Maturity - பாகம் 8

கிருஷ்ணர் : நீ இன்னொன்னும் யோசிக்கணும் மேகலா…. யார் தெளிவாக யோசிக்கிறார்களோ…, யார், சோதனைக் காலத்தில், அதை எப்படித் தாங்குவது, தடைகளை உடைத்தெறிவது என்று அறிந்து தயார் நிலைக்கு வருகிறார்களோ…, யாருக்கு, ஒரு செயல் முறையாக செய்யப்பட வேண்டும் என்று அக்கறை இருக்கிறதோ…, முக்கியமாக, யார், நியாயத்தையும், தர்மத்தையும் follow பண்ணுகிறார்களோ…, யார் உண்மையையும், சத்தியத்தையும் மதிக்கிறார்களோ.., இப்படிப்பட்டவர்கள் தான், maturity என்னும் பக்குவ நிலையை அடைகிறார்கள்…..

மேகலா : கிருஷ்ணா…, கடவுள் பக்தி உள்ளவர்களைச் சொல்லலையே….

கிருஷ்ணர் : ‘உண்மை’, ‘தர்மம்’, ‘சத்தியம்’ என்று சொல்லுகிறேன்….; இதில் கடவுள் பக்தி என்று தனியாகச் சொல்லணுமா….

மேகலா : ஆமாம்…, ஆமாம்…, உண்மையும் கடவுளும் ஒன்றுதானே….. கடவுள் பக்தி உடையவர்கள் கூட, அவசரக்காரர்களாக, ஆத்திரக்காரர்களாக இருந்து விடலாம்…., ஆனால், உண்மையையும், தர்மத்தையும், சத்தியத்தையும் மதிப்பவர்களை கடவுள் என்றுமே கை விட மாட்டார்… சரிதானே, கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : ஏதேது… ‘பஞ்ச்’ டயலாக்லாம் பேசுற…. ஒருவருடைய வளர்ச்சி, அவருக்கு maturity-யைக் கொடுக்கும் என்று அறிந்து கொண்டோம்…. இப்போ, ஒவ்வொரு துறையிலும், மனிதனின் maturity எப்படி அவனை சிறப்பாக்குகிறது என்று பார்ப்போம்….

மேகலா : ஒவ்வொரு துறையிலுமா…. ஏன் கிருஷ்ணா…, total ஆக matured people, பதறாமல், நிதானமாக சிறப்பாகச் செய்து முடிப்பார்கள் தானே…. அப்புறம் எப்படி….?

கிருஷ்ணர் : நீ சமையல் கலையில் experienced ஆள்தானே… அப்புறம் என்ன கேள்வி? இப்பத்தான நீ சொன்ன… ‘கடவுள் பக்தி உள்ளவர்கள், ஆத்திரக்காரர்களாகவும், அவசரக்காரர்களாகவும் இருக்கலாம்… ஆனால், உண்மையை, சத்தியத்தை மதிப்பவர்களைக் கடவுள் கை விட மாட்டார்’ என்று… அதே மாதிரிதான்… சாதாரணமாக, personal ஆக இன்னும் தெளிவாக சிந்திக்க முடியாதவர்கள் கூட, தான் செய்யும் வேலையை, மிகுந்த கவனத்துடனும், தெளிவாகவும் செய்து முடிப்பார்கள்… இன்னும் சொல்லப் போனால், உன்னுடைய துறையையே எடுத்துக்கோயேன்… சமையல் துறையில் கை தேர்ந்தவர்கள், அதையே தன் தொழிலாகச் செய்பவர்கள், கரண்டியைக் கையில் பிடித்ததும், மந்திரம் போட்டது மாதிரி, instant ஆக தெளிவாகி விடுவார்கள்…. அவர்களுடைய pre-plan-ல் ஆரம்பிக்கிறது அவர்களுடைய நிதானம்… காய்கறிகளை வெட்டி வைத்து, மசாலாக்களை அரைத்து வைத்து, தேவையான பொருட்களை அருகில் வைத்து, ‘இல்லை என்பதே இல்லாதபடிக்கு’, வேலையை ஆரம்பிக்கிறார்கள்…. அடுப்பின் flame எத்தனை டிகிரி வெப்பத்தில் இயங்க வேண்டும் என்பதில் கூட ஒரு முறையக் கறாராகக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் சமையலில், அடிப்பிடிப்பது இல்லை…, தீய்ந்து போவதில்லை… ஒரு கிலோ பிரியாணிக்கு, இத்தனை கிராம் வெங்காயம், இத்தனை கிராம் தக்காளி….. வெங்காயம் இவ்வளவு நேரம் வதங்க வேண்டும் என்றும்…, ஒவ்வொரு நாளும், தாளம் தப்பாத சுதி போல வேக வைத்து, சுவையான, மணமும், சுவையும் மாறாத, மக்கள் மனதில் பதிந்து போன சுவையாக, ஒரு தவம் மாதிரி பிரியாணி செய்து தருவதில்லையா…. அதிலும், சில கடைகளில், மாஸ்டர்ஸ்க்கு வரும் order, 2 மசால் தோசை, ஒரு ரவா தோசை, 3 ஊத்தப்பம் என்னும் போது, வரிசை மாறாமல் மனதில் ஏற்றி, ஊற்றிக் கொடுத்து, வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துகிறார்களே.. இந்த மாதிரி கலைஞர்கள், தங்கள் தொழிலில் மிகுந்த கவனமும், நல்ல தெளிவும் உடையவர்கள். இவர்கள், personal ஆக matured people ஆக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இவர்கள் தொழிலில் கடைப்பிடிக்கும் நிதானம், பணிவு, தொழில் பக்தி, அவர்களை முழுசாக, matured person ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை….

மேகலா : so, செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து, பக்தி சிரத்தையுடன் செய்யும் போது, matured person ஆக இல்லாதவர்கள் கூட, தொழிலில் தெளிவாகவும், நிதானமாகவும் நடந்து கொள்வார்கள்…, இல்லையா கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : தொழிலில் concentration கொடுக்கத் தெரிந்தவர்கள், அந்தத் தொழிலில் அடுத்தடுத்து என்ன செய்யலாம்…, என்ன செய்யக் கூடாது…, என்பதையெல்லாம் அறிந்து கொள்வதுதான் முதல் பக்குவம்…. அடுத்தது…, வேலையில் அவர்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பு…, என்று அவர்களுடைய தெளிவு…, வேலையில் அவர்களை உச்சத்தைத் தொட வைக்கும். இப்படி உச்சம் தொட்டவர்கள்…, ‘நம்ம வேலைல நம்மை அடிச்சுக்க ஆளே கிடையாது’ என்று நினைக்கும் போதுதான் தெரியும்… வேலையில் sincere ஆக இருப்பவர்கள் எல்லா விஷயத்திலும் matured ஆகி விடுவார்கள் என்று சொல்ல முடியாது.. ஆனாலும், தன்னை மிஞ்ச ஆள் கிடையாது என்று கர்வப்படுவதிலும் தப்பே கிடையாது…

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா…, நீ சொல்வது உண்மைதான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : கேரளாவில் நடக்கும் படகுப்போட்டியை நீ பார்த்திருக்கிறாயா மேகலா….

மேகலா : ’படகோட்டி’ படத்தில் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இரண்டு படகுகளுக்கிடையே போட்டி நடைபெறுவதாகக் காட்டுவார்கள். படகுகளை வழிநடத்திச் செல்லும் ஒருவர், படகு செலுத்துபவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே செல்வார்… முதலில், கடவுள் வணக்கத்தோடு போட்டியை ஆரம்பிப்பார்கள். அடுத்து, தங்கள் பெருமையைப் பாட்டாகப் பாடிப்பாடி வீரர்களை உற்சாகப்படுத்துவார்கள். ஆளாளுக்கு, தங்கள் தங்கள் பெருமைகளைச் சொல்லச் சொல்ல, படகு வேகம் பிடிக்கும். இங்கு தற்பெருமையாகப் பேசுவது எல்லாம், வெற்றியின் இலக்கை நோக்கிச் செல்வதற்காகத்தான். வெற்றி முனையைத் தொட்டவுடன், அவர்கள் அந்த வெற்றியைக் கொண்டாட வேண்டுமே தவிர, ‘தற்பெருமை’, போட்டி மனப்பான்மையை வளர விடக் கூடாது. பெரும்பாலும் போட்டியில் கலந்து கொள்பவர்கள், போட்டி முடிந்தவுடன், அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். இவர்களெல்லாம், தன்னளவில் ‘வெற்றி தோல்விகளை’ நிதானமாக ஏற்றுக் கொள்ளும் தெளிவு பெற்றவர்கள். அடுத்த போட்டியில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருப்பார்கள். ஏற்றுக் கொள்ள முடியாத போது, பகையும், பூசலும் மனிதனையே ‘காவு’ வாங்கி விடும் அளவுக்குச் சென்று விடும்…. அதனால்தான் சொல்லுகிறேன்…, எவ்வளவுக்கெவ்வளவு மனிதனுக்கு வேலையில் தெளிவு இருக்கிறதோ…, அவ்வளவுக்கவ்வளவு…, வாழ்க்கையிலும் நிதானமும் இருக்க வேண்டும்…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1