தன்னம்பிக்கை - பாகம் 2
கிருஷ்ணர் : நீ சொல்லுவதும் சரிதான்… உனக்கு ஒண்ணு தெரியுமா…. ஒரு வகையில் இப்படி over-confident திறமையாளர்களை நான் பாராட்டுகிறேன்… இவர்களின் அலப்பறையினால் தான், அடுத்தடுத்த திறமையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். உலகமும், எல்லாத் துறைகளிலும், போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைகிறது…., என்ற அளவில், அகம்பாவம் சரிதான்… இருந்தாலும், தன்னைப் போலவே இன்னொரு திறமையாளனை சகிக்க முடியாதவர்களும் இருக்கிறார்களே… முறையாக வளர வேண்டிய போட்டி மனப்பான்மை…, எதிராளியை அழிக்கும் அளவு கூட போய் விடுகிறது… சரி, இதைக் கொஞ்ச நேரம் தள்ளி வைப்போம்…, பிறகு பேசலாம். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது….
மேகலா : கேள்வியும், பதிலுமாய் இருக்கும் என் பரம்பொருளே,…, உனக்கும் கேள்வியா…
கிருஷ்ணர் : இந்தக் கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று நான் தெரிந்து கொள்ளணும்… சில காரியங்களில், துணிச்சலாய் இறங்கினேன் என்று சொல்கிறார்களே… அது என்னென்ன என்று உனக்குத் தெரியுமா….
மேகலா : கிருஷ்ணா…, ‘அறம்’ என்று ஒரு சினிமா வந்தது நினைவிருக்கிறதா கிருஷ்ணா… அந்தப் படம், நிஜமாக நடந்த நிகழ்ச்சியை ஒட்டித்தான் திரைப்படமாக எடுத்திருந்தார்கள்… அதில், bore-well-கான ஆழ் குழாய் கிணறு வெட்டப்பட்டு, அதை மூடாமல் போட்டு வைத்திருப்பார்கள். அதில் ஒரு குழந்தை விழுந்து விடும். அந்தக் குழந்தையை மீட்டெடுக்கும் சவாலான வேலையை, அந்த ஊர் கலெக்டர் மேற்கொள்வார். என்னென்னவோ முயற்சிகள் செய்தும், குழந்தையை மீட்க முடியாது. அப்பொழுது, கலெக்டரிடம், அந்தக் குழந்தையின் ‘சகோதரன்’…., ஒரு சிறுவன், அவனை குழிக்குள் இறக்கி, குழந்தையைத் தூக்கலாம் என்று பலர் யோசனை சொல்ல, அதிகாரிகள் அனைவரும் மறுத்து விடுவார்கள். அந்தச் சமயத்தில், கலெக்டர், அவருடைய பதவிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாய், அந்தச் சிறுவனை இறக்குவார்…. பல விமர்சனங்களைக் கடந்து, குழந்தையை மீட்டு விடுவார்கள்…. இது மாதிரி risk-ஆன துணிச்சலை, சில சமயங்களில் எடுக்க வேண்டியிருக்கிறது….
கிருஷ்ணர் : இதற்கு, பெருசா ‘தன்னம்பிக்கை’ என்பது தேவையில்லாவிட்டாலும், அடுத்தவர்கள் மீது அக்கறை, தனக்கு எது வந்தாலும் பரவாயில்லை, நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற தியாக மனப்பான்மை இருப்பவர்களால், துணிச்சலாய் செயல்பட முடியும்… பல சமயங்களில், ராணுவ வீரர்களின் செயல்பாடு அப்படித்தான் இருக்கும்… எல்லைப் பகுதிகளில், எதிரிகளின் அத்துமீறிய செயல்களை எதிர்க்கும் பொழுது, தனக்கு மரணமே நேரலாம் என்ற அபாயம் இருந்த பொழுதும், துணிச்சலாக போரிடுபவர்களை, இந்த நாட்டின் காவல் தெய்வங்களாக நினைக்கலாம் இல்லையா….
மேகலா : நிச்சயமாக, கிருஷ்ணா….
கிருஷ்ணர் : பாரு… உன்னைக் கேள்வி கேட்டா…, நான் பதில் சொல்கிறேன் பார்… சொல்லு…, துணிச்சலான விஷயங்களைச் சொல்லு மேகலா…
மேகலா : கிருஷ்ணா…, ராட்சச பலூனில் பறப்பது, மலையின் உச்சியில் இருந்து, இடுப்பில் belt-ஐக் கட்டிக் கொண்டு குதிக்கும் ‘bungee jumping’ போன்ற விளையாட்டுக்களில்…, எத்தனைதான், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பண்ணி விளையாண்டாலும், அதில் விளையாடுவது என்பது, துணிச்சலான விஷயம் தான் கிருஷ்ணா… U. S. A -வில் இருக்கும் போது, ஹரி, மதனா விளையாடியிருக்கிறார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நிச்சயமாக…. இது துணிச்சலான காரியம் தான்… இந்த ‘ராட்சச பலூன்’னு சொன்னியே…, அதை இன்னும் கொஞ்சம் முன்னோக்கிச் சென்று யோசித்துப் பார்… ‘ஹீலியம்’ gas, fill பண்ணி பலூனில் பறந்த ஒருவர் தான், ‘ரைட் சகோதரர்களுக்கு’ பறக்க வேண்டும் என்ற ஆசையையும்…, மனிதனால் பறக்க முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்தவர்… So, துணிச்சல், உந்துதல் சக்தியையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கக் கூடியது… ஒரு முறை சாதித்து விட்டால், அடுத்து, பெருகுவது, தன்னம்பிக்கைதானே…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… நீ சொல்லுவது சரிதான் கிருஷ்ணா… துணிச்சலோடு செய்யும் காரியம், success ஆகும் போது, ஒரு பலமான நம்பிக்கை வருது… அதுவே அடுத்தடுத்த காரியங்களில், முனைப்போடு செயல்படும் போது, தன்னால் எதுவும் முடியும் என்று அசாத்தியமான தன்னம்பிக்கை பெருகுகிறது..
கிருஷ்ணர் : நீ இன்னும் ஒன்றைக் கவனித்தாயா…. எதிரியிடமிருந்து ஒரு attack வரும் பொழுது…, யாருமே எதிர்பாராத வண்ணம், திருப்பி அடிக்கும் துணிச்சல்காரனைப் பார்த்து, எதிரி மட்டும் பயப்படுவதில்லை…., இந்த உலகமே வியந்து பாராட்டுகிறது… அடுத்த attack பண்ண, எதிரி ரொம்ப…, யோசிக்கும் அளவுக்கு அடிக்கணும்….
மேகலா : கிருஷ்ணா…, இந்தப் போர் சம்பந்தப்பட்ட விஷயங்களில், ‘அடிக்கு அடி’ என்று நீ சொல்லும் போதே, அந்தச் சொல்லில் ஆயிரம் வாட்ஸ் power இருக்கு கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சும்மா சொல்லவில்லை மேகலா… மனிதன் பிறந்த காலம் தொட்டு, நானும் மனிதனைப் பார்த்து வருகிறேன்… ‘மண்ணாசை’ என்று வந்து விட்டால், அத்துமீறுதல் என்பது…, எதிரிகளுக்கு ‘அல்வா’ சாப்பிடுகிற மாதிரி… அதற்கு துணிச்சல் மட்டுமில்லை, ’இனி இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன்’ என்று, உலக நன்மையை அடிப்படையாகக் கொண்டு, ஆற்றலோடு சிந்திக்கிறானே…, அவனுடைய தைரியத்தையும், சக்தியையும், யாராலும் உடைக்க முடியாது…. இப்பவும், ‘புல்வாமா’ attack மூலம், பாரதத்தை நடுங்கச் செய்ய நினைத்த எதிரிகளின் செயலைப் பார்த்து, பாரதப் பிரதமர், சும்மா இருக்கவில்லையே… அவர் கொடுத்த பதிலடி, தீவிரவாதக் கூடாரத்தை வேரறுத்தது. அவர்கள், இந்திய வீரரை, பிடித்து வைத்து, ஆட்டம் காட்டணும்னு நினைத்த போது, பிரதமர், எதிரிகளுக்குக் கொடுத்த treatment, நம் வீரரை, நம் எல்லைப்புறத்தில், பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்ததா இல்லையா…. இன்று வரை, எதிரிகளின் கூடாரம், என்ன செய்யலாம் என்று யோசிக்கக் கூட, திராணியில்லாமல்தான் இருக்கிறார்கள்… இதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு….
(தொடரும்)
Comments
Post a Comment