அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 7
கிருஷ்ணர் : நீ எந்த உலகத்தில் இருக்கிறாய் மேகலா… கண்டுபிடித்தது நேற்றைய விஞ்ஞானிதான்… Satellite-ஐ launch பண்ணியது இன்றைய காலத்தில்தானே…. விஞ்ஞானிகளின் சிந்திக்கும் திறன் எப்பவும் ஒரே மாதிரிதான். அதனால்தான், புராண காலத்திலிருந்தே புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இருந்தாலும்…, சாதனங்களும், சாதனைகளும் படைப்பதற்கு, காலங்களும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டாமா… ஏவுகலத்தை விண்ணில் தவழ விட்டது நேற்றைய விஞ்ஞானி என்றாலும், அது மிதக்க விடப்பட்டது…, இந்த 21-ம் நூற்றாண்டில்தானே…. அன்றிலிருந்து technology-யோட வளர்ச்சி அசுரத்தனமானது என்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா, இல்லையா…. 2G யில் ஆரம்பித்து, 3G, 4G…., இப்ப என்ன 5G-யும் வந்து விட்டதா…. விஞ்னானம் அசுரத்தனமாக வளர்வதற்கு இன்றைய காலம் தான் சாதகமாக உள்ளது…. உண்டா…, இல்லையா…. நேற்றைய தலைமுறையினர், இன்னும் 20 ஆண்டுகள் கழித்து நாம் பிறந்திருக்கலாமோ என்று ஏங்க வைக்கிறதா, இல்லையா…. பொய் சொல்லாமல் சொல்லு…. மேகலா : நீயும் ரொம்ப technical-ஆகத்தான் பேசுற கிருஷ்ணா…. இந்த technology இல்லாமல், நாங்கெல்லாம் வாழலியா கிருஷ்ணா…. கிருஷ்ணர் : இப்போ, அது முக