வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 9 (நிறைவுப் பகுதி)
மேகலா : மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு, திருவாதவூராரிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என்பதில் மிகுந்த கவலை உண்டானது. காவலாளிகளை அனுப்பி, ‘திருவாதவூரார் குதிரை வாங்கினாரா; வாங்கியிருந்தால் அழைத்து வருமாறு’ கூறியனுப்பினான். காவலாளிகளும், மன்னனின் செய்தியை சுமந்து கொண்டு, வழியில் திருப்பெருந்துறையில் இறங்கி, கோயிலுக்குள் நுழைந்தனர். அங்கு, தற்செயலாக திருவாதவூராரை சந்தித்தனர். மன்னன், அவர் மீது கோபம் கொண்டுள்ளதாக தெரிவித்து, குதிரைகளை எங்கே என்று கேட்டனர். அச்சமயத்தில், இறையனார் அசரீரியாகக் குரல் கொடுத்தார். ‘ஆவணி மாதம் மூலநட்சத்திரத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லியனுப்பு’ என்றார். கிருஷ்ணர் : பொய்யி…. மேகலா : அப்பச் சொன்னது…, தன்னுடைய பக்தனுக்காக ஆறுதல் பொய்… திருவாதவூராரும், நம்மைக் காப்பாற்றும் இறையனாரே பார்த்துக் கொள்வார் என்று நிம்மதியானார். காவலாளிகளிடம், ‘இன்னும் மூன்று நாட்களில் குதிரைகள் மதுரை வந்து சேரும் என்று மன்னனிடம் சொல்லுங்கள்’ என்றார். காவலாளிகளும் மதுரை சென்று மன்னனிடம் அப்படிக் கூற, மன்னனும் நிம்மதியானான். அந்த சமயத்தில் இறையனாரும், ‘நீ முன்னாடி போ; நான் குதிரைய