வலிமை - பாகம் 4

மேகலா : நீ சொன்னது ரொம்ப சரி கிருஷ்ணா…. Alert-ஆக இருப்பவர்கள், தங்கள் strength-ஐ விடவே மாட்டார்கள் கிருஷ்ணா…. இப்போ market-ல விற்கப்படுகிற பல பொருட்களும், மக்களிடம் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதே பொருளை இன்னொரு கம்பெனியும் தயாரிக்கப் போகிறது என்றால், அவன் மக்களிடையே புழக்கத்தில் இருக்கும் பொருளை விட வித்தியாசமாகக் காட்ட வேண்டும்…. அதற்காக, அவன் வாரக்கணக்கில்ல, மாசக்கணக்கில் யோசித்து, யோசித்து…, உணவுப் பொருள் என்றால், flavor-ஐ மாத்தி…, shape-ஐ மாத்தி…, விற்கும் திறனையும் மாத்தி யோசித்து, market-ல் விடுகிறான். மக்களுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தன் புத்தியைக் கூர் தீட்டி வேலை பார்க்கிறான். இங்கு, அவனுடைய மாத்தி யோசிக்கும் திறன், பொருளுக்குப் பலம் சேர்க்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஓ! Marketing என்பதே, trading-ல் மிக வலிமையான ஒரு அம்சம் தானே. அதற்கு alertness ரொம்ப முக்கியமானதுதான். இன்னொரு விஷயம்… ஒருவராகவோ, ஒரு team ஆகவோ, சேர்ந்து எடுக்கும் முடிவுகள், சில சமயங்களில், பல மடங்கு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு….

மேகலா : என்ன சொல்ற கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உனக்கு ஒரு கதை தெரியுமா மேகலா…. ஒரு அப்பாவுக்கு நான்கு பிள்ளைகள். நான்கு பிள்ளைகளிடையில் அடிக்கடி சண்டை வருவதுண்டு. இதைப் பார்த்து மனவேதனைப்பட்ட அப்பா, தன் பிள்ளைகளை அருகில் அழைத்து, ஒரு கட்டு விறகுச்சுள்ளிகளை எடுத்து வரச் சொன்னார். ஆளுக்கொரு சுள்ளியை கையில் கொடுத்து, அதை உடைக்கச் சொன்னார்…. பிள்ளைகள் எளிதில் உடைத்து விட்டார்கள். அதன் பிறகு, ஒரு கட்டுச் சுள்ளியைச் சேர்த்துக் கட்டி, முறிக்கச் சொன்னார். பிள்ளைகளால் முறிக்க முடியவில்லை. அப்பா சொன்னார்…. ‘நீங்கள் ஒற்றுமையாய் இருந்தால், அதுதான் உங்களுக்கு வலிமை. உங்களை யாராலும் வெல்ல முடியாது. அதை விடுத்து, தனித்தனியாக இருந்தால், உங்களை முறியடிப்பது எளிதாகி விடும். ஒற்றுமைக்கு அத்தனை பலம் உண்டு…. பலர் சேர்ந்து செய்த ஏவுகலங்களால், ஏவுகணைகளால், டாக்டர் கலாம், இந்தியாவிற்கே வலிமை சேர்க்கவில்லையா…’ என்று… ஒருவரின் தன்னம்பிக்கை வார்த்தை கூட, கூட்டு முயற்சியின், பலரின் இணைந்த கைகளின் பலத்தினால்தானே….

மேகலா : வாவ்…, சூப்பர் கிருஷ்ணா…. பலரின் இணைந்த கைகளின் வலிமையைப் பற்றி நீ சொன்னவுடன், எனக்கு இன்னொரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன விஷயம்….?

மேகலா : சமுதாயத்தில் ஒரு பிரச்னை என்று எடுத்துக் கொள்வோம்… ஒண்ணுமில்ல…, ஒரு N. G. O. Colony பிரச்னை என்று எடுத்துக் கொள்வோம். நான் மட்டும் சென்று நகராட்சியில் புகார் சொல்வதைக் காட்டிலும், N. G. O. Colony மக்கள் எல்லோரும் சென்று புகார் கொடுத்தால், தாசில்தார் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார் இல்லையா… எங்கள் வீட்டு முன்னாடி உள்ள காலியிடத்தில், குப்பையைக் கொட்டி வைப்பது என்று நகராட்சி முடிவெடுத்தது. நாங்கள், தாசில்தாரிடம் புகார் கொடுத்தோம். உட்னடியாக, சின்னப்பிள்ளைகள் விளையாடும் காலனியின் மையப்பகுதியில் குப்பையைக் கொட்டக் கூடாது என்று முடிவெடுத்தார்கள். இது நாங்க எல்லோரும் ஒன்று திரண்டு சென்று குரல் கொடுத்ததனால் ஏற்பட்ட விளைவு… சின்ன சமாச்சாரம் தான்… இன்னொரு ஆச்சரியமான…, பிரம்மாண்டமான விஸ்வரூப செயல் ஒன்று நடந்தது உனக்கு ஞாபகம் இருக்கா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ இத்தனை build-up கொடுக்கும் போதே தெரிந்து விட்டது… அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தடை செய்ததை சொல்கிறாய்…, அப்படித்தானே….

மேகலா : ஆம்மாம் கிருஷ்ணா…… காலம், காலமாக, மனிதனுக்கும் வீர விளையாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு… அதிலும், திமிறி ஓடும் ஜல்லிக்கட்டு காளைகளின் ‘திமிலை’ப் பிடித்து அடக்குவது என்றால் இளைஞர்களுக்கு, ‘அருவியில் குளித்து விளையாடுவது’ போல உற்சாகமானது…. உழவர் திருநாள் முடிந்த மறுநாளில், அறுவடை முடித்த மகிழ்ச்சியில், காளையோடு வீர விளையாட்டை விளையாடுவது என்பது, விவசாயிகளுக்கு ‘திருவிழா’ மாதிரி கிருஷ்ணா…. இதை, ஏதோ…, காளை மாட்டை கஷ்டப்படுத்துவதாகச் சொல்லி…, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை போட்டு, court-ல் stay வாங்கி விட்டார்கள். இந்த stay order-ஐ எதிர்த்து பலர் குரல் கொடுத்த நிலையில், அலங்காநல்லூர், தன் பாரம்பரிய விளையாட்டைத் தொலைத்து களையிழந்து நின்றது…. அப்போதான் ஒரு அதிசயம் நடந்தது…. தமிழகத்து இளைஞர்கள், whatsapp மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, மெரீனா பீச்சில் குவிந்து விட்டார்கள். ஜல்லிக்கட்டு நடப்பதற்கு உத்தரவு வரும் வரை யாரும் வீடு திரும்ப மாட்டோம் என்று, விவசாயிகள் அல்லாத, I. T. employees, bank employees என்று பலதரப்பட்ட இளைஞர்கள், beach-லேயே படுத்து, அங்கேயே சாப்பிட்டு…, என்று போராட்டம் கூட digital மயமானது கிருஷ்ணா…. இரவானால், தங்கள் phone-ல், light flash பண்ணி, கையை அசைத்து…, தங்களுக்கு, ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை அனுமதிக்க வேண்டும் என்று, மென்மையாகப் போராடினார்கள்… இந்த ஊரும், நாடும்…, நாடு தாண்டி வேலை பார்த்து வந்த உலகத் தமிழ் மக்கள் கூட தங்களின் ஆதரவைத் தெரிவித்து, ஆங்காங்கே போஸ்டர் தாங்கி, ‘pose’ கொடுத்தார்கள்… இவர்களின் போராட்டத்திற்கு, ‘court’ தலை வணங்கியது… ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது. ‘வாடிவாசல்’ திறக்கப்பட்டது கிருஷ்ணா…. இன்னும், அந்த நிகழ்ச்சிகள், நிழலாய் மனதில் பதிந்து விட்டது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : வாவ்! சமீபத்திய நிகழ்ச்சி என்றாலும், புதுமைப் புரட்சியல்லவா… இப்பப் பார்…, எல்லோரும் வீர விளையாட்டு கிட்டே வாலைச் சுருட்டி வைத்திருக்கிறார்கள். சமுதாயப் பிரச்னைகள், மக்களை பெரும் வலிமையுடன் ஒன்றுடன் ஒன்று சேர்ப்பது போல, வேற பிரச்னைகள் இத்தனை வலுவாக ஒன்று சேர்க்குமா…, தெரியவில்லை….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1