கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் - பகுதி 14
மேகலா : ……. அந்தக் கோயிலின் ஒவ்வொரு சிற்பங்களும், மனிதனின் கற்பனைத் திறத்தின் உச்சம். சிற்பங்களின் முக பாவனைகளும், ஆடை அணிகலன்களும் நுணுக்கமாக செதுக்கப்பட்டு, அந்தச் சிலைகளுக்கே உயிரூட்டுவதாக இருக்கும் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ஹாய்சாலா மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், அவர்கள் பெயராலேயே இறையனாரும் ‘ஹாய்சாளேஸ்வரர்’ என்ற திருநாமத்தைத் தாங்கியிருக்கும் அற்புதமான கோயில்… இறைவனின் திருவுருவம் மெய் சிலிர்க்க வைத்தாலும், அதைக் காட்டிலும் சிற்பங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகள் சிலிர்க்கச் செய்வதுதான் யதார்த்தமான உண்மை…. தமிழ்நாட்டில், சிற்பங்களின் கலைக்கூடம் என்று எதைச் சொல்லலாம்… மேகலா : கோயில்கள் நிறைய இருக்கும் ஊர், சிற்பங்களின் கலைக்கூடம் என்று சொல்லலாம் கிருஷ்ணா. அப்படிப் பார்த்தால், பல்லவர்கள், சிற்பக்கலையை தன் உயிர்மூச்சாகக் கருதியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சிற்பக்கலையின் கோயிலாகவே இருந்திருக்கிறது கிருஷ்ணா…. ஏன், ராஜசிம்ம பல்லவரே, சிற்பம் வடிப்பதிலே ஆர்வம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். சாதாரண மனிதர்களுக்கே, ஒரு கலையின் மீது ஈடுபாடு இருந்தால்…, அதை தெய்வப் பணி போலவே நினைத்து