Posts

Showing posts from June, 2025

ஆளுமை - பாகம் 1

கிருஷ்ணர்   : ஹாய் மேகலா…, என்ன இந்தப் பக்கம்…. இன்று வருவயோ…, மாட்டாயோ…, அப்படீன்னு நினைச்சேன்… நினைச்ச மாத்திரத்தில் வந்துட்டயே…. மேகலா  : என்ன கிருஷ்ணா…., ஒண்ணும் மண்ணுமா பழகுறோம்… நீ என்னை நினைப்பது எனக்குத் தெரியும் கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : வந்து…, என்ன topic-ல பேசலாம்ணு கேட்டு, என்னைத் தொந்தரவு பண்ணுவியே… அத நெனச்சேன்…, வேற ஒண்ணுமில்ல… மேகலா  : கிருஷ்ணா…, நீ என்னைத் ’தொந்தரவு’னு நெனச்சாலும் பரவாயில்ல… என் மனசுக்குள் கோலாகலாமாய் கோலோச்சி நிக்குற கிருஷ்ணா… நான் கோயிலுக்குப் போய், கிடந்த பெருமாளையும், குழலூதும் கண்ணனையும் பார்க்கணும்னு கூட வேண்டியதில்லை கிருஷ்ணா… ‘விடாமுயற்சி’, ‘உழைப்பு’, ‘பக்குவமாதல்’, ‘பக்தி’ என்று ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் வந்தால், உன் கீதையின் முகமும், குரலும் எனக்குள்ளே வியாபித்து நிற்குது கிருஷ்ணா… நீ சொன்ன வார்த்தைகள் தான், இலக்கணமாய், இலக்கியமாய் எனக்கு உபதேசம் பண்ணுகிறது… ஒண்ணும் வேண்டாம்…, சினிமா பார்த்து, M. G. R – ஐப் பற்றியோ, சிவாஜி பற்றியோ பேசக் கிடைத்தால்…, உடனே என் கிருஷ்ணனின் முகம் தோன்றி…, ‘பார்ரா…, M. G. R. மாதிரி...

Passion - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : இது மாதிரி, வயல் வெளிகளில், நாற்று நடும் போதும், களை பறிக்கும் போதும் பாடும் பாட்டு, நாட்டுப் பாடல்கள் தானே… இவ்வளவு ஏன்…., கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ‘கொல்லங்குடி கருப்பாயி’ என்ற ஒரு பாட்டி, நாட்டுப் பாடல்களில், தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கலயா…. தாலாட்டிலிருந்து, ஒப்பாரி வரை, மனித வாழ்வின் நிகழ்ச்சிகளை இசையோடு கலந்து யோசிக்கிறான். எல்லாத் தொழில்களிலும், உழைப்பாளிகள், தங்கள் movement-ஐயே இசையாக வெளிப்படுத்துவார்கள்…. நீ கேட்டதில்லையா… மீனவர்கள் boat ஓட்டும் போது…, ‘ஐலசா…, ஐலசா’ என்று தாளத்தோடு, இசைத்துக் கொண்டு செல்கிறார்கள்… மிகப் பெரிய கல்பாறையை நகர்த்தும் வேலையில் ஈடுபடுபவர்களின், இழுத்து விடும் மூச்சுக் காற்றே, இசையாய் ஒலிக்கும்… இப்படி நாட்டுப் பாடல்கள்…, உழைப்பாளர்களின் ரிதமாய் வெளி வரும் மூச்சுக் காற்று…,   இலைகள் அசையும் அசைவுகள்… பறவைகளின் சப்தங்கள்…, குயில் பாடும் பாட்டு…., வண்டுகளின் ரீங்காரம்…, நதிகளின் சலசலப்பு…, அருவி கொட்டும் ஓசை…, இவையெல்லாவற்றிலும்…, இனிமையான ரிதம் இருக்கிறது.  இதனை, ‘passion’ என்பதற்குள் கட்டுப் படுத்த முடியாது… இயற்கையோடு ...

Passion - பாகம் 8

மேகலா   : ‘இசையே ஒரு வரம்’ கிருஷ்ணா…. எனக்கெல்லாம் தேச பக்தி வரக் காரணமே, பாரதியார் பாடல்களும், M. G. R. படப்பாடல்களும் தான்…. அது மட்டுமல்ல கிருஷ்ணா…. கடவுளை மெய் மறந்து, மெய்யுருகி பக்தி செலுத்துவதற்குக் கூட, பக்திப் பாடல்கள் தான் எனக்கு வழிகாட்டியாகிறது… இவ்வளவு ஏன்…, என் பிள்ளைகளை, தாலாட்டி, என் வசப்படுத்துவதற்கும் கூட, K. V. மகாதேவனுடைய, ‘வெள்ளி நிலா முற்றத்திலே’…, இளையராஜாவுடைய, ‘கண்ணே கலைமானே’ பாடல் தான் எனக்குக் கை கொடுத்தது.   இந்தப் பாடல்களை இசையமைத்தவரும், பாடியவரும், இசையை எவ்வளவு ரசித்திருந்தால், இந்த சாகாவரம் பெற்ற பாடல்களை படைத்திருப்பார்கள்…   நம்மையும் பாடச் செய்திருப்பார்கள்…. கிருஷ்ணர்  : உண்மைதான்… என்ன மேகலா…, M. S. அம்மாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்…. மேகலா  : என்ன கிருஷ்ணா…, என்னைக் கேட்கிறாய்…  அந்த அம்மா, இறைவனால், special-ஆக…, மனம் மகிழ்ந்து படைக்கப்பட்டவர் என்று நான் நம்புகிறேன் கிருஷ்ணா…  இன்று உள்ளவர்கள் மாதிரி, இசை என் passion என்று சொல்லாமல், மனம் மகிழ்ந்து, பக்தி சிரத்தையோடு கற்றுக் கொண்டிருப்பார்கள் போல கிருஷ்ணா… இன்ற...

Passion - பாகம் 7

மேகலா  : நிஜம் தான் கிருஷ்ணா…. நீ சொல்லும் போது தான், எனக்கு, கடவுள் அருள் பெற்ற ஜேசுதாசைப் பற்றி ஞாபகம் வருகிறது… தனக்கு music தான் உயிர் மூச்சு என்று தோன்றியதும்…, கேரளாவில் பிறந்த ஜேசுதாஸ் அவர்கள், இசை மேல் கொண்ட அளவுக்கதிகமான ஆர்வத்தினால், தமிழ்நாட்டைச் சேர்ந்த, செம்மங்குடி சீனிவாசக பாகவதர் அவர்களிடம், குருகுலத்தில் சேர்வது போல சேர்ந்து, முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டார்… இது அவரே சொல்லியது கிருஷ்ணா…. இசையை முறைப்படி கற்றுத் தேர்ந்த பின், அதன் மீது ஒரு பக்தி ஏற்பட…, தன்னுடைய தொண்டைக்கு பாதிப்பு வராதபடி, குளிர்பானமோ, மதுவோ, சிகரெட்டோ எடுத்துக் கொள்ளவே மாட்டாராம்… இசையின் மீது, அவருடைய பக்தி அப்படி… இது passion-ஆ…, என்ன கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : Passion இல்லாமல் வேறு என்ன…? ஒருவர், தன் திறமையின் மீது நம்பிக்கை மட்டுமல்லாமல்,  ‘இது கடவுள் நமக்களித்த வரம்’ என்று நினைப்பவர்கள், அந்த அசாத்திய திறமையையே தெய்வமாக பார்க்கத்தான் செய்வார்கள்… இது அவர்களை மேன்மையடையச் செய்யும் பண்பு மேகலா….  ஜேசுதாஸ், தெய்வீக குணங்கள் கொண்டவர். அவருடைய திறமை, எத்தனை பேரை மெய் மறக்கச்...