Maturity - பாகம் 7
கிருஷ்ணர் : ‘வெற்றிப் படிக்கட்டு’ என்ற தலைப்பில், வசந்த்குமார் அண்ணாச்சி என்ன சொல்கிறார். தோல்விகள் எப்படி நம்மை வெற்றியை நோக்கிச் செல்லும் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறதோ…, அதே மாதிரி, அடுத்தவர்களின் கேலியும் கிண்டலும் கூட, நமக்கு சிறந்த பாடம் தான். பிறத்தியாரின் பொறாமை நமக்கு motivation மட்டுமல்ல…, நம்முடைய அறிவைத் தெளிவாக்கி, நம்மை பக்குவமடையச் செய்யும் மிகச் சிறந்த ‘கிரியாஊக்கி’…. மகாபாரதத்தில் நீ பார்த்திருக்கலாம்… குருக்ஷேத்திரப் போரில், துரியோதனன், பீமனை, ‘பீமா, அடுப்படியில் இருக்க வேண்டிய நீ இங்கு எதற்கு வந்திருக்கிறாய்… இது போர்க்களம்…. சாப்பாட்டு ராமனாகிய உனக்கு இங்கு என்ன வேலை’…. என்று கேலி பேசுவான்… இறுதியில், பீமனால்தான் துரியோதனன் வதம் செய்யப்படுவான்… கேலி பேசுபவர்களினால், நம்முடைய தெளிவு என்றும் தடை படாது… தடை படக் கூடாது…. மேகலா : Yes, boss….! இப்படி கேலிகளாலும், அவமானங்களாலும் பாதிக்கப்பட்ட திறமைசாலிகள், தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு பக்குவம் அடைகிறார்கள்…, இல்லையா கிருஷ்ணா…. அவர்களுக்கு, நம்மைச் சுற்றியிருப்பவர்களை விட…, நாமதான் ‘திறமைசாலி’ என்ற கர்வம் வந்து