Passion - பாகம் 6
கிருஷ்ணர் : Oh! Very good… நிறைய விஷயங்கள் வெளியே வருதே… நீ, எப்படி pencil drawing-ல், shades-லாம் கொடுத்து…, பக்காவா வரைவாயா…. மேகலா : ’மாயா சித்ராலயா’ மாஸ்டர்…, வார மலர் கதைகளுக்கு வரைவது போல, கோட்டு drawing-தான் வரையக் கற்றுக் கொடுத்தார்கள் கிருஷ்ணா… ஒரு சின்னக் கோடுல, கோபத்தை, சிரிப்பைக் காட்டுவதாகத்தான் படம் வரையக் கற்றுக் கொடுத்தார்கள். Shades வரைவதெல்லாம், புத்தகங்களில் வரும் சித்திரம் பார்த்து, நானாக வரைய முயற்சி செய்வேன்… அதிலும், நான் ஒரு 6 மாசம் தான் கற்றுக் கொண்டேன் கிருஷ்ணா… எனக்கு drawing-ல interest உண்டு…. ஆனா, அதுவே என் passion கிடையாது என்பது இப்பதான் எனக்குப் புரிகிறது கிருஷ்ணா… திடீரென்று, water color painting வரையப் பிடிக்கும்… brush வாங்குவேன்…, acrylic paint வாங்குவேன்…, chart paper வாங்கி வந்து, கலரை mix பண்ணி. பெரிய ‘ரவிவர்மா’ன்னு நினைத்துக் கொண்டு color பண்ணுவேன். சில சமயம் தண்ணீர் அதிகமாகி, நீர்த்துப் போகும்…, சில சமயம் ‘பட்டை’ அடிக்கும்…. ஆனாலும், எப்படியோ paint பண்ணுவேன்… எனக்கு மனசுல ’வலி’ இருக்கும் போது வரைவதுண்டு கிருஷ்ணா… கிருஷ்ணர...