பெண்களால் முடியும் - பாகம் 9

கிருஷ்ணர் : வேற சாதனைப் பெண்கள் யார் யாரென்று சொல்லப் போகிறாய்…

மேகலா : கிருஷ்ணா…, சமுதாயத்தில், மனிதர்களுக்கு, உழைப்பு, சம்பாத்தியம், பக்தி, நிம்மதி, திருப்தி, தோல்வி, இயலாமை, போராட்டம், என்பது எவ்வளவு நிதர்சனமோ…, அந்த அளவுக்கு, விளையாட்டு, வீரம் என்பதும் நிதர்சனமானது கிருஷ்ணா…. உழைப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ…, அதே அளவு முக்கியத்துவத்தை, விளையாட்டுக்கும் கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… சின்ன வயதில் குழந்தைகளாக இருக்கும் பொழுது, ஆம்பிளைப் பிள்ளைகள், அந்தக் காலங்களில், கோலி, பம்பரம், கிட்டிப்புள்ளு, கபடி என்று விளையாடுவார்கள்… பொம்பளப் புள்ளைங்க, பாண்டி, பல்லாங்குழி, என்றும்…, இந்தக் காலங்களில், ஆண்பிள்ளைகள், கிரிக்கெட், பந்து விளையாட்டு என்று விளையாட…, பெண் பிள்ளைகள், ஒளிந்து விளையாட்டு, ஓடிப்பிடித்து விளையாடுதல் என்று விளையாடுவதை, அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே வைத்துக் கொள்கிறார்கள்… வளர்ந்த பிள்ளைகள், நீச்சல், இளவட்டக்கல் தூக்குவது, சைக்கிள் ரேஸ்…., பொங்கல் திருவிழா என்றால், காளையை அடக்குதல், மஞ்சு விரட்டு என்று வீரமும், விளையாட்டும், மக்களோட வாழ்க்கையின் அம்சமாகி விட்டது. இதிலேயே ரொம்ப interest உள்ளவர்கள், cricket coaching, tennis coaching, swimming coaching என்று சேர்ந்து பயிற்சி எடுத்து, போட்டிகளில் கலந்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்… இந்த ‘இளவட்டக்கல்’ தூக்கி பலத்தை நிரூபித்த பலசாலிகள், இன்று ‘weight lifting’ என்ற உலகளாவிய விளையாட்டில் கூட பங்கெடுத்துக் கொள்ளலாம் என்று நாம இப்ப பார்க்கிறோம்…. இந்த பலத்தைக் காட்டும் weight lifting விளையாட்டில், ஆண்கள் தான் அதிக அளவில் கலந்து கொண்டு, தங்கள் பலத்தைக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம்… சர்வதேச அளவில், அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டில் பெண்களும் கலந்து கொள்வார்கள். இப்போ, நம்ம நாட்டில், ‘கர்ணம் மல்லேஸ்வரி’ என்ற பெண் பிள்ளை, 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம் தூக்கல் போட்டியில், வெண்கலப் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி…. கிருஷ்ணா…, இதற்கு முன், ஆசியாவின் தங்கப் பெண் P. T. உஷா, ’ஷைனி வில்சன்’ என்ற பெண்கள், விளையாட்டுத் துறையில் புகழ் பெற்றிருந்தாலும், ‘பாரம் தூக்குவது’ போன்ற, ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் விளையாட்டுப் போட்டியில், பதக்கம் வென்று, பல பெண்கள் மத்தியில், விளையாட்டில் நாமும் ஆண்களுக்கு இணையாக சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! நீ சொன்னது மாதிரி, என்ன சாதிக்கவில்லை பெண்கள்… பெண்களால் முடியும் மேகலா….

மேகலா : பாரத நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, தங்கள் திறமைகளைக் காட்டினார்களா என்று தெரியவில்லை… ஆனால், தங்க மகள், பி.டி. உஷா…, தடகளத்தில், உலகத்தாரின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்த பிறகு, ஷைனி வில்சன், சானியா மிர்சா, சாயனா நெஹ்வால்…, என்று பல பெண்கள், இந்த சாதனைப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்று, பல பெண் குழந்தைகளுக்கு inspiration ஆக இருக்கிறார்கள் கிருஷ்ணா… விளையாட்டுத் துறையிலும், ’நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல’ என்று பலம் காட்டும் பெண்கள் குவிக்கும் பதக்கங்கள்…, பாரதத்திற்கே பெருமை சேர்க்கிறது கிருஷ்ணா…. இவர்களெல்லாம், சாதிப்பதற்கே பிறந்த பெண்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஓ…! வாவ்! பெண்களால் முடியும் மேகலா… அவங்க, வெளிய தான் வரணும்…, வந்துட்டா…, இந்தக் களம், ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது தான்….

மேகலா : இப்போ…, ஒரு ‘ad’ வருது கிருஷ்ணா… கிரிக்கெட் வீரர் ‘தோனி’யிடம், சில வீரர்கள் பயிற்சி எடுக்கிறார்கள். அதில் ஒரு பெண் பிள்ளை, bat பிடிக்கும் போது, ball போடுபவனிடம்.., இன்னொருவன் சொல்கிறான்… ‘பார்த்துப் போடு…, அது பொம்பளப் பிள்ளை’ – என்கிறான்… அதுக்கு அந்தப் பெண் பிள்ளை சொல்லுவாள், ‘இது கிரிக்கெட்…, இங்கு ஆண்பிள்ளை, பெண்பிள்ளை பேதம் கிடையாது… strength தான் முக்கியம்… நீ ball-ஐப் போடு’ என்கிறாள்… தோனி சொல்வார்…, ‘எங்கே நீ விளையாடு பார்க்கலாம்’ என்கிறார். அடுத்து வரும் ball-ஐ, sixer அடித்து பலம் காட்டுவாள் கிருஷ்ணா…. அந்த ‘ad’ “Boost’-க்கான ad… ஆனால், அதில் வரும் concept – யார் விளையாடுகிறார்கள் என்பது முக்கியமல்ல…, எப்படி அடித்து விளையாடுகிறோம் என்பதுதான் முக்கியம்…, என்பது தான்…..

கிருஷ்ணர் : உண்மைதானே….

மேகலா : கிருஷ்ணா…., நீ சொன்னது மாதிரி, வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்த உலகம், ‘ஆண் என்றும் பார்க்காது…., பெண்’ என்றும் பார்க்காது… அவர்கள், திறமையானவர்கள், படித்தவர்கள், உழைப்பாளிகள் – என்றுதான் பார்க்கிறது… உனக்கு ஒன்று தெரியுமா கிருஷ்ணா… சட்டம், ஒழுங்கு பாதுகாக்கும் துறையிலும்…, பெண்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று…

கிருஷ்ணர் : ஏன் இந்தச் செய்தியை, இவ்வளவு ஆச்சரியத்துடன் பேசுகிறாய்…. புலியை, முறத்தால் விரட்டிய மறப் பெண்கள் வாழ்ந்த நாடு இது…. பாண்டிய நாட்டில், ‘மலையத்துவஜனுக்கு’ மகளாக, ‘தடாதகைப் பிராட்டி’ பிறந்து, வேல் எறிதல், வாள் வீசுதல், என்று போர்ப்பயிற்சி எடுக்கவில்லையா…. அரசன், தன் மகளை, வீர சௌந்தர்யப் பெண்ணாக வளர்த்து, மதுரை நாட்டிற்கு அரசியாக ஆக்கியிருக்கிறாரே… தடாதகைப் பிராட்டியும், ‘திக் விஜயம்’ செய்து, நாடுகளை வென்று, கைலாயம் வரையிலும் சென்று, வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறாரே… அப்பேர்ப்பட்ட வீரம் செறிந்த பெண்கள், நமக்கு முன்னோர்களாக இருக்க, காவல் அதிகாரிகளாக பெண்கள் இருப்பது என்பது, ஆச்சரியமான, அதிசயமான செய்தியே கிடையாதே….

மேகலா : ஆமாம்ல…

கிருஷ்ணர் : ஆமாவா…, இல்லையா….

மேகலா : அப்படியில்ல கிருஷ்ணா…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1