Posts

Showing posts from November, 2020

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 111

  (பாண்டவர்கள் காந்தாரியின் இடத்தை அடைந்து, அவளைச் சந்திக்கிறார்கள்) மேகலா  : அந்த நிலையில் காந்தாரி, யுதிஷ்டிரரைச் சபித்து விட எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து, வியாசர் அங்கே வந்தார். ‘காந்தாரி! ஒரு விஷயத்தை நினைத்துப் பார். யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, துரியோதனன் உன்னை அணுகி, உன்னுடைய ஆசியை வேண்டி நின்றான்.  ‘எனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்று ஆசி கூறுவாயாக’ என்று துரியோதனன் கேட்ட போது, நீ என்ன கூறினாய் என்பதை சற்று எண்ணிப் பார். ‘எங்கே தர்மம் இருக்கிறதோ, அங்கே வெற்றி’ என்று தான் நீ சொன்னாய்.  அதுதான் இப்போது நடந்திருக்கிறது. புண்ணியவதியாகிய நீ சொன்ன மாதிரியே தர்மத்திற்கே வெற்றி கிட்டியிருக்கிறது. ஆகையால், பாண்டவர்கள் விஷயத்தில் நீ கோபம் பாராட்டுவது தகாது’ என்று வியாசர் கூறினார். காந்தாரி சொன்னாள், ‘புத்திர சோகத்தின் காரணமாக என் மனம் நிலை தடுமாறுவது உண்மை தான். ஆனால், பாண்டவர்கள் அழிந்து போக வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பாண்டவர்கள் எவ்வாறு குந்தியினால் பாதுகாக்கப்படத் தக்கவர்களோ, அவ்வாறே என்னாலும் பாதுகாக்கப்படத் தக்கவர்களே.  துச்சாசனன், சகுனி, கர்ணன், துரியோதனன் ஆகிய

நீங்க..., நல்லவரா..., கெட்டவரா...? - பகுதி 3

  கிருஷ்ணர்   : மேகலா, ‘நல்லவர்கள்’ யார் என்று வேறு ஒரு கோணத்தில் பார்க்கலாமா….? மேகலா  : கிருஷ்ணா!  ‘உலகத்திலேயே இவர் ஒருவர் தான் நல்லவர்’ என்று கண்ணை மூடிக் கொண்டே சொல்லலாம் என்று சொல்லக்கூடிய ஒருவரை உதாரணமாய் எடுத்துச் சொல்லலாமா,  கிருஷ்ணா? கிருஷ்ணர்  : நீ யாரைச் சொல்லுகிறாய்….? இரு…, இரு… உன் முகம் காரணம் இல்லாமலேயே bright ஆகுதே…. யாரைப் பற்றிச் சொல்லப் போகிறாய் என்று தெரிஞ்சி போச்…., இருந்தாலும் நீயே சொல்லு…. மேகலா  : ஆம் கிருஷ்ணா…!  ஒரு விளக்கத்தை யார் சொன்னால், இந்த உலகத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை நம்புவார்களோ…., அவர் தான்….. யார் பெயரைக் கேட்டால், கேட்டவர்க்கு தன்னம்பிக்கையும், திருப்தியும் வருமோ….., அவர் தான்….. கிருஷ்ணர்  : The great ’அப்துல் கலாம்’ தானே…..  மதங்களைத் தாண்டி, மனங்களை வென்றவர். ‘எளிமையில் மிகப் பெரிய பணக்காரன்’. உலகமே எழுந்து நின்று salute பண்ணும் ‘மேதை’… மேகலா  : என்ன கிருஷ்ணா…. என் முகம் bright’ ஆகுதே என்று கிண்டல் பண்ணி விட்டு, நீ bright ஆகி விட்டாய்! ஆம்! அப்துல் கலாமின் நடவடிக்கைகளின் மூலமாக, ‘நல்லவர்’ என்பவர் இப்படியும் இருப்பார் என்று பார்க்க

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 110

  பீமன் தப்பித்தான் மேகலா  : தான் பெற்ற நூறு மகன்களும் கொல்லப்பட்ட நிலையில், திருதராஷ்டிர மன்னன், கிளைகள் எல்லாம் வெட்டப்பட்ட மரம் போல் ஆனான். பெரும் சோகத்தில் மூழ்கி விட்ட அந்த மன்னனை, சஞ்சயன், விதுரர், வியாசர் முதலானோர், மரணத்தின் தன்மையையும், துக்கத்தைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொல்லி தேற்றினார்கள். தன்னுடைய இறுதிக் காலத்தில், தனக்குத் துணையாகவும், தன் பிதுர் கடன்களை செலுத்துவதற்கும் ஒரு மகன் கூட உயிருடன் இல்லை என்ற நினைப்பு, திருதராஷ்டிரனை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. ‘மகன்களையும், மந்திரிமார்களையும், உறவினர்களையும் இழந்து விட்ட நான், தன்னந்தனியாக இந்த பூமியில் அலைய வேண்டியது தான். ஏற்கனவே கண்களை இழந்தவனாகிய நான், இப்போது, ராஜ்ஜியத்தையும் இழந்தேன்; மகன்களையும் இழந்தேன்; உறவினர்களையும் இழந்தேன். இனி நான் இழக்க வேண்டியது ஏது மீதியிருக்கிறது?  பரசுராமர், நாரதர், கிருஷ்ணன், பீஷ்மர் போன்றவர்கள் கூறிய நல்லுபதேசங்களை நான் கேட்கவில்லை. அதற்கான பலனை இன்று அடைந்திருக்கிறேன்.  இதற்கு முந்தைய பிறவிகளில் நான் ஏதோ பெரும் பாவத்தைச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிப்

நீங்க..., நல்லவரா..., கெட்டவரா....? - பகுதி 2

மேகலா   : M. G. R. – சுவாரஸ்யமான ’கதாபாத்திரம்’, கிருஷ்ணா. நாணயத்தின் ஒரு பக்கம்; மறு பக்கம்; எப்பக்கம் திருப்பினாலும், overall-ஆ ’நல்லவர்’. சமுதாயத்தில் எல்லோராலும் அறியப்பட்டவராக இருப்பவர்களுக்கு, தங்களுக்கென்று ஒரு வழிமுறை இருப்பதாக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை.   தனக்கு எது ‘சரி’ என்று படுகிறதோ, அதையே தன் மனம் கவர்ந்தவரும் ’ஏற்றுக் கொள்வார்’; ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  அந்த விருப்பம் மாறுபடும் போது, ‘நல்லவர்’ என்ற வடிவினைத்தான் மாற்றிக் கொள்கிறார்கள். M. G. R – ஐப் போல ஒருவரை, ‘நல்லவரா’, ’கெட்டவரா’ என்று வரையறுப்பதற்கு பல views தேவைப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில், அவர் பொய் சொல்லுவாரா, மது அருந்துபவரா, தர்மத்தின் பாதையில் செல்லுபவரா, நேர்மையானவரா என்ற விவரத்தையெல்லாம், அவருடைய சமுதாய நடவடிக்கைகள் மூலமாக ஒரு சிறிதளவு தெரிந்து கொள்ளலாம் என்றாலும், எனக்கு ஒரு சின்ன தெளிவு கிடைக்கிறது கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : என்ன தெளிவு…? கொஞ்சம் விவரமாய்ச் சொல்லு…. மேகலா  : கிருஷ்ணா…., M. G. R. தேசபக்தி கொண்டவர்; அதைத் திரைப்படங்களில் வெளிப்படுத்துவார். ‘மது அருந்துவது’ எவ்வளவு

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 109

மேகலா   : அஸ்வத்தாமா ஏவிய அஸ்திரம், உத்தரையின் கர்ப்பத்திலும் விழும் என்று அவன் கூறியவுடன், கிருஷ்ணர், அஸ்வத்தாமாவிடம்,   ‘உத்தரையின் ஒரு கர்ப்பம் காப்பாற்றப்படட்டும்; மற்ற கர்ப்பங்கள் மீது உன் அஸ்திரம் விழட்டும்.  பாண்டவர்களின் வம்சத்தின் பிரதிநிதியாக ஒருவன் பிழைத்திருக்கட்டும்’ என்று கூறவும், அஸ்வத்தாமா, கோபம் தணியாதவனாக, கிருஷ்ணரைப் பார்த்து வெறுப்புடன் சொன்னான், ‘கேசவரே! உமக்கிருக்கும் பாரபட்சத்தினால் இப்படிப் பேசுகிறீர்.   உத்தரையின் கர்ப்பத்தை நீர் காப்பாற்ற விரும்புவது எனக்குப் புரிகிறது. உத்தரையின் கர்ப்பத்தில், இந்த அஸ்திரம் போய் விழட்டும்’. கிருஷ்ணர், ‘சரி, நீ உன் அஸ்திரத்தை அவ்வாறே செலுத்துவாயாக!  உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசு மரித்துப் பிறக்கட்டும். அதன் பிறகு நான் அதற்கு உயிர் அளிக்கிறேன்.  பெரும் கீர்த்தியோடு வாழுமாறு செய்கிறேன். உன் கெட்ட எண்ணத்தை நீ நிறைவேற்றிக் கொள்’ என்று சொன்னார். இதைக் கேட்ட அஸ்வத்தாமா, ‘என்னுடைய அஸ்திரத்தினால் பொசுங்கப் போகும் கர்ப்பத்திற்கு நீர் உயிர் அளிப்பதாக இருந்தால், அவ்வாறே செய்து கொள்ளுங்கள்’ என்று கூறி விட்டு, தான் விடுத்த பிரம்மச

நீங்க..., நல்லவரா...., கெட்டவரா.....? - பகுதி 1

  கிருஷ்ணர்   : வா…. வந்து உட்கார் மேகலா…. மனதைத் தெளிவாக வைத்துக் கொள். ஒரு டீச்சரிடம், மாணவி பேசுவது போல் மனநிலையை வைத்துக் கொள். மேகலா  : காலத்தை வென்ற பரம்பொருளே! நீ ஏதோ மனதில் தீர்மானம் பண்ணிக் கொண்டு என்னை இயக்குகிறாய்…  உன் முகத்தில் கனிவான அமைதியைப் பார்க்கிறேன். எப்பொழுதும், என்னை நீ தாங்குபவனாகவும், அரவணைப்பவனாகவும் மட்டுமே உணர்கிறேன் கிருஷ்ணா.  உன் ஒவ்வொரு செயலும், என் மனதுக்குள் என்ன கேட்கப் போகிறாயோ என்று பரபரப்பாய் இருக்கிறது கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : மேகலா…. நீ free-யா இரு…. வேற ஒண்ணும் இல்லை…. நீ இப்போ மகாபாரதம் வாசிக்கிறாய் அல்லவா…. ஏதேதோ பேசுவதற்கு…., நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வந்தால், நல்ல topic கிடைக்கலாம் அல்லவா…  நான் என் style-ல் கேள்வி கேட்கிறேன்; நீ உன் style-ல் பதில் சொல்லு…. மேகலா  : Yes boss…. கிருஷ்ணர்  : That’s good! மனிதர்களை நீ எப்படிப் பார்க்கிறாய் மேகலா…..? மேகலா  :  வாழத் தெரிந்தவர்கள்; வாழத் தெரியாதவர்கள்  என்று இரு வகையாகப் பார்க்கிறேன் கிருஷ்ணா… கிருஷ்ணர்  : அப்படீன்னா….?  நல்லவர்கள்; கெட்டவர்கள்  என்று பார்க்கவில்லையா…? மேகலா  : எதன

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 108

மேகலா   : கிருஷ்ணா! ஒரு அஸ்திரம், பாண்டவர்களே இல்லாமற் போகக் கடவது என்று ஏவப்படுகிறது. அதைத் தணிப்பதற்கு ஏவப்படும் அஸ்திரமோ, அஸ்வத்தாமாவையும் சேர்த்து இந்த உலகத்தையே காப்பாற்ற வேண்டும் என்று ஏவப்படுகிறது. ஒருவன், கிருஷ்ணரை சரணம் என்கிறான். கிருஷ்ணர் சொல்லும் ஆலோசனைகள், அறிவுரைகள் அனைத்தையும் கேட்கிறான். இன்னொருவனோ, கிருஷ்ணரையே வீழ்த்தும் ஆயுதத்தை கிருஷ்ணரிடமே கேட்கிறான்.   ஏன் கிருஷ்ணா….? பிறப்பில் கோளாறா…., வளர்ப்பில் கோளாறா….? இன்னும் ‘அஸ்வத்தாமா’வைப் போல பணம் கொடுத்தவனுக்கு விசுவாசமாக வன்முறையில் இறங்குபவர்களை நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.  ஆனால், இது புதுசு…. கிருஷ்ணா…., கிருஷ்ணரின் சக்ராயுதம் நம்மிடம் வந்து விட்டால், ‘கடவுள் பதவி’ நமக்கு கிடைத்து விடும் என்ற இந்தக் கணக்கு புதுசு…. துரோணர் இப்படி இல்லையே கிருஷ்ணா! இவன் எப்படி அவருக்கு மகனாகப் பிறந்தான்…? கிருஷ்ணர்  :  செம்மறியாட்டுக் கூட்டத்தில் குள்ளநரி….  உடம்பெல்லாம் விஷம். யார் முகத்தையும் பார்க்கவும் திராணியற்றுப் போவான் பார். மேகலா  :  உன்னிடம் சக்ராயுதம் கேட்டானே…., அன்றே அவன் கதையை முடிச்சிருக்கணும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  :

கொரோனா படுத்தும் பாடு - பாகம் 3 (நிறைவு)

மேகலா   : நான் ‘மெஹெந்தி’ function-க்கு சிவகாசி போனதைப் பற்றி ஏன் ஷீத்தலிடம் சொல்லவில்லை என்று கேட்டிருந்தாயல்லவா? கிருஷ்ணா…,   எனக்கு கொரோனா தொற்று பரவாமல் அவள் தான் பாதுகாக்கிறாள் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : அதான் சொல்லாமல் கிளம்பினாயா…. மேகலா  : ஹரியிடம் inform பண்ணி விட்டு, ‘ஷீத்தலிடம் சொல்லாத’ என்றும் சொன்னேன் கிருஷ்ணா. கிருஷ்ணர்  :  பயப்படுறவங்க, function-க்குப் போக மாட்டாங்க…. போறவங்க, யார் தடுத்தாலும் போகத்தான் செய்வாங்க…. இதுல எதுக்கு பயப்படுற மாதிரி நடிப்பு….! மேகலா  : இது நடிப்பு இல்ல கிருஷ்ணா… கிருஷ்ணர்  : உன் பொண்ணு, உன் மேல காட்டுற அக்கறைக்கு, நீ கொடுக்கும் மரியாதை என்பாய்….. Function-க்குப் போவது, வெங்கடேஸ்வரியின் பாசத்திற்குக் காட்டும் மரியாதை…., அப்புறம்,  உனக்காக, ‘போகலாம்’…. ‘பாதுகாப்பு’, ’போக வேண்டாம்’ என்பதெல்லாம் கிடையாதாக்கும்…..  நான் நினைக்கிறேன், ‘யார் நம்மைக் கூப்பிடுவார்…., நாமும் ‘கச்சேரி’க்குப் போகலாம்’ என்று நீ ஏங்கிப் போயிருந்தாய் என்பது மட்டும் தான் நிஜம்….  நடிப்புல, நீ ‘செவாலியே award’ வாங்கிருவ மேகலா……  சரி, மெஹந்தி போட்டாயா….? நல்லா…. செவந்துச்சா….? மேக

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 107

  மேகலா   : பீமன் புறப்பட்டுச் செல்லும் வேகத்தையும், அவனுடைய கோபத்தையும் கண்ட கிருஷ்ணர், யுதிஷ்டிரரைப் பார்த்துச் சொன்னார், ‘பீமன் பெரும் கோபத்துடன் அஸ்வத்தாமாவைக் கொல்ல நினைத்துத் தனி ஒருவனாகச் செல்கிறான்.   பெரும் ஆபத்தை நோக்கிச் செல்கிற அவனை நீங்கள் ஏன் தடுக்கவில்லை? ‘யுதிஷ்டிரரே! ‘பிரம்மசிரஸ்’ என்னும் அஸ்திரம் உலகையே எரிக்கக் கூடியது. எல்லா வில்லாளிகளிலும் மேம்பட்டவரான துரோணர், தனது சீடர்களிலேயே சிறந்தவனாகிய அர்ஜுனனுக்கு அதை அளித்தார். அதன் பின்னர், பொறாமை கொண்ட அஸ்வத்தாமா வற்புறுத்தியதால் தான், விருப்பமில்லாமலேயே துரோணர், அவனுக்கு அதை உபதேசித்து, ‘மகனே! யுத்தத்தில் பெரும் ஆபத்தை அடைந்த நிலையில் கூட, இந்த அஸ்திரத்தை மனிதர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது’ என்று கட்டளையிட்டார். ’அஸ்வத்தாமா இதைக் கேட்டு, மன விரக்தி அடைந்து, துவாரகைக்கு என்னைக் காண வந்தான். நீங்கள் அப்போது காட்டில் இருந்தீர்கள். என்னிடம் அவன், ‘பெரும் பராக்கிரமம் உடைய என் தந்தையிடம், அகஸ்தியரிடத்திலிருந்து பெற்ற ‘பிரம்மசிரஸ்’ என்ற அஸ்திரம் இருப்பது உமக்குத் தெரியும். அதை அவர் எனக்கு உபதேசம் செய்திருக்கிறார். யாதவர்களுள் ச