Maturity - பாகம் 10

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா… அதிலும், வயசான பிறகு புலம்புபவர்களாக இருந்தால், அவர்கள் புலம்புவதைக் கேட்கக் கூட யாரும் வர மாட்டார்கள் கிருஷ்ணா… அப்படிப்பட்டவர்கள் புலம்புவதை நிறுத்துவதுதான் சிறந்த வழி…

கிருஷ்ணர் Matured person புலம்ப மாட்டார்கள்… ரொம்ப பேசவும் மாட்டார்கள்… யாருக்கும் தெரியாமல், மனசுக்குள் புழுங்கி வேகவும் மாட்டார்கள்…. தேவையில்லாத கற்பனை பண்ணவும் மாட்டார்கள். கண்ணெதிரில் தெரியும் காட்சியில் கூட, உண்மை நிலை எதுவாக இருக்கும் என்று கண்டுபிடித்து விடுவார்கள். உண்மையானவர்களைப் பற்றி பொய்யாக யாராவது செய்தி பரப்பினால், இவர்கள், அப்படிச் செய்திருக்கவே மாட்டார்கள் என்று தீர்க்கமாகச் சொல்லுவார்கள். அதனால்தான் அவர்களால் நிதானமாக யோசிக்க முடிகிறது…

மேகலா : Great கிருஷ்ணா… ‘எங்கயோ தப்பு நடந்திருக்கு’ என்று திரைமறைவு செயலைக் கூட யூகிச்சிருவாங்க கிருஷ்ணா… நீ சொல்லச் சொல்லத்தான்…, ஒண்ணு தெளிவாப் புரியுது கிருஷ்ணா… Matured person, நிதானமாகவும், தெளிவானவர்களாகவும் இருப்பாங்க என்பது மட்டும் கிடையாது கிருஷ்ணா…. ‘யார் யார் எப்படிப்பட்டவங்க…, அவர்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்…’ என்பதில் கூட, ஒரு நியாயமான தீர்க்கமான உறுதிப்பாடு வச்சிருப்பாங்க கிருஷ்ணா… அவங்க யூகித்த உண்மைகள் தான், சில நாட்கள் கழித்து ‘உண்மை’ என்று வெளி வரும்…. நம்மிடையே வாழ்ந்த ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் ‘திரு. சோ ராமசாமி’ கூட, நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி யூகிக்கும் கருத்துக்கள் தான் உண்மை என்று சில நாட்கள் கழித்து தெரிய வரும் கிருஷ்ணா…. நிறைய பேர், சில சம்பவம் நடந்தவுடன் துக்ளக் ஆசிரியரின் கருத்துக்களைப் பார்த்த பின்பு, தன் கருத்தைப் பதிவிடுவார்கள் கிருஷ்ணா… அந்த அளவுக்கு அவருடைய கருத்துக்கள் ‘தீர்க்கதரிசனமாக’ இருக்கும் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : உனக்கு ஒண்ணு தெரியுமா…. அப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் முன்னிலையில் யார் விவாதத்தில் கலந்து கொண்டாலும்…., அவர்கள் எப்பேர்ப்ப்பட்ட scholar ஆக இருந்தாலும், உண்மைக்குப் புறம்பாகப் பேசினால், ஒரு சின்ன பதில் மூலம் எதிராளியை முட்டாளாக்கி விடும் விஷய ஞானம் அவர்களிடம் இருக்கும்…

மேகலா : ஐயோ…., உண்மை கிருஷ்ணா…., உண்மை…. ‘துக்ளக்’ ஆசிரியரிடமே மாட்டிக் கொண்டு முழித்தவர்கள் ஏராள்ம் பேர்…. இப்போ, இதே பத்திரிகை துறையைச் சேர்ந்த திரு. ரங்கராஜ் பாண்டே, channel-ல் நேர்காணல் நடத்தினால்…, நேர்காணலுக்கு வந்தவர்கள், பாண்டேயை ஏதோ சின்னப்பிள்ளை என்று நினைத்து பொய்யாகப் பேச முனைந்தால், புள்ளி விவரங்கள், இன்ன ஆண்டில், இந்த மாதத்தில், இந்த நாளில், இந்த மேடையில்…, என்று, நெஞ்சு நிமிர்ந்து வரிசையாக ஆதாரங்களை எடுத்து வைக்கும் பாணியில், எதிரிலுள்ளோர் மிரண்டு போவார்கள்… இந்த மாதிரி இடங்களில், ‘maturity’, உண்மை, ஆதாரம், தீர்க்கதரிசனம், தொலைநோக்குப் பார்வை…, எல்லாவற்றிற்கும் மேலாக, தேசப் பற்று என்ற வர்ணம் பூசி நிற்கும் அழகைப் பார்க்கிறேன் கிருஷ்ணா…. இப்படிப்பட்டவர்களை…, எதிராளிகளால் ஒன்றும் செய்ய முடியாது… மிரட்டக் கூட முடியாது… அவர்களுடைய நேர்கொண்ட பார்வை வலுவானது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Yes…., அப்புறம்…, ‘மெச்சூரிட்டின்னா’ என்னன்னு நினைச்ச…. விஷய ஞானம் இருக்கணும்… இப்படி நடந்தா, எதிர்விளைவு இப்படித்தான் இருக்கும் என்ற தீர்க்கதரிசனம் இருக்கணும்… தீர்க்கதரிசிகள், சொல் ஒண்ணு, செயல் ஒண்ணுனு இருக்க மாட்டாங்க… எந்த நேரத்திலும்…, எந்த இடத்திலும்…, சொல் எதுவோ…, அதுவே செயலாகவும்…., செயல் எதுவோ…, அதில் உறுதியாகவும் இருப்பவர்கள்தான் தீர்க்கதரிசிகள்…. Matured person-ஆல் மட்டுமே, தீர்க்கதரிசனமாய் சிந்திக்கவும், பேசவும் முடியும்… இன்னும் ஒண்ணு… மகான்களுக்கு…, நாட்டின் மீது…, மக்களின் மீது…, இயற்கை வளத்தின் மீது…, மிகுந்த அக்கறை இருக்கும்… அதனால்தான் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். என்ன நடந்தால் மக்களுக்கு நன்மை என்று எடுத்து சொல்கிறார்கள்…. ஆனால், நல்லதை நினைத்து, எடுத்துச் சொல்வது, சில சமயங்களில், மக்களிடையே எடுபடாமல் போகலாம். அப்பவும்…, மகான்கள், தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதுமில்லை… தான் எடுத்துச் சொன்ன சொல், நடக்காமல் போனதற்காக வருத்தப்படுவதுமில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம்…, காந்திஜியின் ‘கிராம ராஜ்ஜியம்’ என்ற கொள்கைதான். விவசாயம் சார்ந்த நாடான பாரத நாட்டிற்கு, கிராமங்களும், அதன் எளிமையும் தான், பாரத நாட்டை, சுயசார்புடைய நாடாக கொண்டு வரும் என்று நம் தேசத் தந்தை நம்பினார்…. அவருடைய தீர்க்கதரிசனம், கனவாகிப் போய்…, அறிவியல் வளர்ச்சியில் பாரதம்…, digital மயமானது….. இருந்தாலும், மகான்களின் கூற்றுக்கள் என்றும் பொய்யுரை கிடையாது….

மேகலா : நீ சொல்வது உண்மைதான் கிருஷ்ணா…. அனுபவப்பட்ட பெரியவங்க…, ‘சிக்கனமா இருங்க…, பத்து ரூபாய் இருந்தாலும், அதில் ஒரு ரூபாயை சேமித்து வை… ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்று ஆடாதே’ என்று சொல்வதெல்லாம் பொய்யுரை கிடையாது கிருஷ்ணா…. எப்பவுமே, அனுபவங்கள், மனிதனைப் பக்குவப்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை… அனுபவங்கள், தீர்க்கதரிசனமாவதும் உண்டு. ஒரு மனுஷன், maturity என்ற பக்குவ நிலையை அடைவதற்கு எத்தனை அனுபவங்களைக் கடந்து வர வேண்டியதிருக்கு….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 57

கதை கதையாம், காரணமாம் - பகுதி 3

கதை கதையாம், காரணமாம் - பகுதி 6