ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 89
மேகலா : கர்ணன், பூமியில் அமிழ்ந்த தேர்ச் சக்கரத்தை பூமியிலிருந்து மேலே எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், கிருஷ்ணர், அர்ஜுனனிடம், ‘தயக்கமின்றி கர்ணனின் கவசத்தைப் பிளந்து அவன் உயிரை மாய்க்கச் சொல்லிக் கூறினார்’ என்பதை சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். கிருஷ்ணர் அவ்வாறு கூறியதும், அர்ஜுனன், பழைய நிகழ்ச்சிகளினால் பெரும் கோபம் கொண்டு, கர்ணனைப் பலமாகத் தாக்கினான். அந்த நேரத்தில் கூட, கர்ணன் தேர்ச் சக்கரத்தைத் தூக்குவதும், அர்ஜுனன் மீது பாணங்களைப் பொழிவதுமாக கடும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து கிருஷ்ணர், அர்ஜுனனை நோக்கி, ‘ இதுதான் தருணம். கர்ணனை அஸ்திரத்தினால் மாய்த்து விடு’ என்று கூற, அர்ஜுனன் ஒரு அம்பை ஏவ, அது அர்ஜுனனின் கொடியை அறுத்துக் கீழே தள்ளியது. கர்ணனின் கொடி பூமியில் சாய்ந்ததைப் பார்த்த கௌரவர் படையே கலங்கியது. அப்போது அர்ஜுனன், ‘அஞ்சலிகம்’ என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தான். அது இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு ஒப்பானது. பெரும் வேகத்துடன் பாயக் கூடியது. விஷ்ணுவின் சக்கரத்துக்கு நிகரானது. அதை வில்லிலே பூட்டிய அர்ஜுனன், கர்ணன் மீது அதைப் பிரயோகித