உள்ளத்தனையது உயர்வு - பாகம் - 4
மேகலா : அடுத்து, வெடுக்கு வெடுக்குனு பேசுறவங்க…., எதைக் கேட்டாலும், எடுத்தெறிஞ்சி பேசுறவங்க…, முதல் தடவை பார்க்கும் போதே வெறுப்பு வரும் மாதிரி நடந்து கொள்பவர்கள்…, உயர்ந்த உள்ளம் கொண்டவர்களாக இருக்க முடியாது கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்ற… சில சமய சந்தர்ப்பங்களில், நல்லவங்க கூட, ஏதாவது பிரச்னை காரணமாக, மனம் தடுமாறிப் போகலாம்…. அதனால் அவர்கள் எரிச்சலாகப் பேசலாம்… அந்த நேரத்துல நீ அவங்கள பார்த்து…, இப்படிப்பட்டவங்க மோசமானவங்களாத்தான் இருப்பாங்க என்று எப்படிச் சொல்லுகிறாய்… எனக்கென்னவோ, நீ அவசரப்படுகிறயோ என்று தோணுது மேகலா…. மேகலா : இல்ல கிருஷ்ணா… எந்த situation-லும் பொறுமையாக பதில் சொல்பவர்கள் இருக்கும் போது, சாதாரணமாகப் பேசும் போதே…, ‘ஏண்டா இவங்க கிட்ட பேசுகிறோம்’ங்கிற மாதிரி பேசினால், நமக்கு எப்படி கிருஷ்ணா, அவர்கள் மீது மரியாதை உண்டாகும்…. ஒருவருடன் பேசும் போது, நமக்கு உரிமை வேண்டாம், நட்பு வேண்டாம்…, மரியாதை கூட வேண்டாம். ஆனால், வெறுப்பு ஏற்படாமல், சகஜமான மனநிலை கட்டாயம் இருக்க வேண்டும் அல்லவா…. அப்படி, சகஜநிலை இருந்தால்தான், அடுத்து நட்புடன் பழகுபவர்களிடம் நமக்கு