ஆளுமை - பாகம் 2
மேகலா : கிருஷ்ணா…., அமெரிக்க அதிபர் ‘ஜான்சன்’ என்பவர், ‘two at a time’ என்ற அர்த்தத்தில்…., ‘நடந்தா பேச்சு வராது, பேசிக் கொண்டே நடக்கத் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார். இதை எங்க அப்பா, ‘கப்பு’னு புடிச்சிக்கிட்டாரு. நாங்க ஏதாவது, இந்த மாதிரி situation-ல மாட்டிக்கிட்டு இருந்தோம்னா…, இந்த பழமொழியைச் சொல்லி, ‘கபகப’ன்னு சிரிப்பாரு… எங்களுக்கு, ‘அமெரிக்க அதிபர்’, அப்பாவோட அதிரடி சிரிப்புலேயே அரண்டு போயிருவோம்…. சொல்ல வந்ததை மறந்தும் போயிருவோம்… கிருஷ்ணர் : Oh! உங்க யாருக்கும், அமெரிக்க அதிபரைப் பற்றித் தெரியாது… இது ஒரு மாதிரியான தகவல் dominating-காக இருக்கே… மேகலா : கிருஷ்ணா…., பொய்யான தகவல்கள் அவரிடம் இருக்கவே இருக்காது கிருஷ்ணா… நண்பர்களுக்கு மத்தியிலும், உறவினர்கள், தன் சொந்தப் பிள்ளைகள், அதிகாரிகள் என்று, யார் முன்னிலையிலும், ‘பேசுபவரும்’, தகவல் பரிமாற்றமெல்லாம் கிடையாது. தகவல்களைச் சொல்பவரும் அவர் மட்டுமே…, அவர் மட்டுமே கிருஷ்ணா…. இத்தனைக்கும், ‘தினமணி’ தினசரிப் பத்திரிக்கை மட்டும் தான் வாசிப்பார்…. பின் நாட்களில், ‘துக்ளக்’ வாரப் பத்திரிக்கையும், அரசியல் செய்திகளு...