பெண்களால் முடியும் - பாகம் 3
மேகலா : கிருஷ்ணா…., நிறுவனங்கள் அடையாளம் காட்டும் பெண்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை கிருஷ்ணா… நல்ல மனமுடையவர்களைக் கூட, அடையாளம் காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : அப்படியா…. நல்ல மனமுடைய யாரை, எந்த நிறுவனம் அடையாளம் காட்டியிருக்கிறது…. மேகலா : ISKCON மாதிரி வழிபாடு செய்யும் இடங்களில், தினந்தோறும் மக்களுக்கு பசி தீர்ப்பதற்காக அன்னதானம் போடுகிறார்கள். சிலர், ஆத்மதிருப்திக்காக, குறைந்த விலையில் சாப்பாடு கொடுப்பதுண்டு… இதெல்லாம் சிலர் குழுவாகச் சேர்ந்து செய்கிறார்கள்… செய்ய முடியும்…. ஆனால், ஒரு பெண், இப்போ அவங்களுக்கு, 60, 65 வயது இருக்கும். அவர்கள் பசித்து வருபவர்களுக்கு, சும்மா கொடுப்பது போல, 1 ரூபாய்க்கு இட்லி, சட்னி வைத்து கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… அதிலும், யாருடைய உதவியும் இல்லாமல், அந்த இட்லி விற்கும் காசை வைத்தே, பசித்து வருபவர்களுக்கு, அன்னபூரணியாக, 1 ரூபாய்க்கு இட்லி விற்கிறார்கள். ‘கொரோனா’ காலத்தில் கூட, அவர் தன்னுடைய பணியை விடவில்லை. இதைக் கேள்விப்பட்ட ‘மஹிந்திரா க்ரூப்’ M. D., ஆச்சர்யப்பட்டு, அந்த அம்மாவை நேரில் சந்தித்து, அவர்களுக்கு, குடியிருக