ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 102
மேகலா : சஞ்சயனிடம், துரியோதனன் மேலும் சில வார்த்தைகளைப் பேசினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். என்ன பேசினான் என்று இப்போது பார்க்கலாம். ‘இந்த யுத்தத்தில் உயிர் தப்பிப் பிழைத்திருக்கிற வீரர்கள் அனைவரிடமும், துரியோதனன், பீமனால் யுத்த விதிமுறைகளை மீறி தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டான் என்று நீ எடுத்துச் சொல்ல வேண்டும். கர்ணன், பீஷ்மர், துரோணர், பூரிசிரவஸ் ஆகியோரையெல்லாம் குரூரமான முறைகளால் கொலை செய்த பாண்டவர்கள், என்னையும் நிந்திக்கத் தக்க முறையிலேயே வீழ்த்தினார்கள் என்று நீ எல்லோரிடமும் கூறுவாயாக! யுத்த சாஸ்திரத்தை அறிந்த எவன் ஏற்கப் போகிறான், பீமனுடைய செயலை? ‘சஞ்சயா! நீ சென்று என் தாயிடமும், தந்தையிடமும், துரியோதனன் யுத்த பூமியில் அநியாயமான முறையில் வீழ்த்தப்பட்டானே தவிர, வெல்லப்படவில்லை என்ற செய்தியைத் தெரிவிக்க வேண்டும். ‘சஞ்சயா! எடுத்த காரியத்தை முடிக்கிற கிருதவர்மாவுக்கும், புண்ணியாத்மா கிருபருக்கும், பெரும் பாக்கியம் பெற்ற அஸ்வத்தாமாவுக்கும் நான் சொன்னதாக ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். பாண்டவர்களை நம்ப வேண்டாம். யுத்த தர்மம் முழுவதையும் மீறி நடந்து கொண்ட அவர்கள் உங்க