Posts

Showing posts from November, 2023

Motivation - பகுதி 4

கிருஷ்ணர்   :   ‘Motivation’ என்பதே, மற்றவரை, உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கவும், சாதனையைச் செய்ய வைப்பதும் தானே….   ஒரு teacher, எல்லோருக்கும் கல்வியைக் கற்றுக் கொடுக்கிறார். Exam போவதற்கு முன்பு, இந்த இந்தக் கேள்விகள் வரலாம், தயார் நிலையில் இருங்கள்… எழுதுவதை திருத்தமாய் எழுதுங்கள்…. தெரிந்த கேள்வியை முதலில் attend பண்ணுங்கள்… பயப்படாமல் எழுதுங்கள்… நல்லா எழுதும் பேனாவை உபயோகப்படுத்துங்கள்… – என்று பொதுவான ஆலோசனையைச் சொன்னாலும்…, குறைந்தது 7, 8 பேராவது 200/200 வாங்குவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது…   அதிலும், State first, நம்ம students தான் எடுப்பார்கள்’ என்று ஒரு confident-டோடு பேசுவார்கள் பார்…. அப்போ, அதிலிருக்கும் நெருப்பு, அது சக்தியாக மாறி, students-ஐ exam-ல் நன்றாக எழுதும் தைரியத்தைக் கொடுக்கிறது என்பதும் உண்மைதானே…  தானே உருவாகுதல் என்ற நிலையில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களால் உருவாக்கப்படும் போது, சிறந்த மாணவர்களாக உருவாகிறார்கள் என்பது நாமும் பார்க்கத்தானே செய்கிறோம்…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா….  motivation என்ற மிகச் சிறந்த செயல், ஆசிரியருக்கும் மாணவருக்கு

Motivation - பகுதி 3

மேகலா   : Dress பண்ணுவது மட்டும் கிடையாது கிருஷ்ணா…. hair style, mannerisms, பேசும் தன்மை…., நடை கூட style ஆக நடப்பது…, என்பது ஒருவரைப் பார்த்து, இவரைப் போல நாமும் style ஆக இருக்கணும் என்று நிறையப் பேர் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். நாங்க முதன் முதலில், college-க்குள் நுழைந்த போது, எங்களுக்கு முதலில் பிரமிப்பாக இருந்தது, lecturers, Principal இவர்களைப் பார்த்துத்தான்.   அவர்கள் அணிந்து வந்த கஞ்சி போட்ட cotton saree-யைப் பார்த்து, நானெல்லாம், இவர்கள் நடமாடும் தேவதைகளோ என்று மலைத்தேன்.   அவர்கள் நுனிநாக்கில் விளையாடும் ஆங்கிலத்தைப் பார்த்து…, நாம் சிவகாசியில்தான் இருக்கிறோமா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் என்றால் நீ நம்புவாயா கிருஷ்ணா….. கிருஷ்ணர்  : ஓஹ்ஹோ…. உங்க staff-ஐப் பார்த்து, நீ பட்டிக்காடாய் ஆயிட்டயா…. மேகலா  : அவர்கள் மாதிரி dress பண்ணணும் என்று நினைத்தாலும், கஞ்சி போட்ட சேலைக்கு எங்கு போவது…. ஆனாலும், ஒரே கலரில், எங்க chemistry miss, Christy Devaraj மாதிரி dress பண்ணிச் சென்றிருந்தால், அசடு வழிந்து, friends-இடம் அலப்பறை பண்ணி ஒருவழியாகி விடுவேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : இப்ப

Motivation - பகுதி 2

மேகலா   : கரெக்ட் கிருஷ்ணா…. ‘சரியான நேரத்தில்’ என்று சொன்னாயா… எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது…. ராமாயணத்தில், ஆஞ்சநேயர் தன் வலிமையையும், திறமையையும் அறிய மாட்டார்…. அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியோ, ராமராலும், சுக்ரீவனாலும், ‘சீதை எங்கிருக்கிறார்’ என்று கண்டுபிடிக்கும் முக்கியமான பணி… ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடித் தென் திசை வந்த அங்கதனின் தலைமையிலான அணியில், ஆஞ்சநேயர் ஒரு முக்கியமான சிறப்புத் தகுதிகள் கொண்டவர். ஆனால், இது எதுவும் தெரியாத ஆஞ்சநேயர், கடலைக் கடந்து எப்படி செல்லப் போகிறோம்; சீதையைக் காண்போமா…, அப்படிக் காண முடியாவிட்டால், ராமரை எப்படிக் காணப் போகிறோம் என்று பெரிதும் மன உளைச்சலில் இருக்கிறார். ஒவ்வொருவரும் கருத்தைச் சொல்லுகின்றனர்… அப்போது, ஜாம்பவான் என்ற கரடி இனத்தைச் சேர்ந்த அமைச்சர் சொல்லுகிறார்… ‘இந்தக் கடலைக் கடந்து, சீதையைக் கண்டு வருவது, ஆஞ்சநேயர் ஒருவரால் மட்டுமே முடியும்… அவர் வாயுவின் புத்திரன்… வாயுவுக்குண்டான சக்தியும், திறமையும் ஆஞ்சநேயருக்கு உண்டு…   ஆஞ்சநேயருக்கு அவர் பலம் என்ன என்று அவருக்கே தெரியாது’  – என்று சொல்லச் சொல்ல, ஆஞ்சநேயருக்கு உடம்பு

Motivation - பகுதி 1

மேகலா   : ஹாய் கிருஷ்ணா…., உன்னைப் பார்க்காமல் கண்ணெல்லாம் பூத்துப் போச்சு கிருஷ்ணா… உன்னோடு பேசாமல், நல்ல தமிழே மறந்து போச்சு கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : என்னம்மா…, இந்தப் பக்கம் உன்னை பார்க்கவே முடியல… எதிரில் பார்த்தவுடன்…, செங்கல், செங்கலா கட்டுற….. மேகலா  : ஐயோ…, நானா…., செங்கல் கட்டுறனா…. நீ எப்ப வருவாய்…, என்ன topic-ல் பேசலாம் என்று காத்துக் கிடக்கிறேன் கிருஷ்ணா…., நீ என்னடான்னா…. கிருஷ்ணர்  : சரி…., நம்பிட்டேன்…. என்ன topic-ல பேசலாம்…. ‘Motivation’ என்ற தலைப்பு எடுத்து பேசலாமா….? மேகலா  :  கிருஷ்ணா…., எம்பெருமான் பரம்பொருளாகிய ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களை உசுப்பேத்தி விட்டு இயங்க வைத்த வேலையையா எழுதச் சொல்லுகிறாய்…?  அதற்கெல்லாம் நான் தகுதியானவள்தானா கிருஷ்ணா….? கிருஷ்ணர்  : என்ன இப்படி பம்முற…. யார் உங்கிட்ட பேசினாலும்…, பெரிய ஆசான் மாதிரி, ‘மைக்’ இல்லாமலேயே பேசத் துவங்கி விடுவாய். இப்ப ஏன் தகுதியிருக்கான்னு கேட்கிறாய்…  Motivation ஆகப் பேசுவதற்கு, நிறைய பட்டங்கள் வாங்கணும், research பண்ணியிருக்கணும் என்பதெல்லாம் தேவையில்லை…  யாரை ஊக்குவிக்கிறோமோ…, அவர்கள் ‘நல்லாயிருக்கணும்’ என்ற அ

வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 17 (நிறைவுப் பகுதி)

மேகலா   : ஆமாம் கிருஷ்ணா… சின்னதான shopping முடிந்தது… ஏற்கனவே pack-up பண்ணியிருந்ததால், room-க்கு வந்தவுடன், ஷீத்தல் அப்பா, கார்த்தி, ஆதி ஆகியோரை அழைத்துக் கொண்டு, சாப்பிடும் நேரம் இல்லாத ரெண்டுங்கெட்டான் நேரமாக இருந்ததால், இமயமலை, கங்கையை மட்டுமல்ல கிருஷ்ணா…, roti, தால், பன்னீர் டிக்கா, ஜீரா ரைஸ் என்று என் மனம் கவர்ந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு, டேராடூன் airport-க்கு கிளம்பினோம் கிருஷ்ணா… நானும் ராணிமாவும் இந்தப் பயணத்தில் அடிக்கடி சொன்ன வார்த்தை இதுதான் கிருஷ்ணா….   ‘நானெல்லாம் ஹரித்துவார், ரிஷிகேஷ் வருவேனென்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை… கடவுள் தான் நம்மை இங்கு வரவழைத்திருக்கிறார்’ என்று அப்பப்ப சொல்லிக் கொண்டே இருந்தோம்… கிருஷ்ணர்  : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்…. நீ செல்ல வேண்டும் என்று நினைத்ததால் தானே செல்ல முடிந்தது….. மேகலா  : என் வாழ்க்கையில், எத்தனையோ முறை, இங்கெல்லாம் நம்மால் போக முடியுமா, பார்க்க முடியுமா என்று ஏங்கியிருக்கிறேன். அதிலும்,  கேதார்நாத், அமர்நாத், பத்ரிநாத், கைலாயம் என்று பனிபடர்ந்த மலைகளையும், பனிலிங்கத்தையும், இமயமலைத் தொடர்களையும், அதைத் தொடர்ந்து ஓடு