Maturity - பாகம் 11 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : அனுபவங்களைக் கடப்பது, மனிதனுக்கு அன்றாட நிகழ்ச்சிதானே… ஆனால், ஒவ்வொரு நாளும், தான் கடந்த அனுபவத்தை recall பண்ணி, எது நல்லது…, எது கெட்டது…, எதைச் செய்யலாம்…, எதைச் செய்யக் கூடாது…, எதனால் இது நடந்தது…, இது பாவமா…, புண்ணியமா…, என்று ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்க வேண்டும்… இன்று நடந்த விஷயத்தில், எத்தனை பேர் பயனடைந்தார்கள்…, எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்…, என்று ஒளிவு மறைவு இல்லாமல் யோசிக்க வேண்டும்…. உன் மனசாட்சி வலியுறுத்துவதை ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும்…. திறமையாளர்கள், அவமானத்தைத் தடுக்க…, கர்வப் பட்டுக் கொண்டு, தன்னைத் தானே உற்சாகப் படுத்துவதெல்லாம் சரி…. ஆனால், அந்தக் கர்வம் அவனுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் வரைக்கும் தான்… அதையே தன் அடையாளமாக மனுஷன் பின்பற்றினால்.., அந்தக் கர்வமே, அவனை அழித்து விடும்… கர்வம், maturity-யை promote பண்ணணுமே தவிர, மனுஷனை அழிச்சிடக் கூடாது… அதற்காகத்தான் சொல்லுகிறேன்… மனசாட்சி எச்சரிப்பதை, காது கொடுத்துக் கேட்கணும்… அதே மாதிரி, ஒரு அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை மனிதன் நன்றாக மனதில் நிலை நிறுத்தணும். நல்ல செயல் என்றால், அந்த செயலின் வழிமுறையை, சிறந்த வழியாக ஏற்றுக் கொண்டு, மேலும் சிறப்பாகச் செய்யத் தயாராகணும். தவறான செயல் என்றால், தவறைத் திருத்திக் கொள்ளணும்…. ஒரு கோபத்தினால் தடைப்பட்ட செயலை உணர்ந்து…, ‘நாம் என்ன செய்யணும்…, என்ன செய்தால், நம் காரியம், தடைப்படாமல் நடக்கும் என்றாவது சிந்திக்கணும்…. ‘காரியம் பெருசா, வீரியம் பெருசா’ என்று யோசிச்சால்…, சின்னப்புள்ள கூட சொல்லிடுமே…, காரியம் தான் பெருசுன்னு… அப்போ, கோபத்தை குறைக்கணும்னு முடிவெடுக்கணும்…. காரியத்துக்காக கோபத்தைக் குறைப்பவன், மொத்தமாக கோபத்தை விட்டுரலாமே…… கோபத்தை வெளிப்படுத்தியதால், விசுவாமித்திரர் உட்பட எத்தனை முனிவர்கள், அரும்பாடு பட்டு பெற்ற வரங்களை இழந்திருக்கிறார்கள். எந்தச் செயல் நமக்கு திருப்தி தருகிறதோ…, எது நம்மை சந்தோஷப்படுத்துகிறதோ…, அந்தச் செயல் செய்வதை மனப்பூர்வமாக செய்ய வேண்டும். சிலருக்கு, போதையினால் தன்னை மறப்பதும், உலகத்தை மறப்பதும் நிம்மதி தருவதாகத் தெரியும்… உலகத்தை மறக்கச் செய்வது, நிம்மதியும் கிடையாது; சந்தோஷமும் கிடையாது… தனக்கே தெரியாமல், தானே கொள்ளிக்கட்டையால் முதுகைச் சொறிவதற்குச் சமம்…. சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதெல்லாம், திருப்தியும், சந்தோஷமும் என்று சொன்னால், நம் அறிவிலேயே பிழையாகி விடும்… அறிவு எப்படி தெளிவாவது…, தெளிவு எப்போ பக்குவமடைவது… instant-ஆக பிரச்னைக்குத் தீர்வு எடுப்பது நல்லதா…, நிரந்தரமாக பிரச்னையை solve பண்ணுவது நல்லதா என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்… முடிவாக ஒன்று சொல்கிறேன்…. Maturity என்பது மனிதனை மிக மேன்மையான நிலைக்குக் கொண்டு செல்லும் பக்குவப்பட்ட குணம். அது celebrities, உயர்ந்தவர்கள், கற்றறிந்தவர்கள், வயதானவர்கள், திறமையாளர்கள் என்று தரம் பார்த்து வருவதில்லை. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும், தன்னுடைய அனுபவத்திலிருந்து தெளிவு நிலைக்குச் செல்லும் அற்புதமான குணம்… இதற்குத் தேவையானது, ‘பொறுமை’, ‘நிதானம்’. இந்த இரண்டும் இருப்பவர்கள் பக்குவம் அடைவார்கள்…. புரிஞ்சுதா….
மேகலா : புரிஞ்சுதாவா…., கிருஷ்ணா…, நீ பார்த்து ஒரு குணத்தை இவ்வளவு உயர்வாகப் பேசி, என்னை விளங்க வைப்பதற்கு இத்தனை மெனக்கெடுகிறாய் என்றால்…., அதை நான் புரியாமல் இருந்தால்…, எனக்கு அறிவே இல்லை என்று அர்த்தம் கிருஷ்ணா…. எத்தனை உதாரணங்கள், எவ்வளவு அழுத்தமான script…புரிந்தது கிருஷ்ணா…. புரிந்தது என்று சொல்லி விட்டு, இன்னும் கோபப்படுவதும்…, பொறாமைப்படுவதும்…, ஆசைப்படுவதுமாய்…, இன்னும் சிறுபிள்ளைத்தனமாக இருந்து விடுவேனோ… Maturity-யை நானாக, வலுக்கட்டாயமாக வர விடாமல் செய்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Maturity என்பது, நீ நினைப்பது மாதிரி, உன் கட்டுப்பாட்டில் நிற்கும் குணமல்ல…. ஒரு வகையில், நீயாக மனம் வைத்து பக்குவமடைந்தாலும், உனக்கு நேரும் பிற சம்பவங்களால், உன்னையறியாமல் நீ பக்குவமடைவாய் என்பதுதான் நிஜம்… உன் மன வாசலைத் திறந்து வை…, தானாக நடக்கும்…. நான் இங்கிருந்தால், மறுபடியும்…, மறுபடியும் நீ கேள்வி கேட்பாய்…. புரட்டாசி மாதம்…, என்னைக் காண வரும் பக்தர்கள் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டும்…. வரட்டா…..
மேகலா : கிருஷ்ணா…, கிருஷ்ணா…, மறஞ்சிட்டயா….
(நிறைவு பெறுகிறது)
Comments
Post a Comment