உள்ளத்தனையது உயர்வு - பாகம் 7

கிருஷ்ணர் : அப்படீன்னு யார் சொன்னது….? பாரதியார், ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தால், வரும் சந்ததியினரே பயன் பெறுவர் என்று, தொலைநோக்குப் பார்வையில் சொல்லுகிறார்…. அவரே, தன் வீட்டில் சமைப்பதற்காக வாங்கி வந்த அரிசியை, பசித்து வந்த குருவிகளுக்குப் படைக்கவில்லையா… ஒருவர் கீழே விழுந்தால், பதறிப் போய், கை கொடுத்து தூக்கி விடுவது, தாகமெடுத்தவனுக்கு தண்ணீர் கொடுப்பது, இரண்டு நாள் பட்டினியில் உருக்குலைந்தவனுக்கு பசியாற அமுது படைப்பது…, இவையெல்லாம் தாய்மை குணம்… இதை விட, பக்கத்து வீட்டு மாணவனுக்கு, பாடம் விளங்கவில்லையென்று, பாடத்தை தெளிவாக புரிய வைக்கும் போது…, அது மனித தர்மம் ஆகிறது. இவையெல்லாம் உயர்ந்த குணங்கள். இதில், இது சரி, அது இதை விட மேலானது என்பதெல்லாம் கிடையாது என்று கவனத்தில் கொள்… பிறர் துன்பம் பார்த்து சகிக்க முடியாதவர்கள், சோறும் போடுவார்கள்…, பாதிக்கப்பட்டவனை சிறப்புடன் வாழவும் வைப்பார்கள்…. இன்னும் ஒரு தர்மம் இருக்கிறது. ஒருவனுக்கு ஒரு வேலை தெரியவில்லை என்றால், அதை நாம் செய்து கொடுப்பது, மனிதாபிமானம் தான்…. ஆனால், அதை விட சிறந்த தர்மம் ஒன்று…

மேகலா : வேலையைச் செய்து கொடுப்பதை விட சிறந்த தர்மமா… அது என்ன கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அந்த வேலை…, எப்படிச் செய்வது என்று கற்றுக் கொடுப்பது… எப்படி ஒரு மாணவனுக்கு ஆசிரியர் பாடத்தைக் கற்றுக் கொடுத்து அறிவை ஊட்டுகிறாரோ…, அதே போல, தெரியாத வேலையைக் கற்றுக் கொடுத்து, அவரையும் செயலைச் செய்ய வைப்பது…, கற்றுக் கொள்ள வந்தவரையும் வாழ வைக்கும் மிகப் பெரிய புண்ணியம் மேகலா… இதைத்தான் பாரதியார், ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி என்கிறார். இதற்கெல்லாம், மனிதாபிமானம் தாண்டிய உயர்ந்த உள்ளம் வேண்டும் மேகலா…

மேகலா : கிருஷ்ணா…., நான் சமீபத்தில், social media-வில் பார்த்த ஒரு video ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா…. அந்த video எடுத்தவர், அவர்கள் வீட்டை சுற்றிக் காண்பிக்கிறார். அதில் ஒரு தையல் மிஷினைக் காட்டுகிறார்… ’இந்தத் தையல் மிஷின், என் அம்மாவுக்கு, புரட்சித்தலைவர் M. G. R. அவர்கள் கொடுத்தது. அதில் துணிகளைத் தைத்து வரும் வருமானத்தில் தான், எங்கள் அம்மா, எங்களைப் படிக்க வைத்து வளர்த்தார்கள்… இன்னும், இந்தத் தையல் மிஷின், ஓயாமல் உழைக்கிறது’ என்று பெருமையாகச் சொன்னார்… கிருஷ்ணா, ஒருவரின், அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம், இன்றும் ஒருவருக்கு வாழ்வு கொடுக்கிறது என்பதைப் பார்க்கும் போது, இதை விட சிறந்த தர்மம் இருப்பதாக எனக்குத் தோணவில்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Exactly…. அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்பது, இயல்பாக எழ வேண்டும்… சரி, அதுதான் இல்லையா…, இப்படியாவது நினைக்க வேண்டும். வருமானம் நிறைய சம்பாதித்தவர்கள், அளவுக்கு அதிகமான பணம் சம்பாதித்து, அதற்கேற்ற வரியை அரசாங்கத்திற்கு கொடுக்க மனமில்லாமல்…, ஏன் அறக்கட்டளை ஆரம்பிக்கக் கூடாது… அதன் மூலமாக, ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவி செய்யலாம்… ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவலாம் என்று நினைக்கிறார்களே…. ஏதோ ஒரு வகையில், அடுத்தவருக்கு அந்தப் பணத்தை, அறக்கட்டளை மூலமாக செலவு செய்ய முன்வருகிறார்கள். இயல்பாக, இதுவே அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது. உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள், தெய்வத்தன்மை உடையவர்கள்…. ஒரு கட்டாயத்துக்காக, பிறருக்கு உதவ நினைப்பவர்களும்…, பரவாயில்லை…, அவர்களால், பிறர் பயன்பெறுகிறார்கள் என்ற வகையில், நான் அவர்களுடைய எண்ணத்தையும் வாழ்த்துகிறேன்…

மேகலா : ஆஹா…! நீ இவ்வளவு பாராட்டிப் பேசும் போது, பிறருக்கு உதவுவது, எவ்வளவு பெரிய செயல் என்று புரிகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உயிர்களின் தர்மமே, பிறருக்கு உதவுவதுதானே மேகலா…. நாம் இன்று ஒருவருக்கு கை கொடுத்தால்…, அது தக்க சமயத்தில், நமக்கே திரும்பக் கிடைக்கும். புறா, எறும்பு கதை உனக்குத் தெரியும் அல்லவா…. வேடனுக்கு, புறாவை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பது ஆசை… ஆனால், புறாவுக்கு இது தெரியாது… புறாவை வேடன் குறி வைத்ததை, எறும்பு பார்த்து விட்டது. அந்த சமயத்தில், புறாவை வேடனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எறும்புக்குத் தோன்றியதும், எறும்பு, வேடனின் காலை நறுக்கென்று கடித்ததா இல்லையா… எறும்பு கடித்த வலி தாங்காமல் வேடன் slip ஆனானா இல்லையா…. அந்த gap-ல் புறா உயிர் தப்பியதா இல்லையா… நாம் உதவலாமா, வேண்டாமா என்று எந்த யோசனையும் இல்லாமல், fraction of the second-ல் புறாவை தப்பிக்க வைத்த தருணமே, உயர்ந்த தருணம்… அதுவே, உத்தமமான செயல். ஒரு பழமொழி சொல்வாங்களே…, என்ன அது….

மேகலா : ‘இடக்கை அறியாமல், வலக்கையால் கொடுக்க வேண்டும்’ – அதுதானே கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அதேதான்…. இடக்கைக்கு தகவல் சொல்லும் முன்…, மனசு மாறி விடலாம்… இதைத்தான் எறும்பின் செயல் உணர்த்துகிறது… இதனால் என்ன ஆச்சு….

மேகலா : மறுநாள் பெய்த மழையில், சின்ன ஓடையில் சிக்கிக் கொண்ட எறும்புக்கு, மரத்திலிருந்து இலையைக் கிள்ளிப் போட்டது புறா… எறும்பு, இலை மீது ஏறி அமர்ந்து, மழை ஓட்டத்திலிருந்து தப்பியது….

கிருஷ்ணர் : உயிர் காப்பாற்றியதால், எறும்புக்கும், அதே ஆபத்து ஏற்பட்ட போது, புறா எறும்பைக் காப்பாற்றியது… நல்ல காரியம்…, பிறருக்கு உதவுதல் என்பது, bank-ல் deposit பண்ணுவது மாதிரி… வட்டியோடு திரும்பக் கிடைக்கும்… இதில் வட்டி என்பது, கடவுளின் அருள்….

மேகலா : ஓ…. மெய் சிலிர்க்குது கிருஷ்ணா…. எனக்கு ஒரு கேள்வி கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன கேள்வி…? ஏதாவது குண்டக்க மண்டக்கன்னு கேட்கப் போகிறாயா….?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1