வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 1
கிருஷ்ணர் : ஹாய்! மேகலா…..! என்ன, உன் முகத்தில் எந்த விதமான பாவமும் இல்லையே…. அடுத்து, என்ன தலைப்பில் எழுதலாம் என்று ரொம்ப யோசிக்கிறயோ….? மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. என் புத்திக்கு, நல்ல நல்ல விஷயங்கள் வத்திப் போச்சோ என்று பயமா இருக்கு கிருஷ்ணா! கிருஷ்ணர் : அம்மா! நீ சிந்திக்க மறுக்கிறாய்…. எல்லாம் உன் சோம்பேறித்தனம் தான் காரணம். அறிவு என்பது வத்திப் போகிற சமாச்சாரம் இல்லை… யோசி…. நல்ல தலைப்பை முடிவு செய்…. ஆம்மாம்…., நீ மறுபடியும் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் கோயிலுக்குப் போயிருந்தாயோ…. மேகலா : ஆமாம் கிருஷ்ணா! ஷீத்தல் வந்திருந்தால……. அவதான் கூட்டிப் போகச் சொன்னா…. இத நான் உங்கிட்ட சொல்லலியா கிருஷ்ணா….? கிருஷ்ணர் : எங்க….? இப்பல்லாம் எங்கிட்ட முக்கியமான விஷயங்களைச் சொல்றதேயில்லை. ஷீத்தல் வந்ததைச் சொல்லல…. ஆமாம், எதிலயாவது ‘lock’ ஆகியிருக்கயா…. இப்படி மறக்கிற….? மேகலா : Lock ஆகல கிருஷ்ணா…. Commit ஆகியிருக்கேன்… கிருஷ்ணர் : ‘Commit’ ஆகியிருக்கயா….. எனக்குத் தெரியாமல், எதில் commit ஆகியிருக்கிற…. மேகலா : எல்லாம் உனக்குத் தெரிந்ததுதான் கிருஷ்ணா! கதை சொல்லப் போகிறேன். கிருஷ்ண