Maturity - பாகம் 2
கிருஷ்ணர் : ஒரு சம்பவத்தில், தன்னுடைய அறியாமையை விலக்கிய ஒருவரைச் சொல்ல முடியுமா…? மேகலா : ஒரே சம்பவத்தின் மூலம், சாதாரண மக்களுக்கு ‘அறியாமை’ விலகும் என்பது ரொம்ப கஷ்டம் கிருஷ்ணா…. பணப் பிரச்னையில், நம்முடைய இயலாமை, நமக்கு பொறுமையைக் கற்றுக் கொடுக்கும். ஒரு செயல், தோல்வியில் முடியும் போது, அது தரும் வலி, அந்த தோல்வியை முறியடிக்கக் கற்றுக் கொடுக்கும்… இப்படி ஒவ்வொரு சம்பவமும், மெள்ள மெள்ள ஒரு மனிதனை, வாழ்க்கையை அறிந்து கொள்ளக் கற்றுக் கொடுக்கும்….. ஒரே சம்பவம், மனிதனை புரட்டிப் போடுமா…. ஹாங்…! எனக்கு வால்மீகி முனிவர் கதை ஞாபகம் வந்து விட்டது கிருஷ்ணா…. ராமாயணத்தை எழுதிய வால்மீகி, மஹரிஷியாவதற்கு முன்னாடி, ‘ரத்னாகர்’ என்னும் வழிப்பறிக் கொள்ளைக்காரர். காட்டு வழியே செல்லும் வழிப்போக்கர்களை வழிமறித்து, அவர்களிடமிருக்கும் பொருட்களை அபகரிக்கும் கொடுந்தொழில் செய்து வந்தார். சில சமயங்களில் கொலை கூட செய்து விடுவதுண்டு… இப்படியான காலகட்டத்தில், அந்தக் காட்டு வழியில், வேத விற்பன்னர்கள் கூட்டமாக வந்தார்கள். பார்ப்பதற்கு செல்வச் செழிப்பாக இருந்தவர்களிடம் கொள்ளையடிக்க, கொள்ளைக்காரர் அவர்களை வழிமறித