Posts

Showing posts from July, 2024

பெண்களால் முடியும் - பாகம் 14 (நிறைவுப் பகுதி)

மேகலா   : கிருஷ்ணா…, என்ன மறந்துட்டயா கிருஷ்ணா…. the famous போலிச் சாமியார் பிரேமானந்தா… பாலியல் குற்றச்சாட்டுக்கு உட்பட்டு, சிறையிலடைக்கப்பட்டானே…, நினைவில்லையா கிருஷ்ணா….? கிருஷ்ணர்  : ஓ…, ஆமாம்…, அந்த case-ல தீர்ப்பு சொன்னது…, புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி பானுமதி அம்மாள் அவர்கள்தானே…. மேகலா  :  மனிதர்களுக்குப் பசியெடுத்தால்…, விலங்குகளை வேட்டையாடுவான். அதே மனிதன், மிருகமாய் மாறும் போது, பிஞ்சுக் குழந்தைகளை வேட்டையாடுவான் என்பதுதான், பிரேமானந்தா case-ல் வெளி வந்த அதிர்ச்சியூட்டும் உண்மை…  இந்த case, திருச்சி court-க்கு வந்தது. குற்றவாளியின் சார்பாக வாதாடியது, the famous வக்கீல் ‘ராம் ஜெத்மலானி’… இருப்பினும், குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆதாரப்பூர்வமாக குற்றவாளிதான் என்று நிரூபிக்கப்பட்டவுடன், நீதிபதி, இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார்… இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்…, ஆட்சி மாறும் போது, ஆட்சியாளர் ஆதரவில் குற்றவாளி விடுவிக்கப்பட்டு விடக் கூடாது என்று அழுத்தம் தீர்த்தமாக தீர்ப்பு எழுதி, பேனாவைக் குத்தி எழுந்தார் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அப்படிப் போடு…, இதுவல்லவோ தீர்ப்பு… மேகலா

பெண்களால் முடியும் - பாகம் 13

மேகலா   : மறக்க முடியுமா கிருஷ்ணா…. சபை நிறைந்த பெரியோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், கௌரவர்களின் அழைப்பை ஏற்று தர்மபுத்திரன் சூது ஆடினான். சூது ஆடத் தெரிந்தாலும் பரவாயில்லை… ஆடத் தெரியாதவர்கள், சூது ஆடுவதன் மீது விருப்பம் கொள்ளலாமா கிருஷ்ணா…. பீஷ்மர், துரோணர், கிருபர் என்று தர்மம் தெரிந்தவர்கள் சொல்லச் சொல்ல கேளாமல் சூது ஆடினான்… சும்மா ஆடினாலும் பரவாயில்லை…. கழுத்தில் போட்டிருக்கும் மணிமாலை, ஆடு, மாடு, வீடு என்று எல்லாச் செல்வங்களையும் பணயமாக வைத்து ஆடி, இழந்தான்… நாடிழந்தான்…, தன் மதி இழந்தான்…, கௌரவம் இழந்தான்… இது போதாதென்று, தம்பிகளை பணயமாக வைத்து இழந்து, பின்பு தன்னையும் வைத்திழந்தான்… இதெல்லாம் போகட்டும்… ’உன் மனைவியைப் பணயமாக வைத்து ஜெயித்து விட்டால்…, இழந்த அனைத்தையும் பெற்று விடலாம்’ என்று துரியோதனாதிகள் ஆசை வார்த்தை சொல்ல…, தன் மனைவியையும் பணயமாக வைத்து…, இழந்தான்.   இங்குதான் தர்மத்திலும் முடிச்சு விழுந்தது…, சட்டத்திலும் சிக்கல் வந்தது…  ‘அடிமையாகிய திரௌபதியை சபைக்கு அழைத்து வாருங்கள்’ என்று துரியோதனன் கட்டளையிட்டான்… திரௌபதி காரணம் கேட்க, அழைக்க வந்தவன், ‘தர்

பெண்களால் முடியும் - பாகம் 12

மேகலா   : கண்ணகி…, அமைதியானவள்…, அன்பானவள்…, உலகம் தெரியாத அப்பாவி. அவளை, கோவலனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கின்றனர் பெற்றோர். குடும்பப் பொறுப்பை ஏற்று, இருவரும் சந்தோஷமாகத்தான் குடும்பத்தை நடத்தி வந்தார்கள்…. யார் கண்ணு பட்டதோ…, கோவலன் கவனம், நாட்டியக்காரியான மாதவி பக்கம் திரும்பியது… செல்வந்தனான கோவலன், மாதவிக்காக தன் செல்வம் அனைத்தையும் செல்வழித்தான். மலை போல் செல்வம், கொஞ்சம் கொஞ்சமாக குன்று போலத் தேய்ந்து, இறுதியில் கையிருப்பும் கரைந்து போனது… வாழ்க்கை வாழ்வதற்கே பொருள் தேட வேண்டும் என்ற நிலை வந்ததும், கண்ணகியிடம், ‘ஏதாவது தங்க நகை இருக்கிறதா’ என்று கேட்கிறான். புருஷன் இன்னும் நகை கேட்கிறான் என்று நினைத்து, தன் கால் சிலம்பைக் கழட்டப் போகிறாள். ‘என்னிடம் இருக்கும் கால் சிலம்பை விற்று, உங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்’ என்று மிகவும் மெலிதான குரலில் சொன்னாள்…. வேதனையிலும், அவமானத்திலும் நொந்து போயிருந்த கோவலன், அந்த கால் சிலம்பைப் பெற்றுக் கொண்டு, ‘என் தேவை என்பது, நம் தேவை. நாம், மதுரை நகருக்குச் சென்று, புது வாழ்க்கையை ஆரம்பிப்போம். இந்தக் கால் சிலம்பை விற்று, புதிதாய்

பெண்களால் முடியும் - பாகம் 11

கிருஷ்ணர்   : உலகத்தில், மக்களின் நடவடிக்கைகளால், நன்மையும், தீமையும் நடக்கின்றது….   எப்பொழுதெல்லாம், தர்மம் தொலைந்து, அதர்மம் தலை தூக்குகின்றதோ, அப்பொழுதெல்லாம், அதர்மத்தை அழிக்க யாராவது ஒருவர் தோன்றுவார்…. இதில் ஆணென்ன, பெண்ணென்ன…. மேகலா  : உண்மைதான் கிருஷ்ணா… சாதுர்யமான நடவடிக்கை மட்டுமல்ல கிருஷ்ணா…, சிங்கம் போல சீறிப் பாயும் வீரத்திலும், பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை, வீரப் பெண்மணிகள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா…. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய, நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும், ஒவ்வொரு காலக்கட்டத்தில், தங்கள் தேசத்தைக் காக்க போராடியவர்கள் ஏராளம்… அதிலும் குறிப்பாக, மராட்டிய தேசத்தில், 1857-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், ஜான்சிராணி காட்டிய வீரம் அற்புதம் கிருஷ்ணா… அவர் போரிடும் திறமையைக் கண்ட ஆங்கிலேயர் ஒருவர்…, ’குதிரையின் கடிவாளத்தைப் பற்களால் கடித்துக் கொண்டே குதிரையைச் செலுத்தி, சுழன்று சுழன்று வாள் வீச்சால், ராணி லட்சுமிபாய் நம்மை விரட்டிய போது, நான் திகைத்துப் போனேன்’ என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணா…. ‘ராணி லட்சுமிபாய்’ என்ற இ