தன்னம்பிக்கை - பாகம் 5

மேகலா : கிருஷ்ணா…, எனக்கு ஒரு சந்தேகம் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இப்பவரைக்கும் நல்லாத்தான போய்க்கிட்டு இருக்கு… அதுல என்ன சந்தேகம் வந்தது….

மேகலா : ஐயோ கிருஷ்ணா… இதுவரைக்கும் பேசுனதுல எனக்கு ஒரு doubt-ம் கிடையாது… என்னோட சந்தேகம்…, ஒரு செயல்திறன் மிக்கவன், தன்னுடைய முயற்சியில் தோத்துப் போனாலோ…, தடைகளை சந்திக்கும் போதோ…, எல்லாவற்றையும் தாண்டி, எப்படி ஜெயிப்பான், அவன், தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வான்… அது கஷ்டமில்லையா… உதாரணத்திற்கு, பாண்டவர்களுக்கு, பன்னிரண்டு வருடம் வனவாசம்…, ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மறுபடியும் தங்கள் உரிமையை மீட்க எப்படி முடியும்… பன்னிரண்டு வருடங்கள் தங்குவதற்கு சரியான வீடு கிடையாது…, சாப்பாடு கிடையாது. காட்டிற்குள் போர்ப்பயிற்சி செய்தார்களா…, தெரியாது. அவர்களுடைய ஒரே நம்பிக்கை, ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… படைபலமோ.., பணபலமோ இல்லாத போது, பின் எப்படி மீண்டு வர முடியும்…?

கிருஷ்ணர் : இறுதியில் நீ சொன்ன வார்த்தை என்ன…?

மேகலா : அவர்களுடைய ஒரே நம்பிக்கை ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் தான்… அப்படீன்னு சொன்னேன்…

கிருஷ்ணர் : அவர்களுக்கு, நம்பிக்கைன்னு ஒன்னு இருந்ததாகச் சொன்னாய் அல்லவா.., அதுதான் விஷயம்… இழந்த உரிமையை திரும்ப அடையணும் என்பது அவர்களுடைய முயற்சி… தன் உடல் பலம், மன பலம்…, போர்ப்பயிற்சி எல்லாவற்றையும், திரும்ப தன் உரிமையை அடைய வேண்டும் என்ற அவர்களுடைய முயற்சி காப்பாற்றி விடும்… இவையெல்லாவற்றுக்கும் மேலே…, கிருஷ்ணர் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை… அவர்களுடைய உத்வேகத்தைக் குறைக்காமல் பார்த்துக் கொள்ளும்… கிருஷ்ணர் என்ன அத்தனை ‘அப்பாடக்கரா’ என்று இதை வாசிப்பவர் நினைக்கலாம்… கிருஷ்ணரை கடவுள் என்று பார்ப்பவர், ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொல்லுவார்கள்… ஆனால், பொதுவாக, மனிதர்கள் தங்கள் நம்பிக்கையை, ஏதோ ஒரு விதத்தில், ‘விடாமல்’ பார்த்துக் கொள்வார்கள்… அவர்களுக்கு, எப்படியாவது, தங்கள் முயற்சியில் ஜெயிக்க வேண்டும். அதற்கு ஆதரவு தருபவர்களை, கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள்… அப்பப்ப, அவர்கள் மனசு தளரும் போது, கிருஷ்ணர் மாதிரி ஒருவர், அவர்களின் நம்பிக்கையை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும் பொழுது, மனிதனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வேகம் பல மடங்கு பெருகி நிற்கும். அவதார புருஷனாகிய ஸ்ரீராமருக்கே, சீதையை மீட்கும் முயற்சியில், அஞ்சநேயர் என்ற பலம் வாய்ந்த நம்பிக்கை தேவைப்பட்டதல்லவா…. பாண்டவர்களுக்கும், கிருஷ்ணர் பலம் வாய்ந்த நம்பிக்கை…

மேகலா : வாவ் சூப்பர் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒரு தோல்வியை சந்திக்கும் போது, மனிதர்கள் நிலை தடுமாறுவது உண்டு. நீ கூட, விளையாட்டுக்களத்தில் பார்க்கலாம். கிரிக்கெட்டில், captain, break time-ல் சொல்லியிருப்பார். சின்னச் சின்ன தவறு கூட செய்யாமல் இருந்தால், ஜெயித்து விடலாம். கொஞ்சம் miss ஆனாலும் தோற்றுப் போகும் நிலை இருக்கும் பொழுது, கடைசி பந்தில் sixer அடித்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற சூழ்நிலையில், அரங்கத்தின் ஆரவாரத்துக்கிடையில்…, catch பிடிப்பதற்கு தயாராக நிற்கும் எதிரணியைப் பார்க்கும் நிலையில் பயமும் வரும்…, அதே சமயம் ஒரு முரட்டுத் துணிச்சலும் வரும்… கடைசி பந்து…, திக்.., திக்.., நிமிடங்கள்… துணிந்து இறங்கி, வீசி அடித்து sixer அடித்து, பாகிஸ்தானின் status-ஐயே உயர்த்திக் காட்டினாரே ‘மியான்தத்.. இன்று வரையிலும், அந்த நிமிடங்களை யாரால் மறக்க முடியும்… Tennis-ல் இரண்டு set-களை விட்ட எத்தனையோ வீரர்கள், அடுத்த 3 set-ஐயும் எப்படி எடுத்து சாதித்தார்கள்.. இவர்களுக்குள் அந்த நேரத்தில் இருந்தது, ‘ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே’…. அந்த முனைப்பு…, தோத்தால் பரவாயில்லை. ஆனால், கடைசித் துளி வியர்வை சிந்தும் வரைக்கும், ஒரு கை பார்த்து விடுவது என்ற எண்ணம் தான் நம்பிக்கையைக் கொடுக்கும்…. அந்த ‘நம்பிக்கை’, ‘தோற்றால் பரவாயில்லை’, ‘முடிந்த வரைக்கும் முயற்சி செய்து விடுவது’…, என்ற இந்த வாசகம், தோல்வியையும், தடைகளையும், திருப்புமுனைகளையும் மீறி, ஒரு நெருக்கடி கொடுக்கும்…. நீ கூட, மகாபாரதத்தில் படித்திருப்பாயே, ‘செய்யும் வேலையை correct ஆகச் செய்வோம்… போரில் உயிர் நீத்தால், வீர சொர்க்கம்…, ஜெயித்தால் நாட்டிற்கு அரசன்’ என்ற மன நிலையில், தங்கள் முழுத் திறமையையும், நம்பிக்கையையும் பயன்படுத்துபவர்… இன்னும் ஒரு வகை கூட இருக்கு மேகலா…. அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம், சரியான equation-னாலும், correct-ஆன calculation-னாலும், mixing, grinding என்று பல வகையாலும், ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்டதா என்றால்…, இல்லையே… பறக்க ஆசைப்பட்ட மனிதன், பலூனில் பறந்து, கீழே விழுந்து, அல்லது வெடித்துச் சிதறி, தன்னுடைய உயிரைத் துறந்து, பல தோல்விகளுக்குப் பிறகு, connection-ஐ மாற்றிப் போட்டுப் பார்த்து, ஒரு நாள், சிறிது தூரம் மட்டுமே பறக்க முடிந்தது… பல்பு, தொலைபேசி, வானொலி…., என்று எத்தனையோ அதிசயமான சாதனங்கள், முழு வடிவம் பெறுவதற்கே, மனிதன் பல வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தான். அந்தப் பொறுமைக் காலங்களில், அவன் எவ்வளவோ கேலியையும், கிண்டலையும், அவமானத்தையும் சந்தித்தாலும், தன்னோட முயற்சி, நம்பிக்கையை மட்டும் இழக்கவேயில்லை…, இல்லையா…. நம்பிக்கைக்கு உகந்தவர்கள் ஊக்குவித்ததால், அவர்களின் பொறுமை சாதித்ததா…, இல்லை, நெருக்கடியில் சாதித்தானா… எப்படியிருந்தாலும், தோல்வி வந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்… அதே நேரத்தில், வெற்றியின் விளிம்பில் கூட, முயற்சியும், முனைப்பும் கலந்து, ஒரு கை பார்த்து விடுவது என்ற தீவிரமும்…, மிகப் பெரிய நம்பிக்கை சக்தியாக மாறுகிறது. இதை விட, இன்னொரு உதாரணம் சொல்கிறேன், கேள்… அந்தக் காலங்களில், அரசர்கள் தங்கள் பகுதியை இழந்து நிற்கும் சூழ்நிலை வரலாம். அப்பொழுது தங்கள் அமைச்சரவையைச் சேர்ந்த மந்திரிமார்கள்…, வேறு துறையைச் சேர்ந்தவர்கள்…, குடிமக்கள் என்று எல்லோரையும் விலகி நின்று…, எல்லோரும் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத சூழ்நிலையில்…, அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து, அவர்களுக்குள், ‘நம் நாடு, நம் தேசம்’ என்ற உணர்வினைத் தூண்டி விட்டு, அதன் பிறகு, போராடி, தங்கள் பகுதியை மீட்பதற்கு, எத்தனை முயற்சியும், போராட்டமும் இருக்க வேண்டும்… சும்மா இல்லை மேகலா…. ஸீரோவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்… பாண்டவர்கள் கதை வேறு….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1