதாரணத்திற்கு, பாண்டவர்களுக்கு, பன்னிரண்டு வருடம் வனவாசம்…, ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மறுபடியும் தங்கள் உரிமையை மீட்க எப்படி முடியும்… பன்னிரண்டு வருடங்கள் தங்குவதற்கு சரியான வீடு கிடையாது…, சாப்பாடு கிடையாது. காட்டிற்குள் போர்ப்பயிற்சி செய்தார்களா…, தெரியாது. அவர்களுடைய ஒரே நம்பிக்கை, ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… படைபலமோ.., பணபலமோ இல்லாத போது, பின் எப்படி மீண்டு வர முடியும்…? கிருஷ்ணர் : இறுதியில் நீ சொன்ன வார்த்தை என்ன…? மேகலா : அவர்களுடைய ஒரே நம்பிக்கை ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… அப்படீன்னு சொன்னேன்… கி...