பெண்களால் முடியும் - பாகம் 10
மேகலா : சட்டம், ஒழுங்கைப் பாதுகாப்பது என்பது, பொறுப்பு வாய்ந்த ஒரு வேலை. அதுவும் எந்த நேரத்திலும், குற்றம் செய்தவர்களைக் கையாளும் திறமையும், பலமும் கொண்டவர்கள் பணி புரியும் வேலையல்லவா… அதான் கொஞ்சம் அதிசயமாகப் பேசி விட்டேன். நீ சொன்ன பிறகுதான்…, போர்ப்பயிற்சி எடுக்கும் வீர பெண்மணிகள், திருவிளையாடல் புராண காலத்திலிருந்தே, நம்ம நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது…. கிருஷ்ணர் : நம்ம நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே, தன் நாட்டைக் காக்க போராடும் பெண்கள் இருப்பாங்கல்ல…. மேகலா : கட்டாயம் இருப்பாங்க கிருஷ்ணா…. இப்படிப்பட்ட வீரம் நிறைந்த பெண்கள்…, தங்களின் வீரத்தை, நேர்மையை காட்டும் துறை ஒன்று பாரத நாட்டில் இருக்கிறது கிருஷ்ணா…. அதுதான் காவல் துறை. இந்த காவல் துறையில், நேர்மையான பெண் போலீஸ் அதிகாரிகள் நிறைய பேர் இருந்தாலும், அரசாங்கத்தாலும், மக்களாலும் பெருமையுடன் பார்க்கப்பட்டவர் தான் கிரண் பேடி I. P. S. அவர்கள். அவர் வேலை செய்யும் இடங்களில், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்பவர் யாராக இருந்தாலும்…, அது அரசியல்வாதியாக இருந்தாலும் கூட, துணிந்து action எடுப்பார்… அதனால், பலருடைய விமர