பெண்களால் முடியும் - பாகம் 14 (நிறைவுப் பகுதி)

மேகலா : கிருஷ்ணா…, என்ன மறந்துட்டயா கிருஷ்ணா…. the famous போலிச் சாமியார் பிரேமானந்தா… பாலியல் குற்றச்சாட்டுக்கு உட்பட்டு, சிறையிலடைக்கப்பட்டானே…, நினைவில்லையா கிருஷ்ணா….?

கிருஷ்ணர் : ஓ…, ஆமாம்…, அந்த case-ல தீர்ப்பு சொன்னது…, புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி பானுமதி அம்மாள் அவர்கள்தானே….

மேகலா : மனிதர்களுக்குப் பசியெடுத்தால்…, விலங்குகளை வேட்டையாடுவான். அதே மனிதன், மிருகமாய் மாறும் போது, பிஞ்சுக் குழந்தைகளை வேட்டையாடுவான் என்பதுதான், பிரேமானந்தா case-ல் வெளி வந்த அதிர்ச்சியூட்டும் உண்மை… இந்த case, திருச்சி court-க்கு வந்தது. குற்றவாளியின் சார்பாக வாதாடியது, the famous வக்கீல் ‘ராம் ஜெத்மலானி’… இருப்பினும், குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆதாரப்பூர்வமாக குற்றவாளிதான் என்று நிரூபிக்கப்பட்டவுடன், நீதிபதி, இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார்… இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்…, ஆட்சி மாறும் போது, ஆட்சியாளர் ஆதரவில் குற்றவாளி விடுவிக்கப்பட்டு விடக் கூடாது என்று அழுத்தம் தீர்த்தமாக தீர்ப்பு எழுதி, பேனாவைக் குத்தி எழுந்தார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படிப் போடு…, இதுவல்லவோ தீர்ப்பு…

மேகலா : இன்னொரு விஷயம் கிருஷ்ணா… பாரதத்தையே உலுக்கி விட்ட ‘நிர்பயா’ case-ல் கூட, நீதிபதி பானுமதியம்மா, தீர்ப்பு வழங்கியவர்களுள் ஒருவர் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : Oh! நல்ல செய்தி மேகலா….

மேகலா : ‘நிர்பயா’ வழக்கைப் பொறுத்த வரையில், தண்டனை வழங்கும் நாளுக்கு முந்தைய நாள் வரை, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி செய்த மனுவைத் தள்ளுபடி செய்ததும், இதே நீதிபதி அம்மா அவர்கள்தான் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்…! நீதி தேவதையை பெண்ணாக…, தர்ம தேவதையாக மக்கள் வழிபடுகிறார்கள் மேகலா…. நீ சொன்னாயே…, திரிசூலம் ஏந்திய பராசக்தி, ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும், சக்தியாக, நெருப்பாக, நேர்மையாக, கருணையாக, திறமையாக…., இவ்வளவு ஏன், ‘தாயாக’ அமர்ந்திருக்கிறாள்…. பெண்களால் முடியும் மேகலா…. இப்பக் கூட, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் வழக்கில், ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது கூட, ஒரு பெண் நீதிபதிதான்…. எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும்…, தன்னை நெருக்கும் கடுமையான வேலையிலும் கூட, சமயோசிதமாக…, துரிதமாக…, ஆக்ரோஷமாக…, மன நிறைவாக…, பொறுப்பாக…, நெஞ்சில் கருணையாக செயல்பட, பெண்களால் முடியும் மேகலா…. பரந்து விரிந்த இந்த உலகம்…, ஆண், பெண் இருவருக்குமானது….. இதில், திறமையாளர்களுக்கு…, நேர்மையாளர்களுக்கு…, உழைப்பவர்களுக்கு…, பிறர் நலன் மீது அக்கறை காட்டுபவர்களுக்கு…, என்று, தனியிடம் மட்டுமல்ல…., தனி மரியாதை கூட இருக்கிறது… இது சந்தர்ப்பங்கள் நிறைந்த உலகம். இதை சரியாகப் பயன்படுத்துபவர்கள், ஆண்கள் மட்டுமல்ல…, பெண்களானாலும், இந்த உலகம் கொண்டாடும் என்பதை நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்… காலம், காலமாகப் பெண்கள், வீரத்திலும், புத்தி சாதுர்யத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். இடையில் சில காலம், பெண்களை கல்வி கற்க விடாமல் செய்ததற்கு, இங்கு ஒரு நல்ல இதயம் பொங்கியதைக் கேள்,

‘ஏட்டையும் பெண்கள் தொடுவது

தீமையென்றெண்ணியிருந்தவர்

மாய்ந்து விட்டார்…. வீட்டுக்குள்ளே

பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற

விந்தை மனிதர் தலை குனிந்தார்…

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டும் அறிவினில்…, ஆணுக்கிங்கே பெண்கள்

இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ –

என்று கொதித்து விட்டான் பாரதி…. இது மட்டுமல்ல…, ‘கற்பு’, ‘கற்பு’ என்கிறார்களே…, அது இருவருக்கும் பொதுவானது. பெண்ணை வற்புறுத்திக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்’…, என்று பெண்ணின் விருப்பமில்லாத கல்யாணத்தைக் கூட, மறுக்கிறான் பார்… சிறிது காலம் மாசு பட்ட இந்த சமுதாயம்…, பாரதியால் புனிதமாக்கப்பட்டது… ‘வாழ்க வையகம்…, வாழ்க பெண்மை…, வளர்க உழைப்பும், திறமையும்….

மேகலா : கிருஷ்ணா…., முடிக்கப் போறயா…, நான் கொஞ்சம் பேசறேனே…

கிருஷ்ணர் : அம்மாடியோவ்…. பேசிப் பேசி, வாய் வலிக்குது…. ஒரு ‘சோடா கடை’ பக்கம் கொஞ்சம் நிறுத்து ‘கருடா’…..

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2